Ads 468x60px

Saturday, November 3, 2012

நந்தவனம்: அன்புடன் அந்தரங்கம் - 1


ஹாய் வணக்கம் !

உங்களை இந்த தொடர் மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். எழுத்தாளர் அனுராதா ரமணனின் சமூக அக்கறை மற்றும் அவரின் வழிகாட்டுதல் பற்றி பால கணேஷ் சார் இந்த பதிவில் குறிபிட்டுள்ளார். சென்ற வாரம் நான் குறிப்பிட்டதை போல அவர் வாரமலரில் தொடர்ந்து எழுதிய பகுதி அன்புடன் அந்தரங்கம்! அப்பகுதியை வார  வாரம் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி!!

************************************************************

வாசகரின் கடித சுருக்கம்:(28-12-2008- அன்று வாரமலரில்  வெளியானது)

நெய்வேலியை சேர்ந்த 33 வயதுள்ள இஞ்சினியர் சென்னையை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர் மனைவி பிரசவத்திற்காக தன் பாட்டி வீடான சென்னைக்கு வந்துள்ளார். பெண் குழந்தை பிறந்து பல மாதங்கள் ஆகியும் நெய்வேலி திரும்பவில்லை. அவளின் தாயார்,  அவள் சிறு வயதாக இருக்கும் போதே கணவரிடமிருந்து பிரிந்து அவளின் தாத்தா பாட்டியுடன் இருப்பவர். இந்த பிரிவால் அவர் ஹிஸ்டீரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவளின் ஒரு சித்தியும் திருமணம் செய்துகொள்ளாமலே உள்ளார்.

இந்த நிலையில் அவளின் பாட்டி, தன் பேத்தி மற்றும் அவளின் மகளையும் கணவனுடன் சேர்ந்து வாழவிடாமல் தன்னுடனேயே வைத்திருக்க முயற்சி செய்துள்ளார். ஒரு முறை கணவன் மனைவியை பார்க்க வந்து செல்லும் போது பாட்டி இடையில் புகுந்து கலகம் செய்ய, கோவத்தில் தன் மனைவியை அடித்துவிடுகிறார். இதையே காரணமாக வைத்து, விவாகரத்து வழக்கு தொடரபடுகிறது... இதில் கணவனுக்கு சிறிதும் விருப்பம் இல்லை. மனைவியோ பாட்டி சொல்கேட்டு ஆடுகிறாள். இந்நிலையில் அந்த கணவன் அனு அம்மாவிடம் ஆலோசனை கேட்டுள்ளார். அவரின் அறிவுரை, ஆலோசனை பின்வருமாறு:-

அனு அம்மாவின் பதில்(வார்த்தை மாறாமல் உங்களுக்காக): 

அன்புள்ள மகனுக்கு,

"தன் பேத்தியின் எதிர்காலத்தை பாட்டியே சீர்குலைப்பது கண்டு வருத்தபடுகிறேன்.
எனகென்னவோ உன் மாமியாரை கூட இப்படித்தான் எதையாவது சொல்லி அவர் மாப்பிள்ளையிடமிருந்து பிரிந்திருப்பார் என்று  தோன்றுகிறது. என்னதான் அம்மா பேச்சை கேட்டு, கணவனை பகைத்துக்கொண்டு இருந்தாலும், உன் மாமியாருக்கு உள்ளூர ஒரு குற்ற உணர்வு இருக்கவேண்டும்; அதனால் தான் ஹிஸ்டீரியா நோய் தாக்கி உள்ளது.

அதுமட்டும் அல்ல உன் மாமியாரின் தங்கை திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதற்கு தன் தாயாரின் மனபோக்கும் காரணமாக இருக்கலாம்.

நீ உன் மனைவியை அவளின் பிறந்த வீட்டிற்க்கு சென்று பார்க்காதே; அவளின் அலுவலகம் சென்று பார்த்து கொஞ்சம் கனிவோடு பேசு. அன்றைக்கு அவளை அடித்தது கூட அடிக்கவேண்டும் என்று எண்ணமில்லை; பாட்டியின் குறுக்கீட்டால் வந்த ஆத்திரம்; என்ன செய்வது... வயதில் பெரியவரை அடிக்க முடியுமா?  அதனால் தான் அப்படி... என விளக்கமாகச் சொல்.

விவாகரத்தில் உனக்கு இஷ்டமில்லை என்பதையும், அவள் மீதும் குழந்தை மீதும் நீ உயிரையே வைத்திருப்பதாக அவளிடம் புரியும்படி சொல். உன் அம்மா மாதிரி நீயும் வீட்டுக்குள் அடைந்து கிடந்தது மன நோயாளி ஆகாதே! அப்புறம் நம் மகளுக்கும் அந்த நிலை தொடரும்.. இது தேவையா.. என அன்பொழுக கேள்!

அல்வாவும் பூவும் வாங்கி கொண்டு உன் மனைவி பிறந்த வீட்டில் நாற்காலியில் நடுக்கூடத்தில் உட்கார்ந்தால், வார்டன் போல பாட்டி எதையாவது சொல்லி விரட்டி தான் அடிப்பார். அவருக்கு என்னவோ தான் பெற்ற பிள்ளைகளையும் பேத்தியையும் அவரவர் கணவர்களுடன் கூட பகிர்ந்துகொள்ள முடியாதபடி ஏதோ ஒரு அவஸ்தை. விடு.

நீ காதல் செய்! என்ன அதிர்ச்சியாக உள்ளதா? உன் மனைவியை தான்!  ஆனாலும், திருட்டுத்தனமாய் ஆபீசிலும், கோவிலிலும், கடற்கரையிலும் சந்தித்து உங்கள் இருவரிடையேயும் காதலை வளர்த்து கொள்.

திருமணமான முதல் வருடமே வயிற்றில் குழந்தையுடன் அவள் தாய் வீட்டிற்க்கு வந்து விட்டாள். உன்னை பற்றியும் உன் அன்பை பற்றியும் தெரிந்து கொள்ள அவளுக்கு எங்கே நேரம்? மனைவியானாலும் திருட்டுத்தனமாய் சந்தித்து பேசுவதில் சுகம் கண்டிப்பாக உண்டு.

கணவனின் அன்பான வார்த்தைகளும் கனிவான பார்வையும் வேண்டாம் என சொல்கின்ற பெண்களே கிடையாது.

முதலில் உன் மனைவியின் மனதில் இடம் பிடித்து விட்டால், மகளின் பாசத்தை பெறுவது பெரிய விஷயமில்லை. குழந்தையும் தெய்வமும்  கொண்டாடுகின்றவரின் மடியில் வந்து உட்காரும்..

உன் மனைவியின் வாயாலேயே வக்கீல் நோட்டீஸ்-சை திரும்பப் பெறச் செய்யச் செய்வது உன் சமார்த்தியத்தில் தான் இருக்கிறது."

கண்டிப்பாய் வெற்றி பெறுவாய்!  என் வாழ்த்துக்கள்!!

***********************************************************

இந்த வார கட்டுரை நிறைவடைகிறது. சுய புத்தியுடன் உண்மையான அன்பை புரிந்து கொண்டால் வாழ்வில் துன்பம் என்பது இல்லை...

அடுத்தவாரம் மீண்டும் சந்திக்கிறேன். நன்றி!!!

அன்புடன்
சமீரா

20 comments:

 1. /// நீ காதல் செய்! என்ன அதிர்ச்சியாக உள்ளதா? உன் மனைவியை தான்! ///

  இது ஒன்று போதுமே...

  நல்லதொரு கருத்துடன் முடித்துள்ளது சிறப்பு...

  நன்றி...
  tm1

  ReplyDelete
  Replies
  1. படித்து ரசித்ததற்கு மிக்க நன்றி சார்...

   Delete
 2. அனுராதா ரமணன் அவர்களின் இக்கட்டுரையின் சில பகுதிகளைப் படித்திருக்கிறேன். இப்போது உங்கள் தளத்தில் இங்கே படிக்க முடியும் என்பதில் மகிழ்ச்சி. தொடரட்டும் பகிர்வுகள்.

  ReplyDelete
  Replies
  1. உங்களின் போன்றோரின் ஊக்கம் தான் என்னை மேலும் மேலும் எழுத தூண்டுகிறது.. வருகைக்கு நன்றி சார்...

   Delete
 3. அன்புள்ள மகனுக்கு என்று வாஞ்சையாக அழைப்பதிலிருந்து எளிய. நடைமுறையில் சிரமமில்லாது செய்யக் கூடிய தீர்வைக் கூறி பிரச்னையைத் தீர்ப்பது என்பது வரை அனும்மாவுக்கு நிகர் அவர்தான். நான் எழுதிய பதிவின் சுட்டியை இங்கே பகிர்ந்து எனக்கு மகிழ்வு தந்த சமீராவுக்கு ஸ்பெஷல் நன்றி.

  ReplyDelete
  Replies
  1. சார் உண்மையில் உங்கள் பதிவை பார்த்து தான் இப்படி ஒரு எண்ணம் எனக்கு வந்ததே! அதற்கு நான் தான் நன்றி சொல்லவேண்டும்.. நீங்களெல்லாம் எனக்கு ஒரு வழிகாட்டி..

   Delete
 4. well said, good advoice....bala.Dubai.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மிக்க நன்றி சார்

   Delete
 5. தேவையான பகிர்வுதான் எல்லோராலும் படிக்க இயலாது புத்தகத்தில் அதை வலையில் பதிவு செய்த சமீராவுக்கு பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. சரளா அக்கா! ரொம்ப நன்றி!!

   Delete
 6. ஹாய் சமீரா...
  சூப்பர்! இவங்க குடுக்கர ஆலோசனைகள் வித்யாசமானதா இருக்கு! தொடர்ந்து எழுதுங்கள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சுடர்!! நான் இந்த பகுதிக்காகவே சண்டே எப்ப வரும்னு காத்திருப்பேன்!!

   Delete
 7. அன்பு சமீரா!
  காலத்திற்கேற்ற நல்ல பகிர்வு. நாமே நம் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முயலுவதைவிட, மூன்றாமவர் மூலம் - அதுவும் திருமதி அனுராதா போன்ற ஒருவரின் உதவியைப் பெற்று - தீர்ப்பது மிகவும் உத்தமம்.
  எளிய வழியை மிகத் தெளிவாக கூறியிருக்கிறார்.

  பகிர்ந்து கொண்ட உனக்கு பாராட்டுகள், வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி அம்மா!! மனம் விட்டு நம்பிக்கைக்கு உரியவரிடம் பேசினாலே பிரச்சனை தீர்ந்து விடும்...

   Delete
 8. சுய புத்தியுடன் உண்மையான அன்பை புரிந்து கொண்டால் வாழ்வில் துன்பம் என்பது இல்லை...

  சிறப்பான ஆலோசனைகள் தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சசி அக்கா!! கண்டிப்பாக தொடர்கிறேன்...

   Delete
 9. முதலில் வாழ்த்துக்கள்.வெற்றிகரமாக நந்தவனத்தில், சொன்னது போல் அனு அம்மாவின் ஆலோசனையை பதிவிட்டு விட்டீர்கள் .

  இது மென்மேலும் தொடர வேண்டும். அடுத்து படித்ததில் பிடித்தது எதிர்ப்பார்க்கலாமா...?

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராஜா!! படித்ததில் பிடித்தது சீக்கிரத்தில் எதிர்பார்க்கலாம்...

   Delete
 10. Replies
  1. வருகைக்கு மிக்க நன்றி சார்...

   Delete