Ads 468x60px

Saturday, October 27, 2012

நந்தவனம்!!!


ஹாய்! ஹலோ! வணக்கம்!!

உங்களையெல்லாம் சந்தித்து வெகு நாள்கள் ஆகிறது. என் புதிய நந்தவனத்தில் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி!!! நதியோரம் பூக்களை காணோமே என்று என் குரு கேட்டு விட்டார். சிஷ்யை இதோ கிளம்பிவிட்டேன்!! இனி வார வாரம் ஆரவாரமின்றி என் புதிய நந்தவனத்தில் பல வண்ண பூக்கள் பூக்க இருந்கின்றன என்பதை மகிழ்வோடு தெரிவித்துகொள்கிறேன்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! - தமிழ் ராஜா

தமிழ் தொட்டிலில் தவழும் குழந்தை திரு தமிழ் ராஜா-விற்கு இன்று பிறந்த நாள். இந்நாளில் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து கொள்கிறேன்..அவர் வாழ்வில் மேலும் மேலும் பல வெற்றிகளை தனதாக்கி கொள்ள இறைவனை வேண்டுகிறேன்!!!


படித்ததில் பிடித்தது!!

இந்த தலைப்பில் நான் படித்த புத்தகங்களைப்  பற்றி எழுதவேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு ஆசை.. இதோ இனி வாரம் வாரம் எழுத தொடங்கலாம் என நினைக்கிறேன். 
அனுராதா ரமணன் - அறிவுரைகள்!!

அன்புடன் அந்தரங்கம் என்ற தலைப்பில் அனு அம்மா பல வருடங்கள் தொடர்ச்சியாக, தினமலர் நாளிதழின் ஞாயிறு இணைப்பு புத்தகமான வாரமலரில் எழுதி இருக்கிறார். அவர் எழுதியவரை நான் இடைவிடாத வாசகி அந்த பகுதிக்கு! அவருக்கு பின் அந்த பகுதி எனக்கு  ரசிக்கவில்லை. வாசகர்கள் தங்களின் அந்தரங்க குடும்ப பிரச்சினைகளுக்கு அனு அம்மாவிடம் தீர்வு கேட்டு கடிதம் எழுதுவார்கள். அதற்கு அவர் அளிக்கும் பதில்கள், அறிவுரைகள் எல்லாம் என்னை வியப்பில் ஆழ்த்தும். அவற்றையே இங்கு பதிவாக ஒவ்வொரு சனிக்கிழமையும் எழுத விழைகிறேன். நம்மில் கேட்
தயங்கும் பல கேள்விகளை பிறர் கேட்டு அதன் மூலம் ஒரு தீர்வை நாமும் பெறும்போது ஒரு மன நிம்மதி பிறக்கும். ஆகையால் அந்த நிம்மதி ஒருவர்கேனும் கிடைக்கும் எனும் நம்பிக்கையில் எழுத தொடங்குகிறேன் உங்களின் மேலான தாரவுடன்!!!

பால கணேஷ் சார் சொன்ன மாதிரி இனி நன்றி மறக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். அதனால இப்போ எல்லாருக்கும் என் நன்றிகள்! பொறுமையா என் வலைத்தளம் வந்து பதிவினை படித்ததற்கு!!!

அன்புடன்
சமீரா

26 comments:

 1. தமிழ்ராஜாவுக்கு என் இதயம் நிறைந்த இனிய பிறந்த தின நல்வாழ்த்துக்கள்! அனும்மாவின் கவுன்சலிங் அர்த்தம் பொதிந்தது சமீரா. அவற்றை இங்கே மீண்டும் படிக்க இயலும் என்பதில் மிக்க மகிழ்ச்சி. படித்த நல்ல விஷயங்களை இப்படிப் பகிர்வது அனைவருக்கும் பயனுள்ளதுதானே... நந்தவனத்தில் இனி நிறையப் பூக்களின் வாசத்தை நுகரலாம் என்பதில் கொள்ளை மகிழ்ச்சி எனக்கு. வாழ்த்துக்கள்மா.

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் அவற்றை மீண்டும் படித்து பகிர்வதில் மகிழ்ச்சிதான் சார்... என்னை உற்சாகபடுதியதர்க்கு நன்றி சார்.

   Delete
 2. தமிழ் ராஜா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

  அனுராதா ரமணன் அவர்களின் அறிவுரைகளை விரைவில் எதிர்பார்க்கிறேன்...

  நன்றி...
  tm2

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சார்.. உங்களின் ஆர்வம் எனக்கு டானிக்!!!

   Delete
 3. தமிழ் ராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

  படித்த புத்தகம் பகிர்வது நல்லது தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. புத்தங்கங்கள் நமக்கு ஒரு தோழர் /தோழி போல!! அவர்களை நினைகூர்ந்து பிறருக்கு அறிமுகம் செய்வதில் ஒரு ஆனந்தம் உண்டு.. வருகைக்கும் மிக்க நன்றி சார்...

   Delete
 4. தமிழ் ராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....
  அனுராதா ரமணன் அவர்களின் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. உங்களின் எதிர்பார்ப்பு என்னை மேலும் எழுத உற்சாகம் கொடுகிறது. தொழிற்கள குழுவிற்கு மிக்க நன்றிகள் !!

   Delete
 5. ஹை சமீரா...நல்ல ஐடியாப்பா! நிச்சயமா எழுதுங்க! அவங்களோட அனுகுமுறை வித்யாசமா இருக்கும்! கனேஷ் சார் கூட நடைவண்டிகள் தொடரில் அனு அவர்கலைப் பற்றியும் அவர்களுடைய அனுகுமுறையைப் பற்றியும் எழுதியுள்ளாற்! படிக்க ஆவலுடன் இருக்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சுடர்!!! நிச்சயம் எழுதுகிறேன்...

   Delete
 6. தமிழ் ராஜா அவர்களுக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

  தங்களது வித்தியாசமான பகிர்வு நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. அன்புள்ள சமீரா,
  உன் புதிய பதிவு கண்டு மகிழ்ச்சி.
  தமிழ் ராஜா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  நானும் திருமதி அனுராதா ரமணனின் ரசிகைதான்.
  அவரது எழுத்துக்களை உன் தளத்தில் படிக்கப் போவது இரட்டிப்பு மகிழ்ச்சி.

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி அம்மா!! உங்கள் வருகை மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது...

   Delete
 8. தமிழ்ராஜாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! உங்களது புதிய முயற்சிகள் பூத்துக் குலுங்கட்டும்!

  ReplyDelete
 9. தமிழ் ராஜாவிற்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

  தொடர்ந்து பூக்கட்டும் பூக்கள் - உங்கள் வலையில்....

  ReplyDelete
  Replies
  1. மனம்நிறைந்த நன்றிகள் சார்...

   Delete
 10. படித்த நல்ல புத்தகங்களை மற்றாவருக்கு அறிமுகப்படுத்துவது ரொம்ப நல்ல பழக்கம். தொடரட்டும் சகோதரி...,

  ReplyDelete
 11. தமிழ் தொட்டிலில் தவழும் குழந்தை திரு தமிழ் ராஜா-விற்கு இன்று பிறந்த நாள். இந்நாளில் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து கொள்கிறேன்..அவர் வாழ்வில் மேலும் மேலும் பல வெற்றிகளை தனதாக்கி கொள்ள இறைவனை வேண்டுகிறேன்!!!//


  தமிழ் ராஜா அவர்களுக்கு நிறைவான இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 12. தமிழ்த்தொட்டிலை நதிக்கரையில் வைத்து வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.

  என் பிறந்த நாளை இப்படியொரு இன்ப அதிர்ச்சியாக மாற்றிய தோழி சமீராவிற்கு மிக்க நன்றி.
  அணு அம்மாவின் விளக்கங்களை நானும் படித்திருக்கிறேன். மீண்டும் அதை உங்களின் பதிவுகள் மூலம் படிப்பதில் மகிழ்ச்சி.
  மேலும் நீங்கள் படித்த புத்தகங்களின் அனுபவத்தை எழுதுவதில் மிக்க மகிழ்ச்சி.காத்திருக்கிறேன் அடுத்த பதிவிற்காக...

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராஜா!! கண்டிப்பாக புதிய பதிவுடன் விரைவில் சந்திக்கிறேன்...

   Delete
 13. தமிழ்ராஜாவுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
  நன்று

  ReplyDelete
 14. உங்களை தொடர்பதிவுக்கு அழைச்சுருக்கேன்...

  கலந்துக்கோங்க http://www.kuttisuvarkkam.com/2012/11/blog-post_25.html

  ReplyDelete