Ads 468x60px

Wednesday, September 12, 2012

தனிமையும் தவிப்பும்!!!

தனிமை- இதை முன்னிறுத்தி எழுதாத கவிர்களோ  இலக்கியவாதிகளோ இருக்கவே முடியாது எனலாம்.. தனிமையில் கற்பனை, கவிதை, கட்டுரை, நாடகம் மட்டும் தான் வருமா? தனிமை நோயைகூட வரவழைக்கும்.. அது நோயின் உச்ச நிலையைக்கூட அடையச்செய்யும். ஆம், தனிமையில் உள்ளபோது வரும் உடல் உபாதைகளால் சில நேரங்களில் மரணம் கூட மிகச்சாதாரணமாக நிகழும்..

நான் தனிமையை பற்றி எழுத வரவில்லை, தனிமையில் இருக்கும் போது வரும் உச்சநிலையை கையாளுவதற்கான உத்திகளை பற்றி பகிர வருகின்றேன்...
இதோ தனிமையிலோ அல்லது வெளியிலோ யாரும் உதவ முடியாத சுழலில் உள்ளபோது நம்மை ஆட்கொள்ளும் (ஆட்கொல்லும்) மாரடைப்பை சமாளிக்க சில வழிமுறைகள்:-

அலுவலக பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு வந்து தனியாக இருக்கிறீர்கள், அலுவலகத்தில் ஏற்பட்ட வேலைப்பளு டென்ஷன் காரணமாக மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது. நீங்கள் படபடப்பாகவும் தோய்வாகவும் உள்ளீர்கள். திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலியை உணர்கிறீர்கள். அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணர்கிறீர்கள், உங்கள் வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு உங்களால் தனியாக பயணிக்க இயலாது...  தாறுமாறாக துடிக்கும் உங்கள் இதயத்தால், சுயநினைவை இழக்க வெறும் 10 -நொடிகள் தான் இருக்கிறது.

நீங்கள் செய்ய வேண்டியது : தொடர்ச்சியாக மிகவும் ஆக்ரோஷமாக இரும வேண்டும். ஒவ்வொடு முறையும் இருமுவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும். இதயம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரையிலோ அல்லது மற்றொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமிக்கொண்டே இருக்க வேண்டும்.

 
மூச்சை இழுத்து விடுவதனால் நுரையீரலுக்கு ஆக்ஸிஜன் சீராக செல்ல வழிவகுக்கும். இருமுவதால் இதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்த ஓட்டம் சீரடையும். இருமுவதால் ஏற்படும் அதிர்வால் இதயம் சீராக துடிக்கும். சீரானதும் உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று விட வேண்டும்.. இதை நினைவில் வைத்துக்கொண்டால் தனியே செல்லும் போதும் சற்று தைரியமாக செல்லலாம்.

 நன்றி: தினத்தந்தி  
ஸ்ஸ்ஸ்ஸ்..அப்பாடா!!!  பதிவு எழுதி முடிப்பதற்குள் நான் பலமுறை இரும வேண்டியதாக போயிற்று!!! மாரடைப்பு - கொடுமையான வியாதி தான் (ஹிஹிஹி - நான் தலை வலி வந்தாகூட இப்படி தான் சொல்வேன்).

மீண்டும் ஒரு பொன்னான தலைப்புடன் சந்திக்கிறேன்!

அன்புடன்
சமீரா.

20 comments:

 1. ஆமாம். தனக்கென்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டால் என்ன செய்வதென்று எவருக்கும தெரியாது. பயத்தில் இதயத்தை இன்னும் துடிக்க வைத்து படபடப்பைக் கூட்டி நோயை அதிகப்படுத்திக் கொள்வதுதான் நடக்கக் கூடியது. இந்த டிப்ஸ் மனதில் பதித்து வைத்துக் கொண்டால் நிச்சயம் உதவக் கூடியதுதான். அருமையான பகிர்விற்கு மிக்க நன்றிம்மா.

  ReplyDelete
  Replies
  1. சரியாக சொன்னீங்க சார்.. விஷயம் தெரிஞ்சவங்க கூட அந்த நேரத்து படபடப்பில் மறந்திடறாங்க அதான் துரதஷ்டம்... கருத்திற்கு நன்றிகள் சார்..

   Delete
 2. எழுத வந்தாச்சா? அப்படி போடு :-)

  ReplyDelete
  Replies
  1. உங்களையெல்லாம் பார்த்த உற்சாகம் தான்.. நன்றி ஆமினா..

   Delete
 3. முதலில் நான் பார்த்த பதிவென்றாலும்,இதற்கு முந்தையப் பதிவையெல்லாம் பார்த்துவிட்டே இதற்கு பின்னூட்டமளிக்கிறேன்.

  உண்மையில் தனிமைக்கும் இதய நோயிற்கும் நெருங்கியத் தொடர்புண்டு....
  அதை விளக்கமாக பதிவிட்டுள்ளீர்கள்.
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. பதிவினை படித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றிகள்...

   Delete
 4. நல்ல பல பயனுள்ள பதிவுகளைத் தொடர்ந்து வழங்குவதற்கும் பிழையில்லாத அழகுத் தமிழில் எழுதுவதற்கும் மனம் நிறைந்த பாராட்டுகள் சமீரா.

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி...

   Delete
 5. இருதய வலி வரும் அந்த சமயத்தில் இதெல்லாம் நினைவுக்கு வருமா என்ற தெரியவில்லை. இதைப் படித்தவர்கள் பிறருக்குச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.

  யாருக்குமே இந்த மாதிரி தனிமையில் தவிக்கும் நிலை ஏற்பட வேண்டாம்!

  நல்ல பதிவு சமீரா!

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக அந்த பதட்டத்தில் நினைவு வர வேண்டும்.... இந்நிலை யாருக்கும் வராமல் இருப்பது நலம்.. நன்றி அம்மா!!

   Delete
 6. அன்பின் சமீரா - அருமையான ஆலோசனை - ஆனால் எல்லோரும் கூறிய படி - அந்த சூழ்நிலையில் நினவிற்கு சட்டென்று வராது. அச்சூழ் நிலையில் ஆக்ரோஷமாக இரும இயலாது - இருப்பினும் நினைவில் வைத்துக் கொண்டு முயலலாம் - தகவல் பகிர்வினிற்கு நன்றி சமீரா - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. சூழ்நிலை நமக்கு நினைவு படுத்த வேண்டும் அது தான் கடினம்...
   மிக்க நன்றி ஐயா..

   Delete
 7. பயனுள்ள பகிர்வுகள் !

  ReplyDelete
 8. இதய வலி வரும்பொழுது இரும வேண்டுமா ?
  அடடா ?
  ஒரு ஐம்பது வருஷத்துக்கு முன்னாடி தெரியாம போய் திண்டாடியது
  நினைவுக்கு வருகிறது.

  என்ன சொன்னீர்கள் ?
  இது அந்த இதய வலி இல்லையா ?
  ஓ !! ஸாரி...
  நெசமாலுமே நெஞ்சு வலியா ?

  உடனே ஒரு ஆஸ்பிரின் மாத்திரை 50 கிராம் அல்லது 75 கிராம் அதிக பட்சம் 100 கிராம்
  போட்டுக்கொள்ளுங்கள்.

  ஆட்டோ புடியுங்கள். ( ஆட்டோ ஓட்டுனரிடம் வாடகை பற்றி சர்ச்சை வேண்டாம். ஒவ்வொரு நிமிடமும்
  முக்கியமானது)

  காஷுவாலிடி வார்டுக்கு விரையுங்கள். இந்த அட்வைஸ் 60க்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டும்.

  என்னைப்போல கிழங்களுக்கு,....

  என்னிக்கும் போப்பறோம்.
  இருதய வலி வருபவன் புண்ணியம் பண்ணினவன்.
  இருபதே நிமிஷத்திலே இவ்வுலகு நீங்கி அவ்வுலகம் செல்பவன்.
  ஆமாம். ...அது இருக்கட்டும்...
  போற இடத்துலே

  வலைப்பதிவு படிக்கிற வசதி இருக்கா ?

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. தாத்தா சார்.. நீங்க எழுத்துல ஒரு தாதா சார்...
   சீரியஸ்-ஆ சொல்ல வரிங்கன்னு பயந்தேன்.. இப்படி சிரிக்க வச்சிடீங்க... 60 இல்ல இந்த காலத்து டென்ஷன்
   -கு 20 கூட அஸ்பிரின்-ஐ கைக்குட்டை போல தயார வச்சிக்கணும்...

   நன்றி தாத்தா..ப்ளீஸ் இப்படியே கூப்பிடறேன் எனக்கு தாத்தாவே இல்ல...

   Delete
 9. ஆமா இதய வலி வரும் போது இதெல்லாம் சிந்திக்க முடியுமா தெரியள சகோ ஆனாலும் விழிப்புணர்வு தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete