Ads 468x60px

Saturday, October 27, 2012

நந்தவனம்!!!


ஹாய்! ஹலோ! வணக்கம்!!

உங்களையெல்லாம் சந்தித்து வெகு நாள்கள் ஆகிறது. என் புதிய நந்தவனத்தில் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி!!! நதியோரம் பூக்களை காணோமே என்று என் குரு கேட்டு விட்டார். சிஷ்யை இதோ கிளம்பிவிட்டேன்!! இனி வார வாரம் ஆரவாரமின்றி என் புதிய நந்தவனத்தில் பல வண்ண பூக்கள் பூக்க இருந்கின்றன என்பதை மகிழ்வோடு தெரிவித்துகொள்கிறேன்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! - தமிழ் ராஜா

தமிழ் தொட்டிலில் தவழும் குழந்தை திரு தமிழ் ராஜா-விற்கு இன்று பிறந்த நாள். இந்நாளில் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து கொள்கிறேன்..அவர் வாழ்வில் மேலும் மேலும் பல வெற்றிகளை தனதாக்கி கொள்ள இறைவனை வேண்டுகிறேன்!!!


படித்ததில் பிடித்தது!!

இந்த தலைப்பில் நான் படித்த புத்தகங்களைப்  பற்றி எழுதவேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு ஆசை.. இதோ இனி வாரம் வாரம் எழுத தொடங்கலாம் என நினைக்கிறேன். 
அனுராதா ரமணன் - அறிவுரைகள்!!

அன்புடன் அந்தரங்கம் என்ற தலைப்பில் அனு அம்மா பல வருடங்கள் தொடர்ச்சியாக, தினமலர் நாளிதழின் ஞாயிறு இணைப்பு புத்தகமான வாரமலரில் எழுதி இருக்கிறார். அவர் எழுதியவரை நான் இடைவிடாத வாசகி அந்த பகுதிக்கு! அவருக்கு பின் அந்த பகுதி எனக்கு  ரசிக்கவில்லை. வாசகர்கள் தங்களின் அந்தரங்க குடும்ப பிரச்சினைகளுக்கு அனு அம்மாவிடம் தீர்வு கேட்டு கடிதம் எழுதுவார்கள். அதற்கு அவர் அளிக்கும் பதில்கள், அறிவுரைகள் எல்லாம் என்னை வியப்பில் ஆழ்த்தும். அவற்றையே இங்கு பதிவாக ஒவ்வொரு சனிக்கிழமையும் எழுத விழைகிறேன். நம்மில் கேட்
தயங்கும் பல கேள்விகளை பிறர் கேட்டு அதன் மூலம் ஒரு தீர்வை நாமும் பெறும்போது ஒரு மன நிம்மதி பிறக்கும். ஆகையால் அந்த நிம்மதி ஒருவர்கேனும் கிடைக்கும் எனும் நம்பிக்கையில் எழுத தொடங்குகிறேன் உங்களின் மேலான தாரவுடன்!!!

பால கணேஷ் சார் சொன்ன மாதிரி இனி நன்றி மறக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். அதனால இப்போ எல்லாருக்கும் என் நன்றிகள்! பொறுமையா என் வலைத்தளம் வந்து பதிவினை படித்ததற்கு!!!

அன்புடன்
சமீரா
இன்னும் நடக்க... "நந்தவனம்!!!"

Friday, October 12, 2012

வளர்ச்சியா? நம்பிக்கை துரோகமா??ஹலோ.. ஹாய்... வணக்கம்!!!

ரொம்ப நாள் ஆகுது உங்கள் எல்லாரையும் சந்திச்சு! என் அருவியில் சாரி அறுவையில் இருந்து தப்பிச்ச உங்கள நிம்மதியா இருக்க விடாம செய்ய இதோ வந்துட்டேன்!!!

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்....என்னடா இவ வந்ததும் வராததுமா முதல் மரியாதை ஸ்டைல்ல பேசறாளேன்னு நீங்க சொல்றது எனக்கு கேட்குது (இதுக்கு பேர் எல்லாருமே சொல்லிட்டாங்க நானும் சொன்ன ரொம்ப மொக்கையாகிடும்)...

ஒரு வாரமா ஒரே பிஸி.. அதுல ஒரு பிஸி என்னோட பாஸ்-மேலதிகாரி (மருதமலை உயர் அதிகாரி மாதிரி) நான் வேலைசெய்யும்(!) நிறுவனத்தின் தலைமை கிளையில் இருந்து தாவி வந்து இருந்தார். சில மாதங்களுக்கு முன் புதிதாக பொறுப்பேற்றதும் தன் பருப்பினை சாரி பொறுப்பினை காட்ட அவரின் டீம்-ஆனா என்னையும் என் கிளையையும் பார்த்து அலவளாவ (அறுக்க) ஒரு நடை போட்டார். நானும் ஒரு போருக்கு போகும் மாவிரனை(பெண்பால் தெரிலைங்கோ) போல அவரை எதிர் கொள்ள தயாராக இருந்தேன்.

அப்போது எங்களுக்குள் நடந்த ஒரு சிறு மீட்டிங்(??!) (காலை 9.30 முதல் மாலை 4.30 வரை) நடந்ததில் என்னை நெருடிய ஒரு நிகழ்ச்சியை பற்றி தான் பெரியவர்கள் ஆகிய உங்களிடம் கருத்து கேட்க வந்துள்ளேன்சில டிராவல் கம்பனியிடம் இருந்து quote வாங்கி இருந்தோம் அதில் ஏற்கனவே வாடிக்கையான டிராவல் கம்பனியும் ஒன்று. நாங்கள் அவர்களின் விலை பட்டியல் அனைத்தையும் சேர்த்து எங்களின் வேறு கிளை நகரத்தில் உள்ள டிராவல்ஸ் பட்டியலுடன் ஒப்பிட்டு ஒரு அட்டவணை செய்து அதை வந்தவர்களிடம் (தனி தனி நேரத்தில்) வெளிப்படையாக கொடுத்தோம். நான் சேகரித்த டிராவல் கம்பெனியில் ஒன்று, நாங்கள் ஏற்கனவே தொழில் கொடுக்கும் டிராவல்(exitng vendor) கம்பனில் வேலை செய்து வெளியேறியவர் தொடங்கியது. முன்பே எனக்கு அறிமுகம் ஆதலால் என்னிடம் வந்து முறைப்படி ஒரு quote கொடுத்து பரிசீலிக்கும் படி கேட்டுக்கொண்டார். நானும் அதை மற்ற விலைபட்டியலுடன் சேர்த்து நகல் எடுத்து மே..-யிடம் கொடுத்து இருந்தேன்.

இந்த பட்டியலில் குறிப்பிட்ட அந்த புதிய டிராவல்(நியூ vendor ) கம்பெனியை யார் என்று கண்டு கொண்ட, பழைய டிராவல் (exitng vendor) ஆள் மே..-யிடம், இவன் என்னிடம் வேலை செய்து வெளியேறியவன் இப்போது தனியே டிராவல் கம்பெனி தொடங்கிவிட்டான் என குறிப்பிட.. உடனே என் மே.. சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் ஆகி தீர்ப்பு சொல்லிவிட்டார்.. அது பின் வருமாறு:-

"
ஒரு கம்பெனியில் வேலை செய்து வெளியேறியதும் இல்லாமல், அந்த கம்பெனிக்கு தொழில் கொடுப்பவரிடமே வந்து தன் கைவரிசையை கட்டியுள்ளான் அவன்.. இது கண்டிக்க தக்கது, ஒரு முறையற்ற செயல்! எனவே அவனது quote தள்ளுபடி செய்யப்படுகிறது. உப்பை தின்றவன் துரோகம் நினைக்கலாமா? இது குரு துரோகம் அல்லவா??" - இந்த ரேஞ்சு-கு பேசி ரிஜெக்ட் பண்ணிட்டார். எனக்கு செம கடுப்பு அந்த மே.. மீது. மேலும் அவருடன் விவாதிக்க விரும்பாமல் விட்டு விட்டேன்.

இப்போ என்னோட சந்தேகம் இது தான் - இந்த உண்மை தான் எனக்கு தெரிஞ்சாகனும்:-
1 .
தொழில் பயின்ற இடத்தை விட்டு வெளிவருவது குற்றமா?
2 .
அப்படி வெளியே வரும் நபர் சுயமாக ஒரு பயின்ற தொழிலை தொடங்குவது ஒரு கண்ணியமற்ற செயலா?
3 .
தான் வேலை பார்த்த நிறுவனத்துக்கு போட்டியாக வருவது நம்பிக்கை துரோகமா?
4 .
அப்படியானால், நாட்டில் ஆரோக்கியமான போட்டிக்கு அடிக்காரணம் நம்பிக்கை துரோகம் தானா?
5 .
இப்படி ஒருவரின் திறமை வெளிப்பாட்டை ஒதுக்குவது தான் தர்மமா?
6 .
அப்போ எவனுமே வேலை தெரிஞ்ச தொழிலை தொடங்காமல் வேற தொழில் தான் இறங்கனுமா?
7 . அப்போ வளர்ச்சின்ன என்ன?

என் மேலதிகாரி செய்ததில் எனக்கு உடன்பாடில்லை.. உங்கள் கருத்து எதுவோ சொல்லுங்களேன்....

அன்புடன்
சமீரா..

இன்னும் நடக்க... "வளர்ச்சியா? நம்பிக்கை துரோகமா??"

Monday, October 1, 2012

இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர்!!


இவரை பற்றி தெரியாதவர்கள் குறைவு. அடைமொழிகேற்ப அவரின் படைப்புகள் அத்தனையும் சிகரம் தான் (அடைமொழி சிலருக்கு பெயரளவில் மட்டுமே). வெள்ளித்திரையில் இவர் பதித்த தடங்கள் காலத்தால் அழியாதவை. துணிச்சலான கதைகளம் இவரின் அடையாளம்!

வெள்ளித்திரையே இப்படியென்றால் சின்னத்திரை பற்றி சொல்லவேண்டியதே இல்லை. இன்றைய சின்னத்திரை இயக்குனர்கள் இவரிடம் பிச்சை தான் வாங்கவேண்டும் ஒரு கதையை எப்படி சுவாரஸ்யமாகவே முடிப்பது என்ற வித்தையை கற்பதில்!! பலவருடங்கள் இழுத்து வரப்படும் கதைகளுக்கு(?) மத்தியில், சிறு தொடராக இருந்தாலும் சரி நெடும் தொடராக இருந்தாலும் இவரின் கதைகளுக்கு தேவைப்படும் அதிக பட்ச கால அளவு ஒரு சில மாதங்கள் தான்! அதற்குள் தான் சொல்ல வந்ததை செவ்வனே சொல்லி முடிப்பதில் இவர் சிகரம் தான்!!


பெண்களை இழிவாகவும் சூழ்ச்சிகாரியாக, சுயநலவாதியாக காட்டும் மெகா சீரியல்-களுக்கு மத்தியில் இவரின் கதை மாந்தர்கள் முற்றிலும் மாறுபட்டவர்கள்! பெண்களை கருவாக கொண்ட கதைக்களமாக இருபினும், அவர் வெளிபடுத்துவது பெண்களின் வீரம், கருணை, தடைகளை தகர்த்தெறியும் தைரியம், அவர்களின் அணுகுமுறை, நிமிர்வு இவற்றை தான்! எதிரி கூட ஒரு பெண்ணாக இல்லாமல் இருப்பது இவருக்கே உரிய சிறப்பு!

ஒரே பிரச்சனையை கொண்டு போர் அடிக்காமல், பல பல குழப்பங்களையும் அதற்கான தீர்வுகளையும் அழகாக படம் பிடிப்பதில் அவருக்கு நிகர் அவரே!!

அவரின் சின்னத்திரை பிரவேசத்தில் நீண்டதொரு ரசிகை நான்! ரயில் சினேஹம், கையளவு மனசு, காதல் பகடை, சஹானா (சிந்து பைரவி-2), அண்ணி வரிசையில் தற்போது நிறைவடைந்தது "சாந்தி நிலையம்". மருத்துவர்கள் மற்றும் ஒரு மருத்துவ மனையை ஆதாரமாக கொண்டு செல்லும் தொடர் இது.. சென்ற வாரம் ஆரவாரம் இன்றி அழகாக முடிக்கபட்ட கதை! மருத்துவர்களின் மனதினையும் அவர்களுக்குள் இருக்கும் மனபோரட்டம் மற்றும் அவர்களின் சேவை போன்றவற்றை அழகுற இயக்கியுள்ளார் சிகரம்!!

சாந்தி நிலையம்

கதையின் நாயகி திருமதி ரதி (வெள்ளித்திரை நாயகி), அவரின் நடிப்பு திறமை வெள்ளித்திரையில் கூட பார்த்திராத அளவுக்கு இருந்ததது!! நடிக்க வைக்க சிகரதிற்கா தெரியாது!!
தொலைகாட்சி தொல்லைகாட்சி ஆகி வரும் இன்றைய காலகட்டத்தில் பாலச்சந்தர் அவர்களின் இதுபோன்ற நாடகங்கள் வரபிரசாதம் என்றால் மிகையில்லை!! மீண்டும் சின்ன சின்ன  கதைகளுடன் அவர் சின்னத்திரை பிரவேசம் தொடர இருக்கிறது..

மீண்டும் ஆவலுடன் நான்!!!
இன்னும் நடக்க... "இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர்!!"

என் முதல் விருது!!


திரு வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் தங்கை யுவராணிக்கு அளித்த விருதினை எனக்கும் மற்றும் சில நண்பர்களுக்கும் பகிர்ந்துள்ளார். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.. சொல்ல வார்த்தைகள் இல்லை சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை... என் மனம் நிறைந்த நன்றிகளை நிறைக்கின்றேன்!!! சிறிது இடைவெளி எடுக்க நினைத்த என்னை மீண்டும் சிக்க (சுகமான சிக்கல்) வைத்து விட்டது அன்பு தங்கையின் விருது ("Liebster Award"). பரிசுகள் குழந்தைகளை மட்டும் அல்ல பெரியவர்களுக்கும் உற்சாக கடலில் ஆழ்த்தும் என்பதை உணர்வு பூர்வமாக நம்புகிறேன்!!


அன்பின் பகிர்வு
அன்புடன்
சமீரா..
இன்னும் நடக்க... "என் முதல் விருது!!"