Ads 468x60px

Friday, December 28, 2012

தமிழகம்- 2012 டாப் 10 சம்பவங்கள் - வீடு திரும்பல் பதிவுவெகு நாட்களுக்கு பிறகு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்!!


இந்த ஆண்டில் தமிழகத்தில் நடந்த முக்கிய அல்லது குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை வீடுதிரும்பளுக்காக எழுதியுள்ளேன். இன்று வீடுதிரும்பலில் வெளியாகி உள்ளது. இந்த வாய்ப்பினை அளித்த மோகன் குமார் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!!!

பின்வரும் பதிவு இன்று வீடுதிரும்பலில் வெளியாகி உள்ளது.


 அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


கடந்த ஆண்டில் தமிழகத்தில் நிகழ்ந்த சில குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை அசைபோடுவதே இப்பதிவு!!


நல்லதும் சங்கடங்களும் நிறைந்த பத்து நிகழ்ச்சிகளை உங்களுடன் பகிர்கிறேன்.

1. கூடங்குளம் சார்ந்த நிகழ்வுகள் - இந்த அணுவுலை ஆரம்பிக்கப்பட்டபோது அதைப்பற்றி அறிந்தவர் மிக குறைவு. இப்போது அதற்கு எதிர்ப்பு வந்த பிறகு தெரியாதவர்கள் மிக மிக குறைவு. உச்சநீதி மன்றம் தனி நபருக்கு தீங்கு ஏற்பட்டாலும் அதை தொடர்ந்து செயலாற்றுதல் கூடாது என கூறியும், இன்னும் மூடப்படாத கூடங்குளம் அணுவுலை மக்களுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தல் தான்...! இவ்வளவு எதிர்ப்புக்கு பின்னும் அங்கு பணி தொடர்வது நம் அரசியலைப்பு சட்டம் ஒரு விசித்திரமானது என விளங்க வைக்கிறது! 

2. காவிரி நதி நீர் - காவிரி உற்பத்தியாவது மட்டுமே கர்நாடகம். அது பாய்ந்து வளம் கொழிப்பது தமிழ்நாட்டில். அணைபோட்டு தடுக்கும் உரிமையை யார் கர்நாடகத்திற்கு கொடுத்தது எனபது மட்டும் விளங்கவில்லை. காவிரி நதிநீர் ஆணையம், உச்சநீதி மன்ற தீர்ப்பையும் மீறி நடக்கும் தைரியமும் ஒரு தனி மாநிலத்திற்கு இருப்பது நம் நாட்டின் சட்ட திட்டத்தில் இருக்கும் உறுதி மற்றும் நிலைபாட்டை காட்டுகிறது!!!!!

3. அந்நிய முதலீடிற்கு ஆதரவு தரும் நம் மாநில கட்சிகள். இருநூறு ஆண்டுகள் நாம் அடிமை பட்டது போதாது இன்னும் சில நூறு ஆண்டுகளாவது பிறர் பிடியில் நாம் இருக்க வேண்டும் என நினைக்கும் அற்ப மனிதர்களின் சூழ்ச்சிகள்.. வால்மார்ட் அதிகார பூர்வமாக அறிவிக்கும் முன்பே சில இடங்களில் அதற்கான விற்பனை கிடங்குகள் தொடங்கப்பட்டு, அதற்கான கார்பரேட் அட்டைகள் வழங்கப்பட்டதற்கு நானும் ஒரு சாட்சி தான்.

4. பள்ளிகளில் நடக்கும் கொள்ளைகள் - கட்டண தொல்லைகள் அனைவரும் அறிந்ததே! சமீப காலத்தில் அனைவரையும் திகிலடைய செய்த ஒரு சம்பவம் பள்ளி பேருந்தின் மோசமான பராமரிப்பு. பிள்ளைகளின் பாதுகாப்பு, பெற்றோர்களின் நேரமின்மை கருதி பள்ளி வாகனங்களில் பெற்றோர் அனுப்புகின்றனர். ஆனால் அதற்கும் இப்போது பயப்படும் நிலையை ஏற்படுத்தியது: பள்ளி மாணவி பேருந்து ஓட்டையில் விழுந்து உரிழந்த சம்பவம்! மாணவியின் பெற்றோர் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரையும் உலுக்கிய துயர சம்பவம் அது. இதற்கு காரணம் பள்ளி நிர்வாகமா? உரிமம் அளித்த RTO அலுவலகமா? தெரியவில்லை !

5. ஒரு பள்ளி மாணவன் தன ஆசிரியையை கத்தியால் குத்தி கொலை செய்த நிகழ்ச்சி பள்ளியில் நிகழ்ந்த இன்னொரு கொடுமை ! அவன் இந்த வழியை கையாண்டதற்கு சொல்லும் காரணம், அச்சமயம் அவன் பார்த்த ஒரு இந்தி படத்தில் இப்படி ஒரு காட்சி இருந்ததாம். அவனும் அதையே பின்பற்றினானாம் ! உண்மையில் அவனை தூண்டியது அவனுள் இருந்த ஆசிரியரின் மேலான காழ்ப் புணர்ச்சியா? சினிமாவின் தாக்கமா? பெற்றோரின் அரவணைப்பின்மையா? அல்லது ஆசிரியரின் அணுகுமுறையா? இதில் எல்லோருக்குமே பங்கு உண்டு என்றே தோன்றுகிறது. என்று தீருமோ இது போன்ற அனர்த்தங்கள்?????


**************************************************************************************************
என்னடா புத்தாண்டில் இப்படி ஒரு சோகமயமான நினைவுகளையே அசை போடவைத்து விட்டதாக எண்ண வேண்டாம். சில நினைவுகள் கசப்பாக இருந்தாலும் அவை பாகற்காய் போன்று பயனுள்ளது. ஒரு விழிபுணர்வுக்கு வழிவகுப்பது. 

நெல்லிக்காய் கடிக்கும் பொது அதன் சுவை முகம் சுளிக்க வைத்தாலும், கடைசியில் தொண்டையை விட்டு இறங்கும் போது இனிக்கவே செய்யும். அதுபோல சில நல்ல தகவல்களை அடுத்த ஐந்தாக தருகிறேன்.

6. TNPSC - எனும் அரசு வேலைவாய்ப்பு முறையில் ஏற்பட்ட மாற்றம் பாராட்டத்தக்கது. கணினி மயமாக்கப்பட்டதால் தற்போது தேர்வு எழுதிய அனைவரும் தாங்களே தங்களின் cut-off எனப்படும் மதிப்பெண் விபரங்களையும், தாங்கள் தேர்வு செய்யப்பட்டதையும் (Ranking) எனப்படும் தகுதி நிலை ஆகியவற்றை தெளிவாக அறியலாம். இதன் மூலம் இடைத்தரகர்களால் நடக்கும் முறைகேடுகள் நடக்க வாய்ப்புகள் கிடைப்பதில்லை. 


7. மேலும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கவுன்செல்லிங் அந்தந்த மாவட்டங்களிலேயே நடைபெற்று, பெண் ஆசிரியர்களின் போக்குவரத்து சிரமங்கள் குறைக்கப்பட்டுள்ளது. அவர்களின் பணி நியமன ஆணையும் அந்தந்த மாவட்டங்குளுக்கு தனி போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டு சென்னையில் வழங்கப்பட்டது.

8. பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை அவர்களின் பெயரில் நேரிடையாக வங்கிகளில் வழியாக வைப்பு நிதியாக கொடுக்கபடுகிறது. மேலும் சத்துணவில் 13 வகையான உணவுகள் சேர்க்கப்படவுள்ளது. சத்துணவு மாணவர்களுக்கு அந்தந்த பள்ளி சீருடைகள் இலவசமான வழங்கபடுகிறது. ஆனாலும் இதெல்லாம் நல்லபடி சரியான முறையில் பயனாளர்களுக்கு சென்றடைய வேண்டும் அது தான் நமது வேண்டுகோள்!!!


9. இந்தியாவிலேயே முன்னோடியாக மாற்று திறனாளி குழந்தைகளுக்கு மாநில ஆதார வள மையம் தமிழ்நாட்டில் மே மாதம் தொடங்கப்பட்டு செயல்பட்டுவருகிறது. மன நலம் குன்றிய குழந்தைகளுக்கான இந்த பள்ளியில் அவர்களின் எதிர்காலத்திற்கு வித்திடும் வகையில் இந்த மையம் செயல்பட்டு வருவது பாராட்டத்தக்கது. இதில் என் நெருங்கிய உறவினர் குழந்தையும் பயன்பெற்றுவருகிறான். 


10. எய்ட்ஸ் விழிபுணர்வுக்கான செஞ்சுருள் விரைவு ரயில் டெல்லி-யில் இருந்து புறப்பட்டு தமிழ்நாட்டில் சென்னையில் முகாமிட்டு கன்னியாகுமரி -யில் தன் விழிப்புணர்வு பயணத்தை நிறைவு செய்தது. எய்ட்ஸ், காசநோய், மலேரியா, பன்றி காய்ச்சல், மகபேறு, குழந்தை நலம் சார்ந்த விழிபுணர்வுகள் மக்கள் மத்தியில் ஏற்படுத்த இளைஞர் தினத்தன்று இந்த முகம் நடைபெற்றது. 


இறுதியில் மிக முக்கிய ஒரு தினத்தை நினைவுகூர்ந்து இந்த பதிவினை நிறைவு செய்கிறேன். ஆகஸ்ட் 26-ம் நாள் சென்னையில் நடைபெற்ற முதல் தமிழ் பதிவர் தினம் இந்த ஆண்டின் மறக்க முடியாத நாள் என்றால் அது மிகையில்லை. பல நட்புகளையும் உறவுகளையும் அறிமுகபடுத்திய அற்புத தினம் அது!!! 


இந்த ஆண்டில் மீண்டும் ஒரு பதிவர் சந்திப்பில் அனைவரையும் சந்திக்கும் ஆவலுடன் விடைபெறுகிறேன்.


நன்றி!!!!

அன்புடன் 
சமீரா

6 comments:

 1. சமீரா அனைத்து தகவல்களும் அருமை.
  அதிலும் ஆசிரியர் தகுதித் தேர்வு கவுன்சிலிங்க் பற்றி அறிந்தது மகிழ்ச்சி.

  தமிழ் பதிவர் சந்திப்பு ஆகஸ்டு 28 அல்ல 26 ஆம் தேதி நடைப்பெற்றது.அந்த சந்திப்பை என்னாலும் மறக்க முடியாது.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ராஜா.. தேதி மாற்றிவிட்டேன்!!

   Delete
 2. கசப்பு இனிப்பு இரண்டும் சேர்ந்தது தான் வாழ்க்கை என்பது போல சென்ற ஆண்டின் ப்ளஸ், மைனஸ் இரண்டையும் அலசிச் சொல்லியிருப்பது அருமை சமீரா. இந்த ஆண்டும் நினைவில் நிற்கும் ஒரு சந்திப்பு நிகழ வேண்டும் என்பது தான் என் ஆசையும்! உனக்கு என் அட்வான்ஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்மா!

  ReplyDelete
  Replies
  1. ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்... வெகு நாட்களுக்கு பிறகு உங்களை பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி... நன்றி!!!

   Delete
 3. அன்புள்ள சமீரா,
  இன்னொரு முக்கியமான, மகிழ்ச்சிக்குரிய செய்தியை 11 வதாகப் போட்டுக் கொள்.
  பதிவர்களின் எழுத்துக்களைப் படித்து ரசித்து பின்னூட்டம் மட்டும் போட்டு வந்த நீ பதிவர் ஆனது!

  வரும் ஆண்டு உனக்கு எல்லாவகையிலும் ஏற்றம் அளிப்பதாக அமையட்டும்.


  புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. கண்டிப்பாக அந்த நிகழ்ச்சி ஒரு நல்ல திருப்பம் எனக்கு!! நன்றி அம்மா!!

  ReplyDelete