Ads 468x60px

Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Monday, March 4, 2013

வெங்காய வியாபாரி


ஹாய்!

நான் படித்து ரசித்த ஒரு பகுதியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
************************************************************************************************************
பதவி : கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை...!

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.

தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.
‘ஈ மெயிலா? எனகக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லயா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.

வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பன. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.

இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்பதன் சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார். 

வியாபாரி, ‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க,

‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…?’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.

‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைததுக் கொண்டிருப்பேன்’ என்றார் வியாபாரி.!

************************************************************************************************************
எங்க அம்மாகூட கம்ப்யூட்டர் பத்தி ஒன்னும் தெரியலயேன்னு கஷ்டபடுவாங்க...நல்ல வேலை அவங்களுக்கு தெரியாததே!! தெரிஞ்சிருந்தா நல்ல சாப்பாடு கிடைக்காம போயிருக்கும்!!

அன்புடன் 
சமீரா...
இன்னும் நடக்க... "வெங்காய வியாபாரி"

Thursday, February 14, 2013

அன்பிற்கு ஒரு தினம்!!

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்!!

ஆமா! நாடு இருக்கற நிலையில இது ஒண்ணுதான் குறைச்சல்ன்னு நீங்க சொல்றது எனக்கு நல்லா கேட்குது!! கொஞ்சம் ரிலாக்ஸ் பணிக்கலாம்னு தான்!!

பார்ட்டி வச்சி ரோஜா பூ கொடுத்து கொண்டாடறாங்களே அது உண்மையில காதலர் தினமே இல்லைங்க!! பரஸ்பர அன்பு விட்டுகொடுத்தல் ஒருத்தரை ஒருத்தர் மதிச்சி நடந்துக்கற (மிதிச்சி நடந்துக்கற) கணவான்களும் மனைவிகளும் கூட காதலர் தினத்த கொண்டாடலாம். சொல்லபோன திருமணத்துக்கு அப்புறம் வர்றதுதான் பாராட்டப்படவேண்டிய, போற்றபடவேண்டிய காதல்!!   

அதனால திருமணமானவங்க தங்களோட துணைகளுக்கு, பெண்ணாக இருந்தால் கணவர்களுக்கு  ஒரு கிரீடிங் கார்டும், ஆண்கள் மனைவிகளுக்கு தங்களின் கிரெடிட் கார்டுகளையும் (கிரெடிட் கார்டு இல்லன்னா என்ன பண்றதா? டெபிட் கார்டு கொடுங்க) இன்றைய தினத்தில் கொடுத்து ஆனந்த கடலில் ஆழ்த்துங்க...


இப்போ ஒரு அழகான கவிதை தொகுப்பை உங்களோட பகிர்ந்துகொள்கிறேன்...

என் மீது எவ்வளவு 
பிரியம் வைத்திருக்கிறாய்
என்றேன் 
கடலை பார்த்துக்கொண்டே...

ஒரு புருவ உயர்த்தலில்
வானத்தை காட்டினாய்
அப்போது!!
(அடடா....)

எனக்கு பிடித்த 
எல்லா பாடல்களையும் 
உன் ஐ-பாடல் வைத்திருக்கிறாய்!

என்னை உனக்கு பிடிக்குமா 
என்பதை மட்டும் இன்னும் 
ஐயப்பாட்டிலேயே  
வைத்திருக்கிறாய்!
(பாவம் பையன்.. இளையராஜா, AR ரகுமான் பாடல்கள் எல்லோருக்குமே பிடிக்கும்)

கோவில் தூணருகே 
உன் தந்தையோடு நின்று 
கொண்டிருந்தாய்..
யாரோ போல் நடக்கும் 
எனக்கு வழிவிட்டு 
ஒதுங்கி நிற்கும் 
அவருக்கு தெரியாது 
உன்னை கடப்பது ஒன்றும் 
அவ்வளவு எளிதல்ல 
என்பது!
(அகலவாக்கில வளந்துடங்களோ!!)

நாம் சுற்றியலைந்த 
சாலைகளில்
நம் பிள்ளைகளோடு
மீண்டும் பயணிக்க 
வேண்டும்...
நம் காதலுக்கு சாட்சியாய் நின்ற 
மரங்களும், சாலைகளும்
நம் காதலின் சாட்சிகளை 
பார்க்கட்டுமே!!  
 (ஐயோ.. இப்பவே பசங்களுக்கு ட்ரைனிங்-கா??) 

எப்போது புதிய அலைபேசி 
வாங்கினாலும் 
உன்னை முதலில் அழைத்து 
விடுகிறேன் ....

உன் பெயரையே 
முதலில் எழுதி பார்க்கிறது 
புதுப் பேனா!

வாழ்க்கை தொழிலில் கடவுள் 
எனக்கு போட்ட 
"முதல்" நீ!
(ஐயோ பாவம்? - வங்கிகள்!)

நீ என்னை காதலிக்கிறாயா 
என்ற கேள்விக்கான 
விடையை
எத்தனையாவது மலையைத் 
தாண்டி 
எந்தக் கடலுக்கடியில் 
எந்த கிளியின் இறக்கையில் 
வைத்திருக்கிறாய்!
(தெலுங்குப் பட பழைய டைரக்டரை அணுகவும்)

மணியோசையோடு நம்மை 
கடக்கிறது
தீயணைப்பு வண்டி..
உள்ளிருக்கும் நீர் தளும்பி 
கொஞ்சமாய் நனைக்கிறது
உன்னை!
தீ மெல்ல பற்றுகிறது 
என்னை!!
(இதுக்கு பூ(வை)அணைப்பு வண்டி தான் வரணும்) 

இத்தனை நாட்களாக 
காதலித்துக் கொண்டிருக்கிறோம் 
இன்னமும் என்ன 
புதிதாய் கொஞ்சல் என்கிறாய்..

அதே நாசி 
அதே காற்று
நொடிக்கு நொடி புதிதாய் 
சுவாசிப்பதில்லையா!
(வாவ்!! எக்ஸ்செல்லன்ட் - இனிமே யாராவது சலிச்சிக்குவீங்க??)

நீ 
காட்டி கொடுத்து விடுவாயோ 
என பயந்து பயந்து 
வெற்றுத்தாளை மடக்கி
உன் முன்னே போட்டேன்!

எடுத்துப் பிரித்து 
உதடு பிதுக்கி 
ஒன்றுமில்லையென நீ 
சிரித்த நொடியில்
பூத்தது தான் 
நம் காதல்! 
(மாவீரன்...)

கடற்கரை ஈர மணலில் 
நம் பாதங்களை பதித்து 
அதைச் சுற்றிலும் நீ வைத்த
சங்குகளில் ஒன்றை 
பத்திரமாக எடுத்து 
வைத்திருக்கிறேன் 
நம் பிள்ளைக்கு பாலூட்ட!
(வாழ்க தன்னம்பிக்கை)

என்னதான் நான் கொஞ்சம்(?) கிண்டல் பண்ணி இருந்தாலும், கவிதை பார்த்தா பயந்து ஓடற என்னையும் இத்தொகுப்பு கவர்ந்ததென்பத்தில் ஐயமில்லை!! 

இந்த கவிதைகள் அனைத்தும் சமீபத்தில் புத்தக கண்காட்சியில் வெளியிடப்பட்ட நர்சிம் எழுதிய "உன்னை அழைத்துப் போக வந்தேன்" என்ற கவிதை தொகுப்பு நூலில் இருந்து உறுவப்பட்டவை!

வெளியிட்டோர்: பட்டாம்பூச்சி பதிப்பகம் 
முகவரி: 28/A , கிருஷ்ணன் கோயில் தெரு, திருநகர்,
ஆழ்வார்திருநகர், சென்னை - 600037.
கைபேசி: 9841003366 
விலை: ரூ. 40
மின்னஞ்சல்: pattampoochi2008@gmai.com 

ஒரு அழகான தன் காதல் அனுபவத்தை பற்றி நம்ம மூத்த பதிவர் எழுதியதை இங்க படிங்க!! அனுபவம் புதுமை........................

நன்றி : தினமலர் -வாரமலர் 

அன்புடன், 
சமீரா..

இன்னும் நடக்க... "அன்பிற்கு ஒரு தினம்!!"

Wednesday, January 2, 2013

படித்ததில் பிடித்தது!! - பாவப்பட்ட (உழைப்பாளர்) நாய்கள்!!


இனிய காலை பொழுதில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி!!

காலைல உங்க எல்லாருக்கும் ஒரு குட்டி கதை சொல்லலாம்னு வந்தேன். என்னடா பாட்டி ஆகிட்டன்னு நினைக்க வேண்டாம். இது நம்ம சமுதாயம் பத்தினது. அதாங்க உழைப்பாளர் சமுதாயம் பத்தினது; அதான் இவ்ளோ அவரசமா பகிர்ந்துகொள்கிறேன். படிங்க! முடிஞ்சா கொஞ்சம் சிரிங்க; உடம்புக்கு ரொம்ப நல்லது. உங்க உடம்புக்கு தான்!!

ஒரு நாய் கடைக்கு வந்துச்சு...!

கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு... என்னடா பெரிய தொல்லையாபோச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு...

கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில்நாய் கழுத்தில் மாட்டிவிட்டார்... நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது..

கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்..

அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது.. அப்போது ரெட் சிக்னல்.. அந்த நாய் ரோட்'டை கடக்காமல்நின்றது...

பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது...

கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை... அது பின்னாலே அதன் வீடு செல்ல முடிவெடுத்தார். ..

அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது..

ஒரு குறுப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய் பேருந்தில் ஏறியது..

கண்டக்டரும் நாய் வாயில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு டிக்கெட் கொடுத்தார்..

இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்து இறங்கியது...

கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்...

நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன் நின்று கதவை தட்டியது...

கதவு திறந்து ஒரு ஆள் வந்தார்...

நாயின் கழுத்தில் உள்ள பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்....



கடைக்காரர் ஓடி சென்று : நிறுத்துங்க?? ஏன் அடிக்கறீங்க?? அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு, சிக்னல்மதிச்சு, பஸ்ல டிக்கெட் எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே ...???


அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீடு சாவிய எடுத்துட்டு போகாம வந்து கதவ தட்டுது பாருங்க.. நாய்க்கு கொஞ்சம் கூடபொறுப்பே இல்லன்னு....

நீதி: நமக்கு மேல உள்ள முதலாளிங்க, மேனேஜர் எல்லாரும் இப்படி தான்.. நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும்உனக்கு நல்ல பெயரே கிடைக்காது....


என்ன நண்பர்களே கதை பிடித்தா?? இல்லை என் காதை பிடிக்க ஓடிவரீங்களா?..... அப்போ அடுத்து ஒரு பேய் கதையுடன் வருவேன்....

அன்புடன் 
சமீரா 

இன்னும் நடக்க... "படித்ததில் பிடித்தது!! - பாவப்பட்ட (உழைப்பாளர்) நாய்கள்!!"

Friday, December 28, 2012

தமிழகம்- 2012 டாப் 10 சம்பவங்கள் - வீடு திரும்பல் பதிவு



வெகு நாட்களுக்கு பிறகு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்!!


இந்த ஆண்டில் தமிழகத்தில் நடந்த முக்கிய அல்லது குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை வீடுதிரும்பளுக்காக எழுதியுள்ளேன். இன்று வீடுதிரும்பலில் வெளியாகி உள்ளது. இந்த வாய்ப்பினை அளித்த மோகன் குமார் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!!!

பின்வரும் பதிவு இன்று வீடுதிரும்பலில் வெளியாகி உள்ளது.


 அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


கடந்த ஆண்டில் தமிழகத்தில் நிகழ்ந்த சில குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை அசைபோடுவதே இப்பதிவு!!


நல்லதும் சங்கடங்களும் நிறைந்த பத்து நிகழ்ச்சிகளை உங்களுடன் பகிர்கிறேன்.

1. கூடங்குளம் சார்ந்த நிகழ்வுகள் - இந்த அணுவுலை ஆரம்பிக்கப்பட்டபோது அதைப்பற்றி அறிந்தவர் மிக குறைவு. இப்போது அதற்கு எதிர்ப்பு வந்த பிறகு தெரியாதவர்கள் மிக மிக குறைவு. உச்சநீதி மன்றம் தனி நபருக்கு தீங்கு ஏற்பட்டாலும் அதை தொடர்ந்து செயலாற்றுதல் கூடாது என கூறியும், இன்னும் மூடப்படாத கூடங்குளம் அணுவுலை மக்களுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தல் தான்...! இவ்வளவு எதிர்ப்புக்கு பின்னும் அங்கு பணி தொடர்வது நம் அரசியலைப்பு சட்டம் ஒரு விசித்திரமானது என விளங்க வைக்கிறது! 

2. காவிரி நதி நீர் - காவிரி உற்பத்தியாவது மட்டுமே கர்நாடகம். அது பாய்ந்து வளம் கொழிப்பது தமிழ்நாட்டில். அணைபோட்டு தடுக்கும் உரிமையை யார் கர்நாடகத்திற்கு கொடுத்தது எனபது மட்டும் விளங்கவில்லை. காவிரி நதிநீர் ஆணையம், உச்சநீதி மன்ற தீர்ப்பையும் மீறி நடக்கும் தைரியமும் ஒரு தனி மாநிலத்திற்கு இருப்பது நம் நாட்டின் சட்ட திட்டத்தில் இருக்கும் உறுதி மற்றும் நிலைபாட்டை காட்டுகிறது!!!!!

3. அந்நிய முதலீடிற்கு ஆதரவு தரும் நம் மாநில கட்சிகள். இருநூறு ஆண்டுகள் நாம் அடிமை பட்டது போதாது இன்னும் சில நூறு ஆண்டுகளாவது பிறர் பிடியில் நாம் இருக்க வேண்டும் என நினைக்கும் அற்ப மனிதர்களின் சூழ்ச்சிகள்.. வால்மார்ட் அதிகார பூர்வமாக அறிவிக்கும் முன்பே சில இடங்களில் அதற்கான விற்பனை கிடங்குகள் தொடங்கப்பட்டு, அதற்கான கார்பரேட் அட்டைகள் வழங்கப்பட்டதற்கு நானும் ஒரு சாட்சி தான்.

4. பள்ளிகளில் நடக்கும் கொள்ளைகள் - கட்டண தொல்லைகள் அனைவரும் அறிந்ததே! சமீப காலத்தில் அனைவரையும் திகிலடைய செய்த ஒரு சம்பவம் பள்ளி பேருந்தின் மோசமான பராமரிப்பு. பிள்ளைகளின் பாதுகாப்பு, பெற்றோர்களின் நேரமின்மை கருதி பள்ளி வாகனங்களில் பெற்றோர் அனுப்புகின்றனர். ஆனால் அதற்கும் இப்போது பயப்படும் நிலையை ஏற்படுத்தியது: பள்ளி மாணவி பேருந்து ஓட்டையில் விழுந்து உரிழந்த சம்பவம்! மாணவியின் பெற்றோர் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரையும் உலுக்கிய துயர சம்பவம் அது. இதற்கு காரணம் பள்ளி நிர்வாகமா? உரிமம் அளித்த RTO அலுவலகமா? தெரியவில்லை !

5. ஒரு பள்ளி மாணவன் தன ஆசிரியையை கத்தியால் குத்தி கொலை செய்த நிகழ்ச்சி பள்ளியில் நிகழ்ந்த இன்னொரு கொடுமை ! அவன் இந்த வழியை கையாண்டதற்கு சொல்லும் காரணம், அச்சமயம் அவன் பார்த்த ஒரு இந்தி படத்தில் இப்படி ஒரு காட்சி இருந்ததாம். அவனும் அதையே பின்பற்றினானாம் ! உண்மையில் அவனை தூண்டியது அவனுள் இருந்த ஆசிரியரின் மேலான காழ்ப் புணர்ச்சியா? சினிமாவின் தாக்கமா? பெற்றோரின் அரவணைப்பின்மையா? அல்லது ஆசிரியரின் அணுகுமுறையா? இதில் எல்லோருக்குமே பங்கு உண்டு என்றே தோன்றுகிறது. என்று தீருமோ இது போன்ற அனர்த்தங்கள்?????


**************************************************************************************************
என்னடா புத்தாண்டில் இப்படி ஒரு சோகமயமான நினைவுகளையே அசை போடவைத்து விட்டதாக எண்ண வேண்டாம். சில நினைவுகள் கசப்பாக இருந்தாலும் அவை பாகற்காய் போன்று பயனுள்ளது. ஒரு விழிபுணர்வுக்கு வழிவகுப்பது. 

நெல்லிக்காய் கடிக்கும் பொது அதன் சுவை முகம் சுளிக்க வைத்தாலும், கடைசியில் தொண்டையை விட்டு இறங்கும் போது இனிக்கவே செய்யும். அதுபோல சில நல்ல தகவல்களை அடுத்த ஐந்தாக தருகிறேன்.

6. TNPSC - எனும் அரசு வேலைவாய்ப்பு முறையில் ஏற்பட்ட மாற்றம் பாராட்டத்தக்கது. கணினி மயமாக்கப்பட்டதால் தற்போது தேர்வு எழுதிய அனைவரும் தாங்களே தங்களின் cut-off எனப்படும் மதிப்பெண் விபரங்களையும், தாங்கள் தேர்வு செய்யப்பட்டதையும் (Ranking) எனப்படும் தகுதி நிலை ஆகியவற்றை தெளிவாக அறியலாம். இதன் மூலம் இடைத்தரகர்களால் நடக்கும் முறைகேடுகள் நடக்க வாய்ப்புகள் கிடைப்பதில்லை. 


7. மேலும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கவுன்செல்லிங் அந்தந்த மாவட்டங்களிலேயே நடைபெற்று, பெண் ஆசிரியர்களின் போக்குவரத்து சிரமங்கள் குறைக்கப்பட்டுள்ளது. அவர்களின் பணி நியமன ஆணையும் அந்தந்த மாவட்டங்குளுக்கு தனி போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டு சென்னையில் வழங்கப்பட்டது.

8. பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை அவர்களின் பெயரில் நேரிடையாக வங்கிகளில் வழியாக வைப்பு நிதியாக கொடுக்கபடுகிறது. மேலும் சத்துணவில் 13 வகையான உணவுகள் சேர்க்கப்படவுள்ளது. சத்துணவு மாணவர்களுக்கு அந்தந்த பள்ளி சீருடைகள் இலவசமான வழங்கபடுகிறது. ஆனாலும் இதெல்லாம் நல்லபடி சரியான முறையில் பயனாளர்களுக்கு சென்றடைய வேண்டும் அது தான் நமது வேண்டுகோள்!!!


9. இந்தியாவிலேயே முன்னோடியாக மாற்று திறனாளி குழந்தைகளுக்கு மாநில ஆதார வள மையம் தமிழ்நாட்டில் மே மாதம் தொடங்கப்பட்டு செயல்பட்டுவருகிறது. மன நலம் குன்றிய குழந்தைகளுக்கான இந்த பள்ளியில் அவர்களின் எதிர்காலத்திற்கு வித்திடும் வகையில் இந்த மையம் செயல்பட்டு வருவது பாராட்டத்தக்கது. இதில் என் நெருங்கிய உறவினர் குழந்தையும் பயன்பெற்றுவருகிறான். 


10. எய்ட்ஸ் விழிபுணர்வுக்கான செஞ்சுருள் விரைவு ரயில் டெல்லி-யில் இருந்து புறப்பட்டு தமிழ்நாட்டில் சென்னையில் முகாமிட்டு கன்னியாகுமரி -யில் தன் விழிப்புணர்வு பயணத்தை நிறைவு செய்தது. எய்ட்ஸ், காசநோய், மலேரியா, பன்றி காய்ச்சல், மகபேறு, குழந்தை நலம் சார்ந்த விழிபுணர்வுகள் மக்கள் மத்தியில் ஏற்படுத்த இளைஞர் தினத்தன்று இந்த முகம் நடைபெற்றது. 


இறுதியில் மிக முக்கிய ஒரு தினத்தை நினைவுகூர்ந்து இந்த பதிவினை நிறைவு செய்கிறேன். ஆகஸ்ட் 26-ம் நாள் சென்னையில் நடைபெற்ற முதல் தமிழ் பதிவர் தினம் இந்த ஆண்டின் மறக்க முடியாத நாள் என்றால் அது மிகையில்லை. பல நட்புகளையும் உறவுகளையும் அறிமுகபடுத்திய அற்புத தினம் அது!!! 


இந்த ஆண்டில் மீண்டும் ஒரு பதிவர் சந்திப்பில் அனைவரையும் சந்திக்கும் ஆவலுடன் விடைபெறுகிறேன்.


நன்றி!!!!

அன்புடன் 
சமீரா
இன்னும் நடக்க... "தமிழகம்- 2012 டாப் 10 சம்பவங்கள் - வீடு திரும்பல் பதிவு"

Saturday, November 17, 2012

நந்தவனம் - அன்புடன் அந்தரங்கம் - 3


ஹாய் வணக்கம்!! 

தீபாவளிக்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி!!

 இந்த வார வாசகர் கடிதம் படிக்க தொடங்கும் போதே எனக்கு சட்டென நினைவுக்கு வந்தது "A Moment to Remember" என்ற கொரியன் படம் தான். 2004-இல்  வெளியான இந்த படத்தில் கதையாக்கபட்ட கரு தான் இப்போது நான் எழுதும்  வாசகரின் கடிதமும்!! படம் பார்த்த போது இப்படியெல்லாம் கூட மறதி சாத்தியமா என நினைத்தேன்; இந்த கடிதம் படித்ததும் தான்  முழுமையாக நம்பிக்கை  வந்தது. இதே போல ஒரு ஆங்கில திரைப்படம் கூட வந்துள்ளது.

இப்போது வாசகர் கதை சுருக்கத்தை பார்போம்:- (22/02/2009  - வாரமலர் இதழில் வெளியானது)

58 வயதை கடக்கும் ஒரு முதிய பெண்மணி, கணவர், நான்கு மகன்கள் மருமகள்கள் பேரபிள்ளைகள் என எந்த குறையும் இல்லாமல் வாழ்பவர். அவருக்கு சமீபகாலமாக மறதியால் அவதி படுகிறார். சர்க்கரை நோயாளியான அவர் மறதி சகஜம் என நினைத்துள்ளார். நாட்கள் ஆக ஆக மறதியின் அளவு அதிகரித்துள்ளது.. தன் வீட்டிற்கான வழி முகவரி மறக்கும் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதுமட்டும் இல்லாமல் தன் கணவர் மகன்கள், வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கை மறக்கும் அளவிற்கு வந்துள்ளது. 

தினமும் படிக்கும் பைபிள் வரிகளில் உள்ள நினைவு, தான் காலை என்ன சாப்பிட்டோம் என்பதில் இல்லை. பள்ளி ஆசிரியாராக இருந்து ஒய்வு பெற்றவர் இந்த பெண்மணி. தன் மறதியை போக்க, சமாளிக்க அனு அம்மாவிடன் ஆலோசனை கேட்டுள்ளார்.

இனி அனு அம்மாவின் பதில் கடிதத்தை பார்போம் :-

அன்பு சகோதரிக்கு,

வயதாகும் போது நினைவாற்றல் குறைவதும் மூளையின் வேலைப்பாடுகள் செயலிழப்பதும் இயற்கை தான். அதுவும் சர்க்கரை நோயின் பக்க விளைவு என்று தான் சொல்ல வேண்டும்.

இன்றைக்கும் கூட செய்தித்தாள்களில் பார்த்தால் பல முதியவர்கள் காணோம் என்று விளம்பரங்கள் கொடுத்திருப்பர். அநேகமாக இவர்கள் மறதி நோயின் தாக்கத்தினாலும் குடும்பத்தினரின் கவனிப்பின்மையாலும் தான் வெளியேறி இருக்க வேண்டும்.

நல்ல வேலையாக உங்கள் மீது அன்பை பொழிய கூடிய மகன்களும் மருமகள்களும், பேரபிள்ளைகளும் இருகின்றனர். உங்களுக்காக கவலைப்பட்டு, கண்ணீர் உகுக்கும் கணவரும் இருக்கிறார்.

நீங்கள் செய்ய வேண்டியவை எல்லாம் இது தான்.

தினமும் டைரி எழுதப் பழகுங்கள். குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை, குழந்தைகளின் விளையாட்டை நண்பர்களின் வருகையை சுவைபட எழுதுங்கள்.

உங்களின் பேரக்குழந்தைகளுக்கு பைபிளிலிருந்து அல்லது பைபிளின் போதனைகளை அடிப்படையாக வைத்துக் கதைகளை சொல்லுங்கள். உதாரணதுக்கு, அப்பம் பெருகுவது, இயேசுவின் பிரியாவிடை பிரசங்கம், பிலாத்துவின் முன்னிலையில் இயேசு பட்ட அடிகள், அவர் சீடர்களுக்கு காட்சி அளித்தல், இவைகளை எல்லாம் சுவாரஸ்யம் சேர்த்து குழந்தைகளின் மனதில் பதியும் படி செய்யுங்கள்.

பின் அவர்களுக்கு எதாவது சந்தேகமிருந்தால், கேட்கச் சொல்லுங்கள். (சந்தேகம் தெளிதல் - குழந்தைகளுக்காக மட்டுமல்ல; உங்களின் நினைவாற்றலுக்காகவும் தான்.)

வழக்கமாய் தெரிந்த தமிழ், ஆங்கில மொழிகளை தவிர புதிதாய் எதாவது மொழி கற்றுக் கொள்ள முயற்சியுங்களேன். இந்தி, பிரெஞ்சு.. எதாவது முன்னே பின்னே அறிமுகம் இல்லாத மொழியாக இருப்பின் நல்லது.

எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது "எனக்கு நியாபக மறதி, சர்க்கரை வியாதி வேற.. மருமகள் சமைக்கின்றனர்; நான் சமையலறை உள்ளேயே போவதில்லை... என்ற நினைப்பை உதறுங்கள். தினமும் சமயலறையில் உங்கள் கை பக்குவமும் இருக்கட்டும்.

பெண்களுக்கு சமையலறை பெரிய வரப்ரசாதம், அடுப்பில் சட்டியை வைத்துவிட்டு, எண்ணையை ஊற்றி, அது காயிந்துப் புகை வருவதற்குள் சுறுசுறுப்பாய், அடுக்கடுக்காய் மளிகைச் சாமான்களை எடுப்பதே உடம்புக்கும், மூளைக்கும் நல்ல வேலை தான்... சரியா?

இது உங்களுக்காக, உங்கள் கணவருக்கும் மட்டும்;  

குடும்ப ஆல்பம் இருவருக்குமாய் சேர்ந்து தயாரியுங்கள். உங்கள் திருமணத்திலிருந்து, கடைசி பேரக்குழந்தை வரையில்...

உணவு பழக்கத்தை காலையில் நாலே நாலு பாதம் பருப்பு - காபி, தேநீருக்கு முன். முட்டை, மீன் (பொரிக்காமல்) நிறைய சாப்பிடலாம். காரட், முள்ளங்கி, கீரை வகைகள் இதெல்லாம், ஆப்பிள், கொய்யா, சாத்துக்குடி என தினமும் எதாவது ஒன்றும் சாப்பிடுங்கள்.

இது எச்சரிக்கை... தங்க  நகைகளை கழற்றி பத்திரமாய் கணவரிடமோ, மருமகள்களிடமோ கொடுத்து விடுங்கள். கழுத்தில் சின்னதாய் ஒரு கயிற்றில் உங்கள் வீட்டு விலாசம் எழுதிய கார்டு இருக்கட்டும்.

இதெல்லாம் உங்களின் மறதி வளராமல் தடுக்கும்.

******************************************************************************************* 
இந்த வார பதிவு நிறைவடைகிறது.மீண்டும் சந்திக்கிறேன்...

அன்புடன் 
சமீரா
இன்னும் நடக்க... "நந்தவனம் - அன்புடன் அந்தரங்கம் - 3"

Saturday, November 10, 2012

நந்தவனம்: அன்புடன் அந்தரங்கம்-2


ஹாய் வணக்கம்!!!

சென்ற வார பதிவு படிக்க இங்கே கிளக் செய்யுங்கள்!

தன் கல்லூரி மற்றும் இளவயதில் செய்த தவறினை மறக்க அனு அம்மாவிடம் ஆலோசனை  கேட்ட நடுத்தர வயதை தாண்டிய ஒரு பெண்மணியின் கடிதத்தை இன்று பார்போம்:-

வாசகரின் கடித சுருக்கம்:(15-09-2009- அன்று வாரமலரில்  வெளியானது)

கல்லூரி நாட்களின் அவருக்கும் ஒரு காதல்(?) மலர்ந்துள்ளது. பிறகு  சொந்த தமக்கையின் கணவரு
டனும், வேலைபார்த்த இடத்தில் நட்பாக கிடைத்த ஒரு நபருடனும் மேலும் எதிர் வீட்டில் நட்பை காட்டிய ஒருதனுடன் அந்த பெண்மணி தன்னையே ஒப்புவித்து இருக்கிறார். பின் இந்த நான்கு பேருடனான தொடர்பு ஒவ்வொரு சந்தர்பத்தில் அறுந்து இருக்கிறது. 


இந்த நிலையில் அவரின் உடன்பிறந்தோர் ஒரு வரனை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர். தற்போது (2009) அவருக்கு இரண்டு பள்ளிபருவ
த்தை கடக்கும் முத்தான குழந்தைகள், அன்பு மழையில் நனைய வைக்கும் கணவர்; பெற்றோர் போல அன்பை கொடுக்கும் மாமனார் மாமியார் இருகின்றனர்.

அவருக்கு இதுவே ஒரு உறுத்தல் ஆகிவிட்டது. இப்படிப்பட்ட கணவனுக்கு தான் தகுதி அற்றவள் என்ற எண்ணம் வந்துவிட்டது. இதன் காரணமாக தன் கணவனையும் அவர் பெற்றவர்களையும் நன்கு கவனித்துகொ
ள்கிறார். இருந்தாலும் அவரின் கடந்த கால உறுத்தலில் இருந்து தப்ப முடியவில்லை. இதற்காக அனு அம்மாவிடம் அவர் யோசனை கேட்டு எழுதி இருக்கிறார்.


அனு அம்மாவின் பதில் கடிதம்:

அன்புள்ள மகளுக்கு உன் கடிதம் கிடைத்தது. ஏதோ ஒருவருடன் அறியா பருவத்தில் தவறி இருக்கலாம். வளர்ந்து வேலைக்கு போகும் வயதில் ஒருவருக்கு நால்வரிடம் உன்னை இழந்து விட்டாய். ஆனாலும் உனக்கு நல்ல குழந்தை கணவர் மாமியார் மாமனார் கிடைதிருக்கின்றனர் என்றால் உண்மையில் கடவுளுக்கு உன் மீது கருணை தான்.

ஆனால் இதயம் என்பது நீ நினைப்பது போல கரும்பலகை அல்ல, முதலில் எழுதியவைகளை அடியோடு அழிபதற்க்கு! 

கொஞ்சம் யோசித்து பார், இப்போது நீ செய்த குற்றம் உன்னை அறுகிறது என்றால் காரணம் என்ன? எதிர்பாராத விதமாக உன் வாழ்க்கை சொர்க்கமாக அமைந்துவிட்டதால் தானே!

இதுவே உன் கணவர் பொல்லாதவராய் இருந்து அடியும் உதையுமாய் வாழ்க்கை நரகமாகி இருந்திருந்தால் பழைய வாழ்க்கை உறுத்தாது. மாறாக மேலும் மேலும் கண்ட சகதியில் விழுந்து, இது தான் சுகம் என்று நினைக்க தோன்றும். நான் செய்வது குற்றமே இல்லை; கடவுள் இப்படி ஒரு புருஷனை கொடுத்துவிட்டால் நான் என்ன செய்வது என எதிர் குரல் கொடுத்திருப்பாய்.

அதிக அன்பும் ஒரு சிறை தான். பாசத்தில் சிக்குண்டு "ஐயோ, இத்தகைய உத்தமருக்கு துரோகம் செய்துவிட்டோமே"... என்று உன்னை நீயே அலசி, உள்ளத் தூய்மைக்கு  ஏங்குகிறாய் பார்... இது தான் கடவுள் உனக்கு அளித்துள்ள தண்டனை!

பிராயசித்தம் என்று எதை நீ செய்தாலும் உன் குற்ற உணர்வு மறையபோவதில்லை.மாறாக உன் கணவனுடனும் அவரை சார்ந்தவர்களிடமும் உள்ளத் தூய்மையுடன் நடந்து கொள். 

ஏதோ நடந்தவை எல்லாம் திருமணதிற்கு முன்பே நடந்து விட்டதே! இனி கணவருக்காக மட்டும் நான் என்று வாழ்த்து வருகிறாயே... அதற்கு கடவுளிடம் நன்றி சொல். 

இதையே நினைத்து கொண்டிருக்காதே; நல்ல விஷயங்களில் மனதை செலுத்து. முடிந்தால், உனக்கு தெரிந்த திருமண வயதில் இருக்கும் பெண்களுக்கு வரன் தேடித் தா.  உன்னைப்போல வேறு ஒரு பெண்ணுக்கும் இதுபோன்ற விபத்து வாய்க்காமல்  இருக்க உதவும். இலவச திருமண மையம் வேண்டுமானாலும் நடத்து. இதெல்லாம் உன் ஆத்மா திருப்திக்காக தான். "ஆஹா! நாமக்கும் இதெல்லாம் செய்கிறோம் என ஒருநாளும் கர்வபடாதே!" 



கல்யாணம் ஆகி பிள்ளை பெறுவதுடன் ஒரு பெண்ணின் வாழ்கை பூரணமடைந்து விடுவதில்லை. எஞ்சிய நாட்களை நல்ல எண்ணத்துடனும் வலிய போய் உதவுவதிலும், மற்ற
வரின் மன ரணத்தை ஆற்றுவதிலும் நிறைவு பெற முடியும்.

யார் வந்த பாதையை திரும்பி பார்கிறார்களோ அவர்களை கடவுள் ஒருநாளும் கைவிடுவதில்லை. வாழ்த்துக்கள்!!

இத்துடன் இந்த வார பகுதி நிறைவடைகிறது.

*****************************************************************

இளமையில் தவறுதல் ஏற்படுவது 
சில நேரங்களில் சகஜம் தான். ஆனால் அதை ஒரு கசப்பான அனுபவமாக கொண்டு, பிற்காலத்தில் சமயோசித புத்தியுடன் நடந்து கொள்ள வேண்டும். "சூடு கண்ட பூனை அடுபண்டை செல்லாது" என்பது பழமொழி.. இது எக்காலத்திற்கும் பொருந்தும்!!

நட்பு எ
ன்பது புனிதமான உணர்வு. அது மன கவலைகளையும் ரணங்களைகும் ஆற்றும் அரு மருந்து.. அதை சரியான முறையில் சாப்பிட்டால் குணமாகும், முறை தவறி உட்கொண்டால் அதுவே நஞ்சாகும்!!! நஞ்சாக்குவதும், நலமாக்குவதும் நம்மிடம் தான் உள்ளது!!

மீண்டும் ஒரு புது பதிவுடன் அடுத்தவாரம் சந்திக்கிறேன். நன்றி!!!


அனைவருக்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!



அன்புடன்
சமீரா.
இன்னும் நடக்க... "நந்தவனம்: அன்புடன் அந்தரங்கம்-2 "

Saturday, November 3, 2012

நந்தவனம்: அன்புடன் அந்தரங்கம் - 1


ஹாய் வணக்கம் !

உங்களை இந்த தொடர் மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். எழுத்தாளர் அனுராதா ரமணனின் சமூக அக்கறை மற்றும் அவரின் வழிகாட்டுதல் பற்றி பால கணேஷ் சார் இந்த பதிவில் குறிபிட்டுள்ளார். சென்ற வாரம் நான் குறிப்பிட்டதை போல அவர் வாரமலரில் தொடர்ந்து எழுதிய பகுதி அன்புடன் அந்தரங்கம்! அப்பகுதியை வார  வாரம் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி!!

************************************************************

வாசகரின் கடித சுருக்கம்:(28-12-2008- அன்று வாரமலரில்  வெளியானது)

நெய்வேலியை சேர்ந்த 33 வயதுள்ள இஞ்சினியர் சென்னையை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர் மனைவி பிரசவத்திற்காக தன் பாட்டி வீடான சென்னைக்கு வந்துள்ளார். பெண் குழந்தை பிறந்து பல மாதங்கள் ஆகியும் நெய்வேலி திரும்பவில்லை. அவளின் தாயார்,  அவள் சிறு வயதாக இருக்கும் போதே கணவரிடமிருந்து பிரிந்து அவளின் தாத்தா பாட்டியுடன் இருப்பவர். இந்த பிரிவால் அவர் ஹிஸ்டீரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவளின் ஒரு சித்தியும் திருமணம் செய்துகொள்ளாமலே உள்ளார்.

இந்த நிலையில் அவளின் பாட்டி, தன் பேத்தி மற்றும் அவளின் மகளையும் கணவனுடன் சேர்ந்து வாழவிடாமல் தன்னுடனேயே வைத்திருக்க முயற்சி செய்துள்ளார். ஒரு முறை கணவன் மனைவியை பார்க்க வந்து செல்லும் போது பாட்டி இடையில் புகுந்து கலகம் செய்ய, கோவத்தில் தன் மனைவியை அடித்துவிடுகிறார். இதையே காரணமாக வைத்து, விவாகரத்து வழக்கு தொடரபடுகிறது... இதில் கணவனுக்கு சிறிதும் விருப்பம் இல்லை. மனைவியோ பாட்டி சொல்கேட்டு ஆடுகிறாள். இந்நிலையில் அந்த கணவன் அனு அம்மாவிடம் ஆலோசனை கேட்டுள்ளார். அவரின் அறிவுரை, ஆலோசனை பின்வருமாறு:-

அனு அம்மாவின் பதில்(வார்த்தை மாறாமல் உங்களுக்காக): 

அன்புள்ள மகனுக்கு,

"தன் பேத்தியின் எதிர்காலத்தை பாட்டியே சீர்குலைப்பது கண்டு வருத்தபடுகிறேன்.
எனகென்னவோ உன் மாமியாரை கூட இப்படித்தான் எதையாவது சொல்லி அவர் மாப்பிள்ளையிடமிருந்து பிரிந்திருப்பார் என்று  தோன்றுகிறது. என்னதான் அம்மா பேச்சை கேட்டு, கணவனை பகைத்துக்கொண்டு இருந்தாலும், உன் மாமியாருக்கு உள்ளூர ஒரு குற்ற உணர்வு இருக்கவேண்டும்; அதனால் தான் ஹிஸ்டீரியா நோய் தாக்கி உள்ளது.

அதுமட்டும் அல்ல உன் மாமியாரின் தங்கை திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதற்கு தன் தாயாரின் மனபோக்கும் காரணமாக இருக்கலாம்.

நீ உன் மனைவியை அவளின் பிறந்த வீட்டிற்க்கு சென்று பார்க்காதே; அவளின் அலுவலகம் சென்று பார்த்து கொஞ்சம் கனிவோடு பேசு. அன்றைக்கு அவளை அடித்தது கூட அடிக்கவேண்டும் என்று எண்ணமில்லை; பாட்டியின் குறுக்கீட்டால் வந்த ஆத்திரம்; என்ன செய்வது... வயதில் பெரியவரை அடிக்க முடியுமா?  அதனால் தான் அப்படி... என விளக்கமாகச் சொல்.

விவாகரத்தில் உனக்கு இஷ்டமில்லை என்பதையும், அவள் மீதும் குழந்தை மீதும் நீ உயிரையே வைத்திருப்பதாக அவளிடம் புரியும்படி சொல். உன் அம்மா மாதிரி நீயும் வீட்டுக்குள் அடைந்து கிடந்தது மன நோயாளி ஆகாதே! அப்புறம் நம் மகளுக்கும் அந்த நிலை தொடரும்.. இது தேவையா.. என அன்பொழுக கேள்!

அல்வாவும் பூவும் வாங்கி கொண்டு உன் மனைவி பிறந்த வீட்டில் நாற்காலியில் நடுக்கூடத்தில் உட்கார்ந்தால், வார்டன் போல பாட்டி எதையாவது சொல்லி விரட்டி தான் அடிப்பார். அவருக்கு என்னவோ தான் பெற்ற பிள்ளைகளையும் பேத்தியையும் அவரவர் கணவர்களுடன் கூட பகிர்ந்துகொள்ள முடியாதபடி ஏதோ ஒரு அவஸ்தை. விடு.

நீ காதல் செய்! என்ன அதிர்ச்சியாக உள்ளதா? உன் மனைவியை தான்!  ஆனாலும், திருட்டுத்தனமாய் ஆபீசிலும், கோவிலிலும், கடற்கரையிலும் சந்தித்து உங்கள் இருவரிடையேயும் காதலை வளர்த்து கொள்.

திருமணமான முதல் வருடமே வயிற்றில் குழந்தையுடன் அவள் தாய் வீட்டிற்க்கு வந்து விட்டாள். உன்னை பற்றியும் உன் அன்பை பற்றியும் தெரிந்து கொள்ள அவளுக்கு எங்கே நேரம்? மனைவியானாலும் திருட்டுத்தனமாய் சந்தித்து பேசுவதில் சுகம் கண்டிப்பாக உண்டு.

கணவனின் அன்பான வார்த்தைகளும் கனிவான பார்வையும் வேண்டாம் என சொல்கின்ற பெண்களே கிடையாது.

முதலில் உன் மனைவியின் மனதில் இடம் பிடித்து விட்டால், மகளின் பாசத்தை பெறுவது பெரிய விஷயமில்லை. குழந்தையும் தெய்வமும்  கொண்டாடுகின்றவரின் மடியில் வந்து உட்காரும்..

உன் மனைவியின் வாயாலேயே வக்கீல் நோட்டீஸ்-சை திரும்பப் பெறச் செய்யச் செய்வது உன் சமார்த்தியத்தில் தான் இருக்கிறது."

கண்டிப்பாய் வெற்றி பெறுவாய்!  என் வாழ்த்துக்கள்!!

***********************************************************

இந்த வார கட்டுரை நிறைவடைகிறது. சுய புத்தியுடன் உண்மையான அன்பை புரிந்து கொண்டால் வாழ்வில் துன்பம் என்பது இல்லை...

அடுத்தவாரம் மீண்டும் சந்திக்கிறேன். நன்றி!!!

அன்புடன்
சமீரா

இன்னும் நடக்க... "நந்தவனம்: அன்புடன் அந்தரங்கம் - 1"

Saturday, October 27, 2012

நந்தவனம்!!!


ஹாய்! ஹலோ! வணக்கம்!!

உங்களையெல்லாம் சந்தித்து வெகு நாள்கள் ஆகிறது. என் புதிய நந்தவனத்தில் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி!!! நதியோரம் பூக்களை காணோமே என்று என் குரு கேட்டு விட்டார். சிஷ்யை இதோ கிளம்பிவிட்டேன்!! இனி வார வாரம் ஆரவாரமின்றி என் புதிய நந்தவனத்தில் பல வண்ண பூக்கள் பூக்க இருந்கின்றன என்பதை மகிழ்வோடு தெரிவித்துகொள்கிறேன்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! - தமிழ் ராஜா

தமிழ் தொட்டிலில் தவழும் குழந்தை திரு தமிழ் ராஜா-விற்கு இன்று பிறந்த நாள். இந்நாளில் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து கொள்கிறேன்..அவர் வாழ்வில் மேலும் மேலும் பல வெற்றிகளை தனதாக்கி கொள்ள இறைவனை வேண்டுகிறேன்!!!


படித்ததில் பிடித்தது!!

இந்த தலைப்பில் நான் படித்த புத்தகங்களைப்  பற்றி எழுதவேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு ஆசை.. இதோ இனி வாரம் வாரம் எழுத தொடங்கலாம் என நினைக்கிறேன். 
அனுராதா ரமணன் - அறிவுரைகள்!!

அன்புடன் அந்தரங்கம் என்ற தலைப்பில் அனு அம்மா பல வருடங்கள் தொடர்ச்சியாக, தினமலர் நாளிதழின் ஞாயிறு இணைப்பு புத்தகமான வாரமலரில் எழுதி இருக்கிறார். அவர் எழுதியவரை நான் இடைவிடாத வாசகி அந்த பகுதிக்கு! அவருக்கு பின் அந்த பகுதி எனக்கு  ரசிக்கவில்லை. 



வாசகர்கள் தங்களின் அந்தரங்க குடும்ப பிரச்சினைகளுக்கு அனு அம்மாவிடம் தீர்வு கேட்டு கடிதம் எழுதுவார்கள். அதற்கு அவர் அளிக்கும் பதில்கள், அறிவுரைகள் எல்லாம் என்னை வியப்பில் ஆழ்த்தும். அவற்றையே இங்கு பதிவாக ஒவ்வொரு சனிக்கிழமையும் எழுத விழைகிறேன். நம்மில் கேட்
க தயங்கும் பல கேள்விகளை பிறர் கேட்டு அதன் மூலம் ஒரு தீர்வை நாமும் பெறும்போது ஒரு மன நிம்மதி பிறக்கும். ஆகையால் அந்த நிம்மதி ஒருவர்கேனும் கிடைக்கும் எனும் நம்பிக்கையில் எழுத தொடங்குகிறேன் உங்களின் மேலான ஆதாரவுடன்!!!

பால கணேஷ் சார் சொன்ன மாதிரி இனி நன்றி மறக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். அதனால இப்போ எல்லாருக்கும் என் நன்றிகள்! பொறுமையா என் வலைத்தளம் வந்து பதிவினை படித்ததற்கு!!!

அன்புடன்
சமீரா
இன்னும் நடக்க... "நந்தவனம்!!!"

Friday, October 12, 2012

வளர்ச்சியா? நம்பிக்கை துரோகமா??



ஹலோ.. ஹாய்... வணக்கம்!!!

ரொம்ப நாள் ஆகுது உங்கள் எல்லாரையும் சந்திச்சு! என் அருவியில் சாரி அறுவையில் இருந்து தப்பிச்ச உங்கள நிம்மதியா இருக்க விடாம செய்ய இதோ வந்துட்டேன்!!!

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்....என்னடா இவ வந்ததும் வராததுமா முதல் மரியாதை ஸ்டைல்ல பேசறாளேன்னு நீங்க சொல்றது எனக்கு கேட்குது (இதுக்கு பேர் எல்லாருமே சொல்லிட்டாங்க நானும் சொன்ன ரொம்ப மொக்கையாகிடும்)...

ஒரு வாரமா ஒரே பிஸி.. அதுல ஒரு பிஸி என்னோட பாஸ்-மேலதிகாரி (மருதமலை உயர் அதிகாரி மாதிரி) நான் வேலைசெய்யும்(!) நிறுவனத்தின் தலைமை கிளையில் இருந்து தாவி வந்து இருந்தார். சில மாதங்களுக்கு முன் புதிதாக பொறுப்பேற்றதும் தன் பருப்பினை சாரி பொறுப்பினை காட்ட அவரின் டீம்-ஆனா என்னையும் என் கிளையையும் பார்த்து அலவளாவ (அறுக்க) ஒரு நடை போட்டார். நானும் ஒரு போருக்கு போகும் மாவிரனை(பெண்பால் தெரிலைங்கோ) போல அவரை எதிர் கொள்ள தயாராக இருந்தேன்.

அப்போது எங்களுக்குள் நடந்த ஒரு சிறு மீட்டிங்(??!) (காலை 9.30 முதல் மாலை 4.30 வரை) நடந்ததில் என்னை நெருடிய ஒரு நிகழ்ச்சியை பற்றி தான் பெரியவர்கள் ஆகிய உங்களிடம் கருத்து கேட்க வந்துள்ளேன். 



சில டிராவல் கம்பனியிடம் இருந்து quote வாங்கி இருந்தோம் அதில் ஏற்கனவே வாடிக்கையான டிராவல் கம்பனியும் ஒன்று. நாங்கள் அவர்களின் விலை பட்டியல் அனைத்தையும் சேர்த்து எங்களின் வேறு கிளை நகரத்தில் உள்ள டிராவல்ஸ் பட்டியலுடன் ஒப்பிட்டு ஒரு அட்டவணை செய்து அதை வந்தவர்களிடம் (தனி தனி நேரத்தில்) வெளிப்படையாக கொடுத்தோம். நான் சேகரித்த டிராவல் கம்பெனியில் ஒன்று, நாங்கள் ஏற்கனவே தொழில் கொடுக்கும் டிராவல்(exitng vendor) கம்பனில் வேலை செய்து வெளியேறியவர் தொடங்கியது. முன்பே எனக்கு அறிமுகம் ஆதலால் என்னிடம் வந்து முறைப்படி ஒரு quote கொடுத்து பரிசீலிக்கும் படி கேட்டுக்கொண்டார். நானும் அதை மற்ற விலைபட்டியலுடன் சேர்த்து நகல் எடுத்து மே.ஆ.-யிடம் கொடுத்து இருந்தேன்.

இந்த பட்டியலில் குறிப்பிட்ட அந்த புதிய டிராவல்(நியூ vendor ) கம்பெனியை யார் என்று கண்டு கொண்ட, பழைய டிராவல் (exitng vendor) ஆள் மே.ஆ.-யிடம், இவன் என்னிடம் வேலை செய்து வெளியேறியவன் இப்போது தனியே டிராவல் கம்பெனி தொடங்கிவிட்டான் என குறிப்பிட.. உடனே என் மே.ஆ. சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் ஆகி தீர்ப்பு சொல்லிவிட்டார்.. அது பின் வருமாறு:-

"
ஒரு கம்பெனியில் வேலை செய்து வெளியேறியதும் இல்லாமல், அந்த கம்பெனிக்கு தொழில் கொடுப்பவரிடமே வந்து தன் கைவரிசையை கட்டியுள்ளான் அவன்.. இது கண்டிக்க தக்கது, ஒரு முறையற்ற செயல்! எனவே அவனது quote தள்ளுபடி செய்யப்படுகிறது. உப்பை தின்றவன் துரோகம் நினைக்கலாமா? இது குரு துரோகம் அல்லவா??" - இந்த ரேஞ்சு-கு பேசி ரிஜெக்ட் பண்ணிட்டார். எனக்கு செம கடுப்பு அந்த மே.ஆ. மீது. மேலும் அவருடன் விவாதிக்க விரும்பாமல் விட்டு விட்டேன்.

இப்போ என்னோட சந்தேகம் இது தான் - இந்த உண்மை தான் எனக்கு தெரிஞ்சாகனும்:-
1 .
தொழில் பயின்ற இடத்தை விட்டு வெளிவருவது குற்றமா?
2 .
அப்படி வெளியே வரும் நபர் சுயமாக ஒரு பயின்ற தொழிலை தொடங்குவது ஒரு கண்ணியமற்ற செயலா?
3 .
தான் வேலை பார்த்த நிறுவனத்துக்கு போட்டியாக வருவது நம்பிக்கை துரோகமா?
4 .
அப்படியானால், நாட்டில் ஆரோக்கியமான போட்டிக்கு அடிக்காரணம் நம்பிக்கை துரோகம் தானா?
5 .
இப்படி ஒருவரின் திறமை வெளிப்பாட்டை ஒதுக்குவது தான் தர்மமா?
6 .
அப்போ எவனுமே வேலை தெரிஞ்ச தொழிலை தொடங்காமல் வேற தொழில் தான் இறங்கனுமா?
7 . அப்போ வளர்ச்சின்ன என்ன?

என் மேலதிகாரி செய்ததில் எனக்கு உடன்பாடில்லை.. உங்கள் கருத்து எதுவோ சொல்லுங்களேன்....

அன்புடன்
சமீரா..

இன்னும் நடக்க... "வளர்ச்சியா? நம்பிக்கை துரோகமா??"