Ads 468x60px

Monday, March 4, 2013

வெங்காய வியாபாரி


ஹாய்!

நான் படித்து ரசித்த ஒரு பகுதியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
************************************************************************************************************
பதவி : கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை...!

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.

தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.
‘ஈ மெயிலா? எனகக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லயா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.

வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பன. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.

இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்பதன் சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார். 

வியாபாரி, ‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க,

‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…?’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.

‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைததுக் கொண்டிருப்பேன்’ என்றார் வியாபாரி.!

************************************************************************************************************
எங்க அம்மாகூட கம்ப்யூட்டர் பத்தி ஒன்னும் தெரியலயேன்னு கஷ்டபடுவாங்க...நல்ல வேலை அவங்களுக்கு தெரியாததே!! தெரிஞ்சிருந்தா நல்ல சாப்பாடு கிடைக்காம போயிருக்கும்!!

அன்புடன் 
சமீரா...

18 comments:

 1. This is inspired by Somerset Maugham's "The Vereger" story?

  ReplyDelete
 2. நாட்டு நடப்பு அழகிய கதையில்

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றி சௌந்தர் சார்..

   Delete
 3. நல்ல கதை. மின்னஞ்சலில் இது போன்றே ஒரு கதை வந்தது முன்பு....

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் இது மின்னஞ்சலில் வந்தது தான் சார்..கண்டுபிடிச்சிடீங்களே.. வருகைக்கு மிக்க நன்றி!

   Delete
 4. நல்ல கதை .படிக்க சுவாரஸ்யமாக இருந்தது.

  ReplyDelete
 5. சூப்பர் கதை கதைக்கு பிறகு கடைசியில் ஓவர்

  ReplyDelete
  Replies
  1. என்னங்க பண்றது.. எது எப்படி இருந்தாலும் வயிறு தான் முக்கியம்!!

   Delete
 6. ‘பெயரில்லாதவர்’ சொன்னது சரி சமீரா. ஸாமர்ஸெட் மாம் கதையில் சர்ச்சில் மணியடிப்பதற்கு வரும் ஒருவனை கையெழுத்து போடத் தெரியலைன்னு வேலையில சேத்துக்க மாட்டாங்க. அவன் திரும்பி போகும்போது அந்த ஏரியாவுல பெட்டிக் கடை எதும் இல்லைங்கறதை கவனிச்சு சின்ன கடை ஆரம்பிப்பான். அதுல படிப்படியா வளர்ந்து கோடீஸ்வரனானதும் பேங்குக்குப் போறப்ப, பேங்க் மானேஜர் ‘‘கையெழுத்துப் போடத் தெரியாமயா இவ்வளவு பணம் சம்பாதிச்சீங்க? உங்களுக்கு மட்டும் கையெழுத்துப் போட தெரிஞ்சிருந்தா?’ன்னு கேக்க, ‘‘மாதா‌ கோயில்ல மணியாட்டிட்டிருந்திருப்பேன்’’ன்னு அவன் பதில் சொல்வான். -இந்தக் கதையோட தாக்கத்துல உருவானது நீ படி்ச்சு ரசிச்சு பகிர்ந்திருக்கிறது. ஆனாலும் சொல்லப்பட வேண்டிய அருமையான கருத்துதான்!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சார், நீங்க சொன்ன கதையில இருந்து காப்பியடிச்சது தான் இந்த கதை நினைக்கறேன்!! எட்டே வரில கதைசுருக்கதையே கொடுத்துடீங்க.. நன்றி சார்

   Delete
 7. அழகிய கதை..
  பகிர்வுக்கு நன்றி சகோதரி..

  ReplyDelete
 8. நல்லாச் சொன்னாரு வெங்காய வியாபாரி!

  ReplyDelete
 9. எனக்கு வந்த மெயிலில் தக்காளி விற்று பணக்காரர் ஆனார் என்று இருந்தது. சரி எதானால் என்ன, அன்பு சமீராவிற்கு ஒரு பதிவு போட உதவினாரே அதற்கு அவருக்குப் பாராட்டு!

  பதிவு போட்ட சமீராவிற்கும் பாராட்டு!

  ReplyDelete