Ads 468x60px

Saturday, November 10, 2012

நந்தவனம்: அன்புடன் அந்தரங்கம்-2


ஹாய் வணக்கம்!!!

சென்ற வார பதிவு படிக்க இங்கே கிளக் செய்யுங்கள்!

தன் கல்லூரி மற்றும் இளவயதில் செய்த தவறினை மறக்க அனு அம்மாவிடம் ஆலோசனை  கேட்ட நடுத்தர வயதை தாண்டிய ஒரு பெண்மணியின் கடிதத்தை இன்று பார்போம்:-

வாசகரின் கடித சுருக்கம்:(15-09-2009- அன்று வாரமலரில்  வெளியானது)

கல்லூரி நாட்களின் அவருக்கும் ஒரு காதல்(?) மலர்ந்துள்ளது. பிறகு  சொந்த தமக்கையின் கணவரு
டனும், வேலைபார்த்த இடத்தில் நட்பாக கிடைத்த ஒரு நபருடனும் மேலும் எதிர் வீட்டில் நட்பை காட்டிய ஒருதனுடன் அந்த பெண்மணி தன்னையே ஒப்புவித்து இருக்கிறார். பின் இந்த நான்கு பேருடனான தொடர்பு ஒவ்வொரு சந்தர்பத்தில் அறுந்து இருக்கிறது. 


இந்த நிலையில் அவரின் உடன்பிறந்தோர் ஒரு வரனை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர். தற்போது (2009) அவருக்கு இரண்டு பள்ளிபருவ
த்தை கடக்கும் முத்தான குழந்தைகள், அன்பு மழையில் நனைய வைக்கும் கணவர்; பெற்றோர் போல அன்பை கொடுக்கும் மாமனார் மாமியார் இருகின்றனர்.

அவருக்கு இதுவே ஒரு உறுத்தல் ஆகிவிட்டது. இப்படிப்பட்ட கணவனுக்கு தான் தகுதி அற்றவள் என்ற எண்ணம் வந்துவிட்டது. இதன் காரணமாக தன் கணவனையும் அவர் பெற்றவர்களையும் நன்கு கவனித்துகொ
ள்கிறார். இருந்தாலும் அவரின் கடந்த கால உறுத்தலில் இருந்து தப்ப முடியவில்லை. இதற்காக அனு அம்மாவிடம் அவர் யோசனை கேட்டு எழுதி இருக்கிறார்.


அனு அம்மாவின் பதில் கடிதம்:

அன்புள்ள மகளுக்கு உன் கடிதம் கிடைத்தது. ஏதோ ஒருவருடன் அறியா பருவத்தில் தவறி இருக்கலாம். வளர்ந்து வேலைக்கு போகும் வயதில் ஒருவருக்கு நால்வரிடம் உன்னை இழந்து விட்டாய். ஆனாலும் உனக்கு நல்ல குழந்தை கணவர் மாமியார் மாமனார் கிடைதிருக்கின்றனர் என்றால் உண்மையில் கடவுளுக்கு உன் மீது கருணை தான்.

ஆனால் இதயம் என்பது நீ நினைப்பது போல கரும்பலகை அல்ல, முதலில் எழுதியவைகளை அடியோடு அழிபதற்க்கு! 

கொஞ்சம் யோசித்து பார், இப்போது நீ செய்த குற்றம் உன்னை அறுகிறது என்றால் காரணம் என்ன? எதிர்பாராத விதமாக உன் வாழ்க்கை சொர்க்கமாக அமைந்துவிட்டதால் தானே!

இதுவே உன் கணவர் பொல்லாதவராய் இருந்து அடியும் உதையுமாய் வாழ்க்கை நரகமாகி இருந்திருந்தால் பழைய வாழ்க்கை உறுத்தாது. மாறாக மேலும் மேலும் கண்ட சகதியில் விழுந்து, இது தான் சுகம் என்று நினைக்க தோன்றும். நான் செய்வது குற்றமே இல்லை; கடவுள் இப்படி ஒரு புருஷனை கொடுத்துவிட்டால் நான் என்ன செய்வது என எதிர் குரல் கொடுத்திருப்பாய்.

அதிக அன்பும் ஒரு சிறை தான். பாசத்தில் சிக்குண்டு "ஐயோ, இத்தகைய உத்தமருக்கு துரோகம் செய்துவிட்டோமே"... என்று உன்னை நீயே அலசி, உள்ளத் தூய்மைக்கு  ஏங்குகிறாய் பார்... இது தான் கடவுள் உனக்கு அளித்துள்ள தண்டனை!

பிராயசித்தம் என்று எதை நீ செய்தாலும் உன் குற்ற உணர்வு மறையபோவதில்லை.மாறாக உன் கணவனுடனும் அவரை சார்ந்தவர்களிடமும் உள்ளத் தூய்மையுடன் நடந்து கொள். 

ஏதோ நடந்தவை எல்லாம் திருமணதிற்கு முன்பே நடந்து விட்டதே! இனி கணவருக்காக மட்டும் நான் என்று வாழ்த்து வருகிறாயே... அதற்கு கடவுளிடம் நன்றி சொல். 

இதையே நினைத்து கொண்டிருக்காதே; நல்ல விஷயங்களில் மனதை செலுத்து. முடிந்தால், உனக்கு தெரிந்த திருமண வயதில் இருக்கும் பெண்களுக்கு வரன் தேடித் தா.  உன்னைப்போல வேறு ஒரு பெண்ணுக்கும் இதுபோன்ற விபத்து வாய்க்காமல்  இருக்க உதவும். இலவச திருமண மையம் வேண்டுமானாலும் நடத்து. இதெல்லாம் உன் ஆத்மா திருப்திக்காக தான். "ஆஹா! நாமக்கும் இதெல்லாம் செய்கிறோம் என ஒருநாளும் கர்வபடாதே!" கல்யாணம் ஆகி பிள்ளை பெறுவதுடன் ஒரு பெண்ணின் வாழ்கை பூரணமடைந்து விடுவதில்லை. எஞ்சிய நாட்களை நல்ல எண்ணத்துடனும் வலிய போய் உதவுவதிலும், மற்ற
ரின் மன ரணத்தை ஆற்றுவதிலும் நிறைவு பெற முடியும்.

யார் வந்த பாதையை திரும்பி பார்கிறார்களோ அவர்களை கடவுள் ஒருநாளும் கைவிடுவதில்லை. வாழ்த்துக்கள்!!

இத்துடன் இந்த வார பகுதி நிறைவடைகிறது.

*****************************************************************

இளமையில் தவறுதல் ஏற்படுவது 
சில நேரங்களில் சகஜம் தான். ஆனால் அதை ஒரு கசப்பான அனுபவமாக கொண்டு, பிற்காலத்தில் சமயோசித புத்தியுடன் நடந்து கொள்ள வேண்டும். "சூடு கண்ட பூனை அடுபண்டை செல்லாது" என்பது பழமொழி.. இது எக்காலத்திற்கும் பொருந்தும்!!

நட்பு எ
ன்பது புனிதமான உணர்வு. அது மன கவலைகளையும் ரணங்களைகும் ஆற்றும் அரு மருந்து.. அதை சரியான முறையில் சாப்பிட்டால் குணமாகும், முறை தவறி உட்கொண்டால் அதுவே நஞ்சாகும்!!! நஞ்சாக்குவதும், நலமாக்குவதும் நம்மிடம் தான் உள்ளது!!

மீண்டும் ஒரு புது பதிவுடன் அடுத்தவாரம் சந்திக்கிறேன். நன்றி!!!


அனைவருக்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!அன்புடன்
சமீரா.

8 comments:

 1. அன்பும் ஒரு சிறைதான் - உன் கணவரிடம் உள்ள சுத்தியோடு நடந்து கொள். என்ன அழகான வார்த்தைகள்... தெளிவான ஆலோசனை. வியக்க வைக்கிறார் அனும்மா. தேடிப் பகிரும் சமீராவுக்கு நன்றி மற்றும என் இதயம் நிறைந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. நல்ல சிந்தனையை, தீர்வை பதிலாக தந்துள்ளார்...

  நன்றி...
  tm2

  தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள். வெடி வெடிப்பீன்களா?

  ReplyDelete
 4. இனிய தீபாவளி வாழ்த்துகள் சகோதரி! :-)

  ReplyDelete
 5. இந்த பதிவைப் படித்த நினைவிருக்கிறது.அன்றே இதற்கு அனு அம்மாவின் ஆலோசனை வியக்க வைத்தது. மீண்டும் அதை உங்களின் மூலம் படிக்க முடிந்தது. எந்த காலத்திற்கும் தேவையான பகிர்வு தான்.

  ReplyDelete
 6. கடந்த காலத்தை மறக்க அனுராதா சொன்ன யோசனை நன்றாக இருக்கிறது.
  கடந்த காலத்தை எண்ணி, இன்றைய தினத்தை இழக்கக் கூடாது, இல்லையா!
  நல்ல பதிவு சமீரா!

  ReplyDelete