Ads 468x60px

Wednesday, November 28, 2012

நான் ரசித்த கொரியன் படம்: "A Moment to Remember"


ஹாய் ஹலோ வணக்கம்!

திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதும் அளவுக்கு எனக்கு சினிமா ஞானம் இல்லை. அதனால் பார்த்து ரசித்து மகிழ்ந்த ஒரு கொரியன் திரைப்படத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.. 

முதலில் கொரியன் படம் பார்க்கும் ஆவல் வந்தது நம் பாலகணேஷ் சார் எழுதிய "Daisy" என்ற படத்தின் பதிவு படித்ததும் தான்! பின் அந்த படத்தில் ஹீரோ-வை பிடித்துவிட்டதால் மேலும் அவரின் படங்கள்  தேடி பிடித்து பார்த்தேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்தது, கரைத்தது "A Moment To Remember" என்ற இந்த படம் தான்.


இந்த படத்தை டைரக்ட் செய்திருப்பவர் லீ- ஜே -ஹன் (Lee -Jae - Han), ஹீரோ ஜுங்- வூ-சங் (Jung -Woo -Sung ), ஹீரோயின் சன்-யே-ஜின் (Son Ye-jin) 

2004-இல் வெளிவந்த இந்த படம் " முழுக்க முழுக்க காதல் மற்றும் குடும்ப வாழ்கையை" சித்தரிக்கிறது. கணவன் மனைவிக்கு இடையிலான ஒரு ஆழ்ந்த புரிதல் மற்றும் அன்பினை எடுத்து கூறுகிறது. 

கதை சுருக்கம்: காதலில் தோல்வியுற்று வீட்டிற்கு திரும்பும் ஹீரோயின் கிம்-சுஜி, முதன் முதலில் ஹீரோ சோல்-சூ- வை ஒரு பல்பொருள் அங்காடியில் சந்திக்கிறார்.  தன்னுடைய பெப்சி-யை கடையில் மறந்து வைத்துவிட்டு ஹீரோ-வின் கையில் இருக்கும் பெப்சி கேனை, தன்னுடையது என நினைத்து பிடுஞ்சி ஒரு மடக்கில் குடித்து கேனை வீசி எறிகிறார். பின்தான் தெரியவருகிறது அவருடையது கடைக்குள்ளேயே இருப்பது! இதுதான் அறிமுகம்!!

கிம் சுஜியின் அப்பா ஒரு கட்டிட பொறியாளர். அம்மா தங்கை என அளவான குடும்பம். காதலனை நம்பி வீட்டை விட்டு வெளியேறி அவன் முன்னமே திருமணம் ஆனவன் என உண்மை தெரிந்து, அவன் மனைவியால் விரட்டி அடிக்கபடுகிறார். அப்படி திரும்பும் மகளை ஆதரவுடம் அனைத்து தேற்றும் குடும்பம் அவளுடையது!

சிறு வயதில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பின்றி தான்தோன்றியாக வாழும் கதாநாயகன் சோல்-சூ. அவனிடம் உள்ள ஒரு முரட்டு சுபாவம், மரவேலையில் அவனின் கை வேலைப்பாடு இரண்டுமே அவனின் பலம்.

இந்த முரட்டு வாலிபனை கிம் சூ மீண்டும் சந்திப்பது தன் அப்பாவின் கட்டிட பணியில் வேலைசெய்யும் கார்பெண்டராக! ஆனால் சோல்-சூ வை சந்திக்கும் கிம்-சுஜி முதலில் எங்கே பார்த்தோம் இவனை என்றே விளங்கவில்லை. பின்னர் தெரிந்து கொண்டு பழக ஆரம்பிக்கிறார். அவனை பார்பதற்கு என்றே அவனிருக்கும் இடத்திற்கு தற்செயலாக வருவது போல் வந்து அவனின் நட்பை பெறுகிறாள்.

இதன் பின்னர் சோல்-சூ கட்டிட கல்வியில் பட்டம் வாங்குகிறார். அவர்களின் நட்பு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து காதலாகி கசிந்துருகுகிறது! 

கிம்-சூ தன் காதலை பெற்றோரிடம் சொல்லும் போது இயல்பாக ஒரு எதிர்ப்பும் பின் மகளுக்காக மனம் மாறி திருமணம் முடிவாகிறது!!

திருமணதிற்கு பின்பான கதையே இந்த படத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. முன்னால் காதலனின் மனைவியால் தாக்கப்படும் கிம்-சுஜி  Alzheimer's disease- எனும் மறதி நோயிக்கு ஆளாகிறார். இதனால் அவரின் வாழ்கையில் சந்திக்கும் இடர்பாடுகளை தெளிவாக ஆழமாக சொல்லப்பட்ட விதம் அருமை! தன்னையே மறக்கும் நிலைக்கு தள்ளப்படும் கதாநாயகி தன் காதல் கணவனை மறக்கும் ஆபாயதிற்கு  அஞ்சி எடுக்கும் முடிவு கலங்க வைக்கிறது. 


நம் கதாநாயகன் தன் காதல் மனைவியை எப்படியெல்லாம் தேற்றுகிறார். கிம்-சுசிக்காக அவர் செய்யும் ஆதரவான செயல்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. உண்மையான காதல் கல்யாணத்துடன் முடிவதில்லை அது காலமெல்லாம் தொடர்ந்து வருவது; எந்த ஒரு சூழ்நிலையிலும் கைவிடாதது என்பதற்கு இந்த படம் தக்கதொரு எடுத்துக்காட்டு!!

குடும்ப உறவுகள் நலிவுற்று இருக்கும் இந்த காலகட்டத்தில், மனைவியின் நோயினை பெரிதாக கருதாமல் அதை சமாளிக்கு வகையை எடுத்துசொல்லி மனைவியை தேற்றுவது ரசிக்கவைக்கிறது. அவன் காதலின் ஆழத்தை அது வெளிபடுத்துகிறது. 

அடிதடிகள் நிறைந்த பிறமொழி படங்களையே பார்த்து போரடித்த நமக்கு இது போன்ற ஒரு வித்யாசமான குடும்ப கதை நிச்சயம் ஈர்ப்பதில் சந்தேகமில்லை!! 

நேரம் கிடைக்கும் போது இந்த படத்தை பார்த்து ரசியுங்கள்!!!படத்தின்  லிங்க் உங்களுக்காக:
http://www.youtube.com/watch?v=e0D5aHNMAuY 

அன்புடன் 
சமீரா.

16 comments:

 1. நீங்கள் சொல்லிப் போன விதம் பார்க்கத் தூண்டுகிறது. சீக்கிரமே பார்த்து விடுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நாளாக எழுதும் ஆவல் இருந்தது! ஆனால் எழுதும் முறை தெரியவில்லை. பின் எனக்கு தெரிந்த முறையில் எழுதிவிட்டேன். கருதிட்டதர்க்கு மிக்க நன்றி சார்...

   Delete
 2. சினிமா ஞானம் இல்லைன்னு சொல்லிட்டுக் கொரியன் படத்தைப் பார்த்து அருமையா விமரிசனம் பண்ணியிருக்கீங்க..அப்புறம் நான் எல்லாம் என்ன சொல்லிக்க!வாழ்த்துகள் சமீரா

  ReplyDelete
  Replies
  1. நன்றி குட்டன் சார்.. ஆனாலும் சினிமா ஞானம் எனக்கு கம்மின்னு ஒத்துக்கதான் வேணும் சார்....

   Delete
 3. சுவாரஸ்யமான விமர்சனம்...

  நன்றி...
  tm2

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப சந்தோசம் சார்..
   வருகைக்கும் மனநிறந்த நன்றிகள் !!!

   Delete
 4. அருமை ; அவசியம் பார்க்க முயல்கிறேன்

  பாலகணேஷ் சார் விகடன் பப்ளிகேஷனில் வேலைக்கு சேர்ந்துள்ளார் ; புது வேலை என்பதால் இணையம் பக்கம் வரவே முடியாத சூழல் விரைவில் வந்து இந்த பதிவையும் படிப்பார்

  ReplyDelete
  Replies
  1. நேரம் கிடைக்கும் பொது நிச்சயம் பாருங்கள் சார்.. இந்த படத்திற்கு நீங்க என்னைவிட நல்லா ஒரு பதிவு கூட போடலாம்...

   விகடன் ல சேர்ந்தது மிக மகிழ்ச்சியான விஷயம்... ஆனால் அவர் வருகையில்லாதது கொஞ்சம் வருத்தம் தான் சார்...

   Delete
 5. நல்லா தான் விமர்சனம் எழுதுறீங்க இப்படி நல்ல படங்களை அவ்வப்போது அறிமுகம் செய்யலாம்

  ReplyDelete
  Replies
  1. விமர்சனம் எழுதறதுல நீங்களல்லாம் எனக்கு முன்னோடி சார் ...
   கண்டிப்பாக நல்லா படங்களை பார்த்தால் அறிமுக படுத்துகிறேன்... நன்றி சார் ..

   Delete
 6. உண்மையான காதல் கல்யாணத்துடன் முடிவதில்லை அது காலமெல்லாம் தொடர்ந்து வருவது; எந்த ஒரு சூழ்நிலையிலும் கைவிடாதது என்பதற்கு இந்த படம் தக்கதொரு எடுத்துக்காட்டு!!

  சமீரா திரைப்படங்களின் விமர்சனத்தை உங்களின் வலைத்தளத்தில் பார்த்ததில் உண்மையில் வியப்பு.படத்திற்கு சரியான விமர்சனம் அளித்துள்ளீர்கள். நானும் அந்தப் படத்தைப் பார்த்தேன். அருமை.

  மென்சோகம் என்று சொல்வார்களே மனதை சுகமாக வருடிச் செல்கிறது காட்சிகள்.
  வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராஜா... பதிவு போடும் எண்ணமில்லை.. திடீரென நினைத்தேன்.. செயலாற்றிவிட்டேன்.. விமர்சனம் எழுதும் அளவுக்கு உண்மையில் எனக்கு சினிமா பற்றி அதிகம் தெரியாது...

   Delete
 7. நானும் அந்தப் படத்தைப் பார்த்தேன். அருமை.

  ReplyDelete
 8. நோட் பண்ணியாச்சு.பார்க்க வேண்டும்.அறிமுகத்திற்கு நன்றி.

  ReplyDelete