Ads 468x60px

Friday, September 21, 2012

தங்கம்! ஒரு தக தக தகவல்!!


அன்பானவர்களுக்கு!!

ஒரு பொன்னான தலைப்புடன் சந்திப்பதாக சொல்லி சென்றேன்.  ஒரு பூவான தலைப்புடன் மலர்ந்து மீண்டும் இதோ ஒரு தங்கமான தலைப்புடன்  வந்திருக்கிறேன்.


பெண்களின் முகத்தில் உடனடி புன்னகையை வரவழைக்க கணவான்கள் (தனவான்கள்) செய்யவேண்டியது; ஒரு பொன்னால் ஆனா அன்பளிப்பை தங்கள் இல்லாளுக்கு கொடுப்பது, உள்ளுக்குள் கோபம் கொப்பளிதாலும், வெளியே புன்னைகையாகவே வழிந்தோடும். இது காலம் காலமாக பின்பற்றப்படும் நமக்கே உரிய ஒரு சிறப்பு. பூதத்திற்கு பயபடாத பெண்ணிருக்கலாம்; பொன்னிற்கு மயங்காத பெண்ணே இல்லை எனலாம்.

ஒரே சிரிப்பு தான்!
ஆவல் குறைந்த பெண்கள் உண்டு (என்னை போல(?)), மற்றபடி ஆசை இல்லாத பெண்கள் மிக குறைவு.. ஓகே.. நான் சொல்ல வந்த செய்தியே மறந்துவிட்டேன்..


1930 -2012 வரை தங்கத்தின் விலை குறித்து ஒரு பார்வை. 1930 -இல் ஒரு சவரன் (8 கிராம்) ஆபரண தங்கம் ரூ.14 .50 விற்கு விற்பனை ஆனது இன்று ரூ. 25000 /- விற்பனை ஆகிறது. இது 1724 மடங்கு அதிகம். சென்ற வருடம் ரூ. 17000 விற்பனை ஆகிய ஒரு சவரன் இந்த வருடம் ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது. இப்படியே சென்று கொண்டிருந்தாலும் நகை வாங்குவோர் இந்தியாவில் தான் மிக அதிகமாம். சும்மாவா சொன்னங்க, "பொன்னுல இல்ல மண்ணுல போடுன்னு" - பொன்னில் போட்டாலும் அது வாங்கிய பொது உள்ள மதிப்பைவிட, சில காலம் கழித்து விற்பனை செய்யும் போது பலமடங்கு லாபம் தரும்; மண்ணில் போட்டால் அது அதைவிட லாபம் தரும்.. இதைதான் நாம் பெரியவங்க இப்படி சொல்லிட்டு போய் இருக்காங்க . அவர்களுக்கு அப்போதே நிச்சயம் போல "பொன் விலையும், (பொன் விளையும்) மண்விலையும் ஆகாயத்தை எட்டும் என்று!!

 எனக்கு தெரிந்த ஒரு நண்பர் ஒரு பெரிய நகை கடையில் மாதம் தோறும் தவணை முறை நகைசேமிப்பு திட்டத்தின் கீழ் பணம் கட்டி வருகிறார். இதில் லாபம் என்னவென்றால், அவர் கட்டிய பணத்திற்கு உண்டான தங்கம்(கிராமில்) ஒவ்வொரு மாதமும் அவரின் சேமிப்பு கணக்கில் வைக்கப்படும். பின் வருட இறுதியில் கணக்கு முடிக்கும் போது மொத்த கிராமிற்கு உண்டான நகையோ அல்லது தங்க காசோ அவர் பெற்றுகொள்வாராம்.. இதன் மூலம் நம் சேமிப்பு தொடங்கும் போது நகை விலை குறைவு என வைத்துக்கொண்டால், வருட இறுதியில் கிராம் விலை எவ்வளவு உயர்ந்தாலும் நம் முந்தைய மாதத்திற்கு உண்டான நம் கணக்கில் உள்ள தங்கத்தின்  அளவில் எந்த குறைவும் வராது..

கோல்டன் டைம் இது தானா!!
 உத: முதல் மாதம் ரூ. 5000 -திற்கு ஒன்றரை கிராம் தங்கம் கணக்கில் சேர்கிறது.. வருட இறுதியில் விலை உயர்ந்து அதே ரூ. 5000 -திற்கு ஒன்றேகால் கிராம் தங்கம் மட்டுமே வந்தாலும் முதல் மாதம் சேர்த்த கிராம் அப்படியே நமக்கு வரும். இப்படிப்பட்ட நகை திட்டங்களும் உள்ளன.
உங்களுக்காக கடந்த 82 வருடங்களில் தங்கத்தின் விலை (சவரனில்)..




எங்க அம்மா அடிகடி சொல்வாங்க (கொல்வாங்க), அவங்க(!) அம்மாக்கு அவங்க(!) அம்மவீட்ல, தங்க கொலுசு, தங்கதுலையே வாலி (இது காதுல போடற வாலிங்க-அப்புறம் கிணறுல போடறதுன்னு நினைச்சிட போரிங்க) இதெல்லாம் போடறேன்னு சொன்னதுக்கு: எங்க பாட்டி சொன்னாங்களாம் ஒரே மஞ்சளா இருக்கும் எனக்கு வேண்டாம் வெள்ளிதான் வேணும்னு அடம் பண்ணி வாங்கிநாங்கலாம்: இத எங்க அம்மா சொல்ற போதெல்லாம் எனக்கு கொலைவெறி வரும்..ஆனால் ஹ்மம்ம்ம்மம்ம்ம்ம் இது தான் முடியும்...
எங்க கிளம்பிடீங்க? தங்கம் வாங்கவா??? ஓகே ஓகே..

பி.கு: சென்ற பதிவில் விடுபட்ட அவள் விகடன் பக்கங்களை காண இங்கு கிளிக்குங்கள்..


அன்புடன்,
சமீரா

  
இன்னும் நடக்க... "தங்கம்! ஒரு தக தக தகவல்!!"

Saturday, September 15, 2012

வலைபூவரசி!


நம் ரஞ்சனி நாராயணன் அம்மா பற்றி இந்த வார அவள் விகடனில் வெளிவந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.. மேலும் மேலும் அவர்களின் பதிவுகள் சிறக்க வேண்டிக்கொள்வோம்...

Elysium - xmas flower
வாழ்த்துக்கள் ரஞ்சனி அம்மா





மூத்த தமிழ் பதிவருக்கு பாராட்டு!
தமிழ் வலைபதிவுலகில் மூத்த பதிவர் திருமதி காமாட்சி அம்மா-வை பற்றியும் அவள் விகடனில் வெளிவந்துள்ளது.. அவரை பற்றியும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்...
Purple Blaze - modern flowers
வாழ்த்துக்கள் காமாட்சி அம்மா









































































அன்புடன்
சமீரா......
இன்னும் நடக்க... " வலைபூவரசி!"

Wednesday, September 12, 2012

தனிமையும் தவிப்பும்!!!

தனிமை- இதை முன்னிறுத்தி எழுதாத கவிர்களோ  இலக்கியவாதிகளோ இருக்கவே முடியாது எனலாம்.. தனிமையில் கற்பனை, கவிதை, கட்டுரை, நாடகம் மட்டும் தான் வருமா? தனிமை நோயைகூட வரவழைக்கும்.. அது நோயின் உச்ச நிலையைக்கூட அடையச்செய்யும். ஆம், தனிமையில் உள்ளபோது வரும் உடல் உபாதைகளால் சில நேரங்களில் மரணம் கூட மிகச்சாதாரணமாக நிகழும்..

நான் தனிமையை பற்றி எழுத வரவில்லை, தனிமையில் இருக்கும் போது வரும் உச்சநிலையை கையாளுவதற்கான உத்திகளை பற்றி பகிர வருகின்றேன்...
இதோ தனிமையிலோ அல்லது வெளியிலோ யாரும் உதவ முடியாத சுழலில் உள்ளபோது நம்மை ஆட்கொள்ளும் (ஆட்கொல்லும்) மாரடைப்பை சமாளிக்க சில வழிமுறைகள்:-

அலுவலக பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு வந்து தனியாக இருக்கிறீர்கள், அலுவலகத்தில் ஏற்பட்ட வேலைப்பளு டென்ஷன் காரணமாக மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது. நீங்கள் படபடப்பாகவும் தோய்வாகவும் உள்ளீர்கள். திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலியை உணர்கிறீர்கள். அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணர்கிறீர்கள், உங்கள் வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு உங்களால் தனியாக பயணிக்க இயலாது...  தாறுமாறாக துடிக்கும் உங்கள் இதயத்தால், சுயநினைவை இழக்க வெறும் 10 -நொடிகள் தான் இருக்கிறது.

நீங்கள் செய்ய வேண்டியது : தொடர்ச்சியாக மிகவும் ஆக்ரோஷமாக இரும வேண்டும். ஒவ்வொடு முறையும் இருமுவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும். இதயம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரையிலோ அல்லது மற்றொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமிக்கொண்டே இருக்க வேண்டும்.

 
மூச்சை இழுத்து விடுவதனால் நுரையீரலுக்கு ஆக்ஸிஜன் சீராக செல்ல வழிவகுக்கும். இருமுவதால் இதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்த ஓட்டம் சீரடையும். இருமுவதால் ஏற்படும் அதிர்வால் இதயம் சீராக துடிக்கும். சீரானதும் உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று விட வேண்டும்.. இதை நினைவில் வைத்துக்கொண்டால் தனியே செல்லும் போதும் சற்று தைரியமாக செல்லலாம்.

 நன்றி: தினத்தந்தி  
ஸ்ஸ்ஸ்ஸ்..அப்பாடா!!!  பதிவு எழுதி முடிப்பதற்குள் நான் பலமுறை இரும வேண்டியதாக போயிற்று!!! மாரடைப்பு - கொடுமையான வியாதி தான் (ஹிஹிஹி - நான் தலை வலி வந்தாகூட இப்படி தான் சொல்வேன்).

மீண்டும் ஒரு பொன்னான தலைப்புடன் சந்திக்கிறேன்!

அன்புடன்
சமீரா.
இன்னும் நடக்க... " தனிமையும் தவிப்பும்!!!"