Ads 468x60px

Friday, October 12, 2012

வளர்ச்சியா? நம்பிக்கை துரோகமா??ஹலோ.. ஹாய்... வணக்கம்!!!

ரொம்ப நாள் ஆகுது உங்கள் எல்லாரையும் சந்திச்சு! என் அருவியில் சாரி அறுவையில் இருந்து தப்பிச்ச உங்கள நிம்மதியா இருக்க விடாம செய்ய இதோ வந்துட்டேன்!!!

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்....என்னடா இவ வந்ததும் வராததுமா முதல் மரியாதை ஸ்டைல்ல பேசறாளேன்னு நீங்க சொல்றது எனக்கு கேட்குது (இதுக்கு பேர் எல்லாருமே சொல்லிட்டாங்க நானும் சொன்ன ரொம்ப மொக்கையாகிடும்)...

ஒரு வாரமா ஒரே பிஸி.. அதுல ஒரு பிஸி என்னோட பாஸ்-மேலதிகாரி (மருதமலை உயர் அதிகாரி மாதிரி) நான் வேலைசெய்யும்(!) நிறுவனத்தின் தலைமை கிளையில் இருந்து தாவி வந்து இருந்தார். சில மாதங்களுக்கு முன் புதிதாக பொறுப்பேற்றதும் தன் பருப்பினை சாரி பொறுப்பினை காட்ட அவரின் டீம்-ஆனா என்னையும் என் கிளையையும் பார்த்து அலவளாவ (அறுக்க) ஒரு நடை போட்டார். நானும் ஒரு போருக்கு போகும் மாவிரனை(பெண்பால் தெரிலைங்கோ) போல அவரை எதிர் கொள்ள தயாராக இருந்தேன்.

அப்போது எங்களுக்குள் நடந்த ஒரு சிறு மீட்டிங்(??!) (காலை 9.30 முதல் மாலை 4.30 வரை) நடந்ததில் என்னை நெருடிய ஒரு நிகழ்ச்சியை பற்றி தான் பெரியவர்கள் ஆகிய உங்களிடம் கருத்து கேட்க வந்துள்ளேன்சில டிராவல் கம்பனியிடம் இருந்து quote வாங்கி இருந்தோம் அதில் ஏற்கனவே வாடிக்கையான டிராவல் கம்பனியும் ஒன்று. நாங்கள் அவர்களின் விலை பட்டியல் அனைத்தையும் சேர்த்து எங்களின் வேறு கிளை நகரத்தில் உள்ள டிராவல்ஸ் பட்டியலுடன் ஒப்பிட்டு ஒரு அட்டவணை செய்து அதை வந்தவர்களிடம் (தனி தனி நேரத்தில்) வெளிப்படையாக கொடுத்தோம். நான் சேகரித்த டிராவல் கம்பெனியில் ஒன்று, நாங்கள் ஏற்கனவே தொழில் கொடுக்கும் டிராவல்(exitng vendor) கம்பனில் வேலை செய்து வெளியேறியவர் தொடங்கியது. முன்பே எனக்கு அறிமுகம் ஆதலால் என்னிடம் வந்து முறைப்படி ஒரு quote கொடுத்து பரிசீலிக்கும் படி கேட்டுக்கொண்டார். நானும் அதை மற்ற விலைபட்டியலுடன் சேர்த்து நகல் எடுத்து மே..-யிடம் கொடுத்து இருந்தேன்.

இந்த பட்டியலில் குறிப்பிட்ட அந்த புதிய டிராவல்(நியூ vendor ) கம்பெனியை யார் என்று கண்டு கொண்ட, பழைய டிராவல் (exitng vendor) ஆள் மே..-யிடம், இவன் என்னிடம் வேலை செய்து வெளியேறியவன் இப்போது தனியே டிராவல் கம்பெனி தொடங்கிவிட்டான் என குறிப்பிட.. உடனே என் மே.. சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் ஆகி தீர்ப்பு சொல்லிவிட்டார்.. அது பின் வருமாறு:-

"
ஒரு கம்பெனியில் வேலை செய்து வெளியேறியதும் இல்லாமல், அந்த கம்பெனிக்கு தொழில் கொடுப்பவரிடமே வந்து தன் கைவரிசையை கட்டியுள்ளான் அவன்.. இது கண்டிக்க தக்கது, ஒரு முறையற்ற செயல்! எனவே அவனது quote தள்ளுபடி செய்யப்படுகிறது. உப்பை தின்றவன் துரோகம் நினைக்கலாமா? இது குரு துரோகம் அல்லவா??" - இந்த ரேஞ்சு-கு பேசி ரிஜெக்ட் பண்ணிட்டார். எனக்கு செம கடுப்பு அந்த மே.. மீது. மேலும் அவருடன் விவாதிக்க விரும்பாமல் விட்டு விட்டேன்.

இப்போ என்னோட சந்தேகம் இது தான் - இந்த உண்மை தான் எனக்கு தெரிஞ்சாகனும்:-
1 .
தொழில் பயின்ற இடத்தை விட்டு வெளிவருவது குற்றமா?
2 .
அப்படி வெளியே வரும் நபர் சுயமாக ஒரு பயின்ற தொழிலை தொடங்குவது ஒரு கண்ணியமற்ற செயலா?
3 .
தான் வேலை பார்த்த நிறுவனத்துக்கு போட்டியாக வருவது நம்பிக்கை துரோகமா?
4 .
அப்படியானால், நாட்டில் ஆரோக்கியமான போட்டிக்கு அடிக்காரணம் நம்பிக்கை துரோகம் தானா?
5 .
இப்படி ஒருவரின் திறமை வெளிப்பாட்டை ஒதுக்குவது தான் தர்மமா?
6 .
அப்போ எவனுமே வேலை தெரிஞ்ச தொழிலை தொடங்காமல் வேற தொழில் தான் இறங்கனுமா?
7 . அப்போ வளர்ச்சின்ன என்ன?

என் மேலதிகாரி செய்ததில் எனக்கு உடன்பாடில்லை.. உங்கள் கருத்து எதுவோ சொல்லுங்களேன்....

அன்புடன்
சமீரா..

25 comments:

 1. ஆங்கிலத்திலே ஒரு சொலவடை உண்டு. (அந்த வடை கூட சட்னியுண்டான்னு கேட்கப்படாது). அதாவது Everything is fair in war and love. இப்போ Everything is fair in everything. ஆகவே, more work more tension, less work less tension. :-)

  ReplyDelete
  Replies
  1. ஹஹஹா.. பதிவு எழுதும் போது இருந்த டென்ஷன் உங்க பின்னூட்டம் பாத்ததும் போயே போச்சி... இனி less வொர்க் less டென்ஷன் தான்.... நன்றி சார்...

   Delete
 2. உங்கள் மேல் அதிகாரி குறுகிய மனப்பான்மை கொண்டவராக உள்ளார். அவரால் இந்த வளர்ச்சியையோ ஏற்று கொள்ள முடியவில்லை. Business is always business, nothing more sentiments or stories in it.

  ReplyDelete
  Replies
  1. நீங்க சொல்றது உண்மை சகோ! பரந்த மனப்பான்மை இல்லாததால் தான் தொழில் போட்டி கொலையில் வந்து கூட முடிகிறது...நன்றி ஆயிஷா...

   Delete
 3. ஒருவர் ஒரு தான் கற்றுக்கொண்ட விசயத்தை கொண்டு அந்த துறையில் இன்னும் அதிகம் தூரம் சென்று சாதிப்பதுதான் அவர் கற்றுக் கொண்டதற்கும் கற்று கொடுத்தவருக்கும் பெருமயாக இருக்க முடியும்

  ReplyDelete
  Replies
  1. இது பல பேருக்கு புரிவதில்லை! அதுதான் பொறாமைக்கு முக்கிய காரணம்.. நன்றி நண்பரே!!

   Delete
 4. தொழிற் பயின்ற இடத்தில் இருந்து வெளியேறுவது குற்றமே அல்ல ..

  கண்ணியமற்ற செயலும் அல்ல ..

  நம்பிக்கைத் துரோகமும் இல்லை .

  ஆரோக்கியமானப் போட்டிக்கு நம்பிக்கை துரோகம் காரணமாக இருக்க முடியாது ..

  திறமையை மறுப்பது தருமம் அல்ல ..

  தெரிந்து வேலையை செய்வது தான் நியாயம் ..

  வளர்ச்சி ??? அதான் எனக்குத் தெரியவில்லை ... !

  ReplyDelete
  Replies
  1. அது வெளியேறும் நபரை பொருத்தது.. வளர்ச்சியா? வேறேதுமா என்பது?.. நன்றி சகோதரரே!!

   Delete
 5. ம்ம்ம்ம்... அடுத்த நபரின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை பலருக்கு இருப்பதில்லைதான்! பெரிய மனசு, பெருந்தன்மை எல்லாம் இருந்தாக்கா இந்த அளவுக்கு இருக்காது!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சுடர்.. இப்போதெல்லாம் பெருந்தன்மைக்கு அர்த்தம் அகராதி விட்டு போயாச்சி...

   Delete


 6. தொழில் பயின்ற இடம், தெரிந்த தொழில் என்ற ரீதியில்...இதை ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம்...

  தொழில் பயின்ற இடத்தில கற்பது தொழில் மட்டும் அல்ல... கிடைப்பது ஒரு தொழிலிற்கு தேவையான CONTACTS
  எப்போதும் ஊழியர்களுக்கு முதலாளிகளை விட அதிக வாடிக்கையாளர்களின் தொடர்பு இருக்கும்...

  நீ இந்த பதிவில் சொன்னதும் எனக்கு நேரடியாக ஒரே ஒரு சம்பவம் தான் நினைவிற்கு வருகிறது.. நபர் ஒருவர் கம்பெனி Xஇல் வேலை செய்தார்... பயணம் முன்பதிவு செய்யும் வேலை...கிட்டத்தட்ட மேனேஜர் அளவிற்கு அந்த டிராவல் ஏஜென்சியில் மரியாதை...அவர் செல்லுக்கு ஒரு கால் செய்தால் போதும்...துரித சேவை... கொஞ்சம் கடனை வாங்கி கம்பெனி Y அவரே தொடங்கினார்... கம்பெனி X இற்கு வரும் முன்பதிவுகளை Y இல் ஏற்றினார்...

  இதை எதில் சேர்ப்பது?

  ReplyDelete
  Replies
  1. x - கம்பெனிக்கு தெரிந்தே வெளியேறி அவர் y தொடங்கி இருந்தால் தப்பேதும் இல்லைப்பா.. ஏனென்றால் x -இல் நீங்கள் சொன்ன அவரின் துரித செயல்பாடு அவரின் திறமை வெளிப்பாடு தான் .. அதை அவர் தனிப்பட்ட முறையில் 'லாபம்' பார்க்க தொடங்கி விட்டார்.. . x -இற்கு தெரியாமல் மறைமுகமாக அவர் தொடங்கி செய்திருந்தால் அது துரோகக்ம் தான்...
   நன்றி மயிலன்!!

   Delete
 7. சமூகத்தின் மிக முக்கியமான பிரச்சினையை தொழில் சார்ந்த அடிப்படையில் கேள்வியாக முன் வைத்திருக்கிறீர்கள். அதற்கு பதிலையும் கேட்கிறீர்கள்.

  சமீரா, முதலில் உங்களின் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன்
  சில மாதங்களுக்கு முன் புதிதாக பொறுப்பேற்றதும் தன் பருப்பினை சாரி பொறுப்பினை காட்ட அவரின் டீம்-ஆனா என்னையும் என் கிளையையும் பார்த்து அலவளாவ (அறுக்க) ஒரு நடை போட்டார். நானும் ஒரு போருக்கு போகும் மாவிரனை(பெண்பால் தெரிலைங்கோ) போல அவரை எதிர் கொள்ள தயாராக இருந்தேன்.
  இந்த எழுத்துக்களில் மீண்டும் உங்களின் நகைச்சுவையுணர்வை ரசித்தேன். சென்ற பதிவு வரை நகைச்சுவை மட்டும் இழையோடிய உங்கள் பதிவுகளில் இந்த பதிவு மூலம் கொஞ்சம் சமூகப் பிரச்சினையையும் சொல்ல விழைந்துள்ளீர்கள். முதலில் அதற்கு வாழ்த்துக்கள்.
  உங்களின் முதல் மூன்று கேள்விகள் இயல்பானது தான். அது அவ்வளவாக பிரச்சினையை உருவாக்குவது இல்லை. எனவே தவறில்லை.
  ஆனால் உங்களின் 4வது கேள்வி தான் மிகவும் குழப்பமானது. இதற்கு அவ்வளவு எளிதில் யாராலும் விடை சொல்லிவிட முடியாது.
  அப்படியானால், நாட்டில் ஆரோக்கியமான போட்டிக்கு அடிக்காரணம் நம்பிக்கை துரோகம் தானா?
  உங்களுக்கு இந்த கேள்வி எப்படித் தோன்றியதோ தெரியவில்லை. ஆனால் இன்றைய சமூகத்தின் முக்கிய பிரச்சினையே இது தான். இந்த சமூகத்தில் போட்டியே இல்லை, பின்பு எங்கு ஆரோக்யம் வருவது. அப்படியிருக்க எல்லாமே இங்கு துரோகச் செயலாகத் தான் தெரியும்.
  மயிலன் அவர்கள் சொன்னது போன்ற சம்பவங்களும் நிகழத் தான் செய்கின்றன.
  இதற்கெல்லாம் ஒரேப் பதில் தன்னம்பிக்கை இல்லாத மனிதர்கள் தான்.
  என்னிடம் வேலை செய்யும் ஒருவன் வெளியில் சென்றால் என்னை விட பெரிய ஆளாக ஆகிவிடுவான் என்று நான் நினைத்தால். எனக்கு என் மேல் நம்பிக்கை இல்லை என்று தானே அர்த்தம். தன்னம்பிக்கை இல்லாததால் தான் வேலையாட்களை வெளியில் செல்ல விடுவதில்லை முதலாளிகள்.
  அதேப் போல் தான் வேலையாளுக்கு தன்னம்பிக்கை இல்லாததால், முதலாளிகளின் முக்கிய தொடர்புகள்,ரகசியங்களையும் தனதாக்கிக் கொண்டு முதலாளியின் தொழிலை நஷ்டப்படுத்திவிடுகிறார்கள். பிறகு அவர்கள் முதலாளிகள் ஆகிவிடுகிறார்கள்.
  5 . இப்படி ஒருவரின் திறமை வெளிப்பாட்டை ஒதுக்குவது தான் தர்மமா?
  6 . அப்போ எவனுமே வேலை தெரிஞ்ச தொழிலை தொடங்காமல் வேற தொழில் தான் இறங்கனுமா?
  7 . அப்போ வளர்ச்சின்ன என்ன?


  இங்கே திறமை எங்கே இருக்கிறது..? வளர்ச்சி எங்கே இருக்கிறது. தன்னம்பிக்கை இல்லாத இடத்தில் திறமையும் இல்லை வளர்ச்சியும் இல்லை.
  ஒருவனுக்கு தன் மேல் நம்பிக்கையிருந்தால் அவனை யாருடைய தியாகமும் சரி, துரோகமும் சரி ஒன்று செய்ய முடியாது.
  அது இருக்கும் இடத்தில், முதலாளியே தொழிலாளிக்கு பணமோ, தொடர்புகளோ தந்து புதுத் தொழிலை உருவாக்குவார்கள். அப்படி சில மனிதர்களும் மண்ணில் உண்டு அபூர்வமாய்…
  சமீரா சற்று நீளமாக எழுதிவிட்டேன். மன்னிக்கவும். இருப்பினும் சுருக்க முடியவில்லை. தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. முதலில் நன்றி ராஜா... இவ்ளோ பொறுமையா ஒரு ஆழமான பின்னுட்டம் இட்டதற்கு!
   அழாக சொல்லிடீங்க.. நம்ம சார் எடுத்து காட்டிய உங்கள் வரிகள் அருமை ராஜா..
   கண்டிப்பாக ஒருவன் தன்னமிக்கை இழக்கும் போது தான்.. தடுமாறுகிறான்..தடுக்கி விழுகிறான்..
   தன்னம்பிக்கை 'இழக்கும் முதலாளியும் சரி அவனிடமுருந்து வெளிவரும் தொழிலாளியும் சரி' நல்ல முறையில் முன்னேறுவது கடினம் தான்...

   Delete
 8. சபாஷ் தமிழ்ராஜா... தன்னம்பிக்கை இல்லாத இடத்தில் திறமையும் இல்லை, வளர்ச்சியும் இல்லை. ஒருவனுக்கு தன் மேல் நம்பிக்கையிருந்தால் அவனை யாருடைய தியாகமும் சரி, துரோகமும் சரி ஒன்று செய்ய முடியாது.
  -மிகச் சரியான கருத்து. தான கீழ் வேலை செய்த ஒருவன் அதே தொழிலில் நற்பெயர் வாங்கி முன்னேறினால் என் ஸ்டூடண்ட் என்று சொல்லி பெருமைப்படும் ஆரோக்கிய மனம் வேண்டும். அதை எல்லாரிடமும் எதிர்பார்க்க முடியாதும்மா சமீரா.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சார்.. குருவை மிஞ்சின சிஷ்யன எந்த குரு தான் நல்ல மனதோட வரவேர்கறாங்க .. அது ரொம்ப ரொம்ப குறைவு தான்.. நன்றி சர்ர்

   Delete
  2. உங்களின் சபாஷ் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி ஐயா.அந்த வரிகள் என் தன்னம்பிக்கையின் பிரதிபலிப்பே

   அந்த வரிகளை வெளிக் கொண்டு வர உதவிய சமீராவின் கேள்விகளுக்கு மிக்க நன்றிகள்.

   Delete
 9. சமீரா அவர்களே !
  வணக்கம்.
  இது சம ஈரா ( equal Era )அல்ல.
  எப்படா அடுத்தாள் அசந்திருப்பான் அப்படின்னு
  எதிர்பார்க்கிற நேரம்.

  முன்னாடி நம்ம யாருகிட்டே வேலை பார்த்திட்டு இருந்தோமோ
  அவங்ககிட்ட கொஞ்சம் உசாராத்தான் இருந்திருக்கணும்....

  Please avoid unconventional channels in all professional dealings.
  That would possibly be the best piece of advice from this old man.

  subbu rathinam.
  That is ok.
  did u see my comments in your earlier posting
  referred in Valaicharam?

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சார்.. நீங்கள் சொல்வது மிக சரி.. கவனமாக இருந்தால் ஒழிய இந்த காலத்தில் பிழைப்பது கடினம்...
   old is always gold sir... thanks for your valuable words...

   Delete
  2. பார்கிறேன் சார்.. மிக்க நன்றி உங்கள் நேரத்தை எனக்காக செலவிட்டதற்கு ...

   Delete
 10. அவர் ஒரு மேலதிகாரியே இல்லை... பொறாமையின் மொத்த உருவம்... இதோடு மறந்து விடுங்கள்...

  இதை ஒரு போட்டி என நினைத்து முன்னேறுங்கள்...

  (போட்டி : உங்கள் மன உறுதி)

  ReplyDelete
 11. அன்பின் சமீரா - இயல்பான சூழ்நிலையில் இது தவறே அல்ல - ஒரு நிறுவனத்தில் இருந்து விலகியவர் மற்றொரு நிறுவனத்தினைத் துவங்கி - பழைய நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை தன் புதிய நிறுவனத்திற்கு மாற்றுவதும் கூட தவறான செயல் அல்ல. ஆனால் பழைய வாடிக்கையாளர்கள் இவரைப் பழைய நிறுவன அதிகாரி என நினைத்து அழைக்கும் போது இவர் உணமையினைக் கூறாமல் தன் நிறுவன பிஸினஸில் சேர்த்தாரெனில் அது மாபெரும் தவறாகும்.

  நல்வாழ்த்துகள் சமீரா - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. வெளியேறியவர் புதிதாக தொழில் தொடங்கி இருப்பது பழைய நிறுவனத்துக்கு நன்றாக தெரியும் ஐயா.. இருந்தாலும் அவர்களின் தன்னம்பிக்கையின்மையை அவர்களே வெளிச்சம் போட்டு காட்டிகொள்கின்றனர்..

   மிக்க நன்றி ஐயா...

   Delete
  2. ”தன்னம்பிக்கையின்மையை அவர்களே வெளிச்சம் போட்டு காட்டிகொள்கின்றனர்.. “

   ஒரு பதிவு எத்தனைப் பெரிய விஷயங்களைச் செய்து விடுகிறது.உங்களின் கேள்விகள் பெரும்பான்மையானவர்களுக்கான விடையாக அமைந்துவிட்டது.

   Delete