Ads 468x60px

Monday, September 10, 2012

மழைகால எச்சரிக்கை!!!

மழை

அன்பானவர்களுக்கு...

மழைவந்தால் அந்த காலத்தில் பெரியவர் முதல் சிறியவர் வரை சந்தோஷ கூத்தாடுவார்கள் என கேள்விப்பட்டு இருக்கிறேன்.  (நானும் மழையில் ஆடி இருக்கிறேன்-சிறுவயதில்) .. அப்போது மழை நீர் தேங்கி நிற்கும் நிலை இல்லை.. அப்புறபடுத்தும் அவசியமும் இல்லை..என் அம்மா அடிக்கடி சொல்வார்கள், "தொடர்ந்து 1 மாதம் இடைவிடாது மழை பெய்யும்; அப்போதெல்லாம் கூட தொழில் பாதிக்குமே தவிர எந்த வழித்தடமும் பாதித்ததில்லை; தண்ணீர் தெருவெங்கும் ஓடும்,மீன் கூட பிடிப்போம் ஆனாலும் மழைநீர் தேங்கியதில்லை என்பார்கள் ".

இன்று அப்படியே நேர்மாறாக உள்ளது. 5 நிமிட மழைக்கு கூட சேறும் சகதியும் பாதை தெரியாத அளவிற்கு மழைநீர் தான் சூழ்ந்து கொள்கிறது...பாவம் அதற்கும் செல்ல இடமில்லை இந்த பரந்த உலகில்(!).. ஆனால் முன்பு மழைநீர் செல்ல வழி இருந்தது.. காலி விளைநிலங்கள் இருந்தன; தண்ணீரை உறிந்துகொள்ள மரங்கள் இருந்தன புதர்களும் செடிகளும் பரவி விரவி கிடந்தன.. இப்போது இருப்பதெல்லாம் சிமென்ட் ரோடு மற்றும்  ஒரு இன்ச் இடம் கூட மீதம் விட விரும்பாத கட்டிடங்கள் தான், ஆளுயர மரங்களுக்கு பதிலாக வானுயர கட்டிடங்கள்! அதிலும் இந்த சிமென்ட் ரோட்டில் குடம் நீர் உறிஞ்ச கூட ஒருநாள் ஆகும்.. இன்னும் மும்மாரி பொழிந்தால் நாட்டு மக்கள்  போட்டில் (boat) தான் செல்லவேண்டி வரும்.. 


Take 'U' Turn
மழை காலங்களில்...மன்னிக்கவும் மழை காலம் என்பது கூட தவறு தான் மழை நேரங்களில் என்று தான் சொல்லவேண்டியுள்ளது.. (தற்போது மழை நீண்ட கால அளவுகளில் பெய்வதில்லையே) இப்போதெல்லாம் மழையில் அளவும் குறைந்து விட்டது என சொல்கிறார்கள்..இப்படியாக பெய்யும் சிறு மழையால் கூட நிம்மதி இல்லை நமக்கு.. கொசு தொல்லை.. தூக்கம் போச்சி.. டெங்கு வந்தாச்சி.. மலேரியா கண்டாச்சி..

என்ன ருசி! என்ன ருசி! ஹ்ம்ம்ம்!!

கொசு ஒழிப்பு சங்கம் வைத்தால் கூட போதாது. அது மனிதனை அழிக்கும் சங்கம் உருவாக்கி பல கிளைகள் அமைத்து  வெகுகாலம் ஆகிவிட்டது..
ஏதோ நம்மால் முடிந்தவரை போராடி ஒழிக்க இதோ சில யோசனைகள்:- (தினமலரில் இருந்து சுட்டது)


இப்போது ஆறிவிட்டது படிக்கலாம்

"தேங்கும் தண்ணீரில், சிறிதளவு மண்ணெண்ணெய் கலந்தால், "டெங்கு' காய்ச்சலை தடுக்கலாம்' "என, சுகாதாரத் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

 "கொசு முட்டை'யிலேயே, "டெங்கு' வைரஸ்கள் காணப்படுவதால், இதன் தாக்கம் அதிகரிக்கிறது. இதனால், கொசுக்களை புழுக்களாக இருக்கும் போதே அழித்தால் மட்டுமே, "டெங்கு' பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும். தற்போது, மழைக்காலம் துவங்கி விட்டதால், தேங்கும் நீரில் கொசுக்கள் முட்டையிட்டு, அதிகளவில் பரவும்".

தேங்கிய தண்ணீரில், 10 மி.லி., முதல் 20 மி.லி., மண்ணெண்ணெய் ஊற்ற வேண்டும். தொட்டி, பாத்திரங்களில் தண்ணீர் தேக்கி வைக்க வேண்டிய நிலை வந்தால், மண்ணெண்ணெய்க்கு பதிலாக, அதே அளவு தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றலாம். எண்ணெய், தண்ணீரின் மேற்பரப்பில் படர்ந்து, ஆக்சிஜன் செல்வதை தடுத்து விடும்; தண்ணீருக்குள் உள்ள கொசுப்புழுக்கள், ஆக்சிஜன் இல்லாமல் இறந்து விடும். தொட்டியை நன்கு சுத்தம் செய்து காய வைத்தாலும், மீண்டும் அதில் தண்ணீர் பிடிக்கும் போது, கொசுப்புழுக்கள் தோன்றும். புழுக்களை, எண்ணெய் படலம் மூலம் முழுமையாக அழித்து விட முடியும். "இதுபோன்ற முன் எச்சரிக்கையால், கொசு உற்பத்தியாகாது, "டெங்கு' பரவும் வாய்ப்பும் குறைவு' என, சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


உங்க வீட்டு பக்கத்திலும் மழைநீர் தேங்கி உள்ளதா? உடனே ஓடுங்க ஒரு பாட்டில் மண்ணெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்-உடன்... 
கொசுவால் வரும் கொசுறு (ஏற்கனவே மக்களுக்கு ஏகப்பட்ட வியாதி) வியாதிகளை ஒழிப்போம்!!!

அன்புடன்

சமீரா.

22 comments:

 1. மழை வந்தால் மழையில் நனைந்து நான் குதீயாட்டம் போட்ட காலங்கள் இப்ப நினைவுக்கு வருது. மழை அனுபவங்களோட ஒரு உபயோகமான தகவலையும் கொடுத்திருக்கறது வெகு சிறப்பு. குட்! கலக்கும்மா சமீரா.

  ReplyDelete
  Replies
  1. என் பதிவு உங்களை பின்னோக்கி அழைத்துசென்றதில் பெரும் மகிழ்ச்சி! வருகைக்கும் கருத்திட்டதர்க்கும் மிக்க நன்றி சார்..

   Delete
 2. மழையில் ஆட்டம் போட்டதெல்லாம் ஒரு காலம். இப்போ சின்ன தூறல் என்றால் ரசித்த படி வண்டி ஓட்ட பிடிக்கிறது. பெருமழையை விடுமுறை நாளில் வீட்டில் இருந்தால் ரசிக்கலாம்

  Follower-பட்டை இணைத்தது அறிந்து மகிழ்ச்சி

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சார்.. சிறுமழைக்கே நடமாட முடிவதில்லை... தூறலில் நடப்பது வண்டி ஓட்டுவது சுகம் தான்!!
   வருகைக்கு மிக்க நன்றி...
   //Follower-பட்டை இணைத்தது அறிந்து மகிழ்ச்சி// - நன்றி சார்.. முதலில் நான் ஒரு follower, பிறகு தான் பதிவர்..

   Delete
 3. மண்ணெண்ணெய்யா?
  ஹோ...கிரிஷ்ணாயிலா?
  அப்புடி தெளிவா பேசணும்... ஹி ஹி...

  ReplyDelete
  Replies
  1. ஹய்யோ.. சாரி சீனியர்.. இனி கரெக்டா எழுதறேன் புரியும்படி... ஓகே-வா?

   Delete
 4. கவிதை எழுதுறேன் பேர்வழின்னு திரியரவங்க எல்லாருக்கும் மழை ஒரு வரம்...

  உன்னுடைய இந்த பதிவு என்னுடைய பழைய புலம்பல் ஒன்றை நினைவு படுத்திடுச்சு...

  சைக்கிள் ரிக்ஷா
  தார்ப்பாய் ஒழுகும் போது
  "ஏ..இந்த பக்கம் சாரல் அடிக்குதுடா..
  நா அந்த பக்கம் ஒக்காந்துக்கவா?"
  என்று கெ(கொ)ஞ்சி
  சன்னமாக நனைத்துவிடுவாய்..

  பள்ளிவளாகத்தில் ஓரமாய்
  மழைநீர் தேங்கியிருக்க
  என் நான்கு-கோடு நோட்டு முழுதும்
  உனக்கான கப்பல்களாக மாறிக்கொண்டிருக்க,
  "உன்ன மிஸ் அடிக்கபோறாங்க"
  என்று சொல்லிக்கொண்டே கப்பல்விடுவாய்...

  அடைமழை பொழியும்
  நாளொன்றில் அதிகாலை
  அலாரம்போல தொலைப்பேசிடுவாய்,
  "நா ஸ்கூலுக்கு போகல..
  நீ..?" நான் பதில் சொல்வதற்குள்,
  "நீயும் போகாத டா.."

  பருவம் எய்திய பின்னான
  மழை பருவங்களில்
  உன் துப்பட்டாவின் தலை துவட்டலுக்கென்றே
  மழை நின்றால் வழியில்
  மரத்தடியில் காத்திருந்து,
  தொடர்ந்ததும் பயணத்தை தொடர்ந்திருக்கிறேன்..

  வாகனத்தில் என் பின்னமர்ந்து
  பறவை போல் காற்றில் கை விரித்து
  ஊசி ஊசியாய் தூறல் விழும் பொழுதொன்றில்
  "வேகமா ஒட்டு...இன்னும் " என
  நீ உசுப்பியதன் விளைவாய்
  கீழே விழுந்து காயங்கண்டு சிரித்திருக்கிறோம்..

  இப்போதெல்லாம் மழையின் அறிகுறியிலேயே
  ஏனோ நான் தலைமறைவானாலும்
  என் முழங்கால் தழும்பை
  பார்க்க தூண்டி ஒரு கணம்- மெலிதாய்
  புன்னகைக்கதான் செய்துவிடுகிறது
  உன்னுடன் நனைந்த அந்த
  மழைகளின் வாசம்....

  எப்பூடி....?

  ReplyDelete
  Replies
  1. எப்பூடின்னா கேக்கறீங்க... எக்ஸலண்ட் தம்பி!

   Delete
  2. வாவ் சூப்பர்... என் மழை பதிவையே பின்னுக்கு தள்ளிவிட்டதுப்பா உங்க கவிதை(?).. இது வெறும் கவிதையா இல்லை அனுபவ கவிதையா?

   Delete
  3. ம்க்கும்... என் அனுபவத்தைதான் மேடை போட்டு சொன்னேனே...:)

   Delete
  4. ஹ்ம்ம்... ஆனாலும் உங்க அனுபவம் கற்பனை ரெண்டுமே ரசனையாக தான் இருக்கு.. நினைவுபடுத்தி வெளியிட்டதற்கு நன்றி...

   Delete
 5. தோழி உன் வரிகள் முதலில் பின்னோக்கி பயணிக்க வைத்து சற்றென்று முன்னோக்கி வந்து எதார்த்தை பார்க்க வைக்கிறது பயனுள்ள விழிப்புணர்வு பதிவு சமூக நோக்கில் அடி எடுத்து வைத்திருகிறீர்கள் அடுத்த அடுத்த பல நல்ல உள்ளங்களை உங்கள் எழுத்துக்கள் மூலம் சேகரிக்கவும் பல நல்ல கருத்துகளை உலகம் அறியவும் செயல்படுங்கள் ......வாழ்த்துக்கள்்

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கு நன்றிகள் தோழி.. அழாகான நடையில் பதில் அளித்துவிட்டீர்கள்..மிக்க மகிழ்ச்சி.. நிச்சயம் நல்ல பதிவுகளுடன் மீண்டும் சந்திக்கிறேன்..

   Delete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. எச்சரிக்கை!!! என்று ரிப்போர்ட் தலைப்பு வைத்துவிட்டு... சிறு வயது ஞாபகத்தை எழுப்பிவிட்டீர்கள் சமீரா. எந்த நேரத்திற்கும் பொருந்தும் பதிவு...

  நல்லதோர் பகிர்வு.
  சிறந்த தொடக்கம்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி வினோத்.. கொஞ்சம் டெரர்-ஆ இருக்கட்டுமேனு தான் அந்த தலைப்பு.. மத்தபடி நான் ரொம்ப சாப்ட்(?)....

   Delete
 8. மழை காலங்களில்...மன்னிக்கவும் மழை காலம் என்பது கூட தவறு தான் மழை நேரங்களில் என்று தான் சொல்லவேண்டியுள்ளது.

  அருமையாக நிறுத்தியுள்ளீர்கள். அப்பொழுதெல்லாம் மழைக்கு உண்மையில் காலம் இருந்தது. இப்பொழுதெல்லாம் மழைக்கு காலமே இல்லை. பருவ மழை என்ற ஒன்று வார்த்தையில் மட்டுமே உள்ளது.
  சிறு வயதில் பாடப் புத்தகத்தில் படித்த நியாபகம்.ஒரு பாடலில் தலைவனுக்கும் தலைவிக்குமாக அமுதம் பற்றிய உரையாடல் நிகழும் இறுதியில் விண்ணுலகில் இருந்து மண்ணுக்கு வந்து நம்மையெல்லாம் வாழ வைக்கும் மழையே அமுதம் என்று அந்தப் பாடல் நிறைவுறும். அந்தப் பாடலை நினைவுப்படுத்தியிருக்கிறது உங்களின் எழுத்து. தொடர வாழ்த்துக்கள்

  அது மட்டுமின்றி எனக்கும் ஒரு பதிவை தந்திருக்கிறது. சென்று பார்க்கவும்.

  http://tamilraja-thotil.blogspot.com/2012/09/blog-post_15.html

  ReplyDelete
  Replies
  1. சரியாக சொன்னீர்கள் பருவ மழை என்ற வார்த்தை வழகொழிந்து பல வருடங்கள் ஆகிவிட்டன...தற்போது என்ன காலநிலை என்பது கூட சரிவர சொல்லமுடியா நிலை தான்....

   அழகாக கருத்திட்டதற்கு நன்றிகள்... மழை கவிதை அருமை!

   Delete
 9. என்னே? தேங்கி நிற்கும் நீரில் மண்ணெண்ணெய் ( கிரிஷ்ணாயில) ஊதுறதா? இப்பவே மண்ணெண்ணெய் கிடைப்பதில்லை, ஒரு ஊருக்கு ஊத்தனுமுன்னா ஒரு பாரளுக்கு மேல தேவை படுமே! வேற வேற எதாச்சம் இருந்தா சொல்லுங்க

  ReplyDelete
  Replies
  1. நல்ல ஐடியா சொல்றேன் அடிக்க வரலன்னா.. பேசாம நம்ம மேல மண்ணெண்ணெய் கொஞ்சமா தடவிகிட்ட இல்ல கொஞ்சம் ஊத்திகிட்ட , பாரல் அளவுக்கு தேவைபடாதுள்ள??? எப்படி என் யோசனை??

   Delete
 10. இந்த யோசனை இன்னும் அதிக செலவு வைக்கும், நம்ம நாட்ல மக்கள் தொகை அதிகம், ஒவ்வொரு தெருவிலும் தண்ணீர் தேங்கி நிற்பதும் அதிகம், வேற வேற எதாச்சம் இருந்தா சொல்லுங்க!

  ReplyDelete