Ads 468x60px

Tuesday, January 1, 2013

நந்தவனம்: முள்பாதை - மொழிபெயர்ப்பு நாவல்!



புத்தாண்டில் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி!!!

சமீபத்தில் நான் படித்த ஒரு மொழிபெயர்ப்பு நாவல் பற்றிய என் கருத்தை இங்கு பகிர்கிறேன்.

எவ்வளவு படித்தாலும் அவற்றில்  சில மட்டுமே மற்றவருடன் பகிர்ந்து கொள்ள மனம் விரும்பிடும். அப்படிப்பட்ட நாவல் தான் இப்போது உங்களுடன் நான் பகிர்ந்துகொள்வது.

தெலுங்கு நாவல்கள் பல படைத்து "நாவல் ராணி" என எல்லோராலும் புகழப்படும் திருமதி. யத்தனபூடி சுலோச்சனா ராணி அவர்களின் நாவலை தமிழில், திருமதி. கௌரி கிருபானந்தன் "முள்பாதை" என்ற பெயரில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். இதுபோல சுலோச்சனா ராணி அவர்களின் பல நாவல்களை திருமதி கௌரி அம்மாவினால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 


கௌரி கிருபானந்தன்
முள்பாதை எனும் நாவல் பற்றிய என்னுடைய பதிவு உங்களுக்காக:-

கதை சுருக்கம்: 
மீனா என்கிற மீனாக்ஷி - பிரபல வக்கீல் திரு. ஆனந்த ராவ், மகளிர் சங்க தலைவி திருமதி. கிருஷ்ணவேணி தம்பதிகளின் ஒரே செல்வ மகள். மிக செல்லமாக வளர்க்கப்பட்டவள். அதே சமயத்தில் அவளின் ஒவ்வொரு அசைவும் அம்மாவால் செதுக்கப்பட்டது. நடை, உடை, பாவனை பழகும் விதம் எல்லாம் கிருஷ்ணவேணி அம்மாவின் கட்டளைப்படியே நடக்கிறது. 

இந்த நாவல் முழுவதும் "தன்வினையில்" மீனா விவரிப்பது போலவே பயணிக்கிறது. இது என்னையே மீனாவாக உணர வைத்தது.


மீனாவின் மேல் அவளின் அம்மா செலுத்தும் ஆதிக்கம் "தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்த சந்தோஷ் சுப்ரமண்யம் திரைப்படத்தை நமக்கு நினைவுபடுத்துகிறது. ஒருவேளை  இந்த நாவலின் தழுவலாகவே தெலுங்கில் இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கலாம். 

தன சுய விருபத்திற்கு இடமளிக்காமல் அம்மாவின் ஆசைக்கு அனைத்தையும் செய்யும் மீனா, ஒரு கட்டத்தில் அம்மா மீது அதீதமாக கோபமடைகிறாள்.  அம்மாவினால் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை என்ற காரணத்தினாலேயே சாரதியை மணக்க மீனா விரும்பவில்லை. இதனால் அவன் தன் வீட்டில் தங்க வரும் நேரத்தில், அப்பாவின் ஒன்று விட்ட தங்கையான கமலாவின் வீட்டிற்க்கு முதல் முறையாக பயணமாகிறாள் மீனா. மேலும் வெளியூர் சென்ற தன் தாயாருக்கு தெரியாமல் அப்பாவின் உதவியோடு பயனப்படுகிறாள். இதுவே அவள் வாழ்கையின் திசையை மாற்றுகிறது. 

மீனா அப்பா பற்றி சொல்லியே ஆகவேண்டும். அவர் பிரியமான கணவர். அன்பான அப்பா. தன் சுயத்தை இழந்தவர் 'வீட்டில்' மட்டும். மனைவியின் மீது கொண்ட அன்பால் தன் தங்கை குடுபத்துடன் நேரடியான உறவு பலத்தில் இல்லாமல், தங்கையின் கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த மகனான கிருஷ்ணன் மூலமாக உறவை தொடர்கிறார். கிருஷ்ணன் அவர் தங்கை குடும்பத்தில் தூண். தந்தை மறைவுக்கு பின் மூன்று தங்கைகளையும் பாதுகாக்கும் பொறுப்புள்ள மூத்த மகன்.

மீனா தஞ்சை பக்கத்தில் உள்ள சிறு கிராமத்தில் வசிக்கும் தன் அத்தை வீட்டிற்க்கு ஒரு வாரம் விருதாளியாக செல்கிறாள். அங்குள்ள எளிமை, ஒருவர் மீதான மற்றவரின் பாசம், பற்றுதல் அவளை ஈர்க்கிறது. நகரத்தில் தன் குடும்பத்தில் இல்லாத ஒன்றான பாசம் பரிவு இவற்றை அந்த கிராம வீடு அவளுக்கு கொடுகிறது. 

அத்தை மகள் ராஜியுடன் அவள் நெருங்கி பழகி உயிர் தோழியாகிறார்கள்.  இருவருக்கும் இடையே அழகான ஒரு பூ நட்பாக மலர்கிறது.

ஆனாலும் அவளால் அங்கு நெருங்கமுடியாத உறவாக இருப்பது கிருஷ்ணன் தான். சில நாட்களில் இனம் புரியாத சண்டையில் இருக்கும் கிருஷ்ணன் மீது இன்னதென்று சொல்லமுடியாத ஒரு 'பூ' மலர்ந்து மணம் வீசுகிறது.  அதை அவர்கள் "நட்பு" என்கிறார்கள்.  ஒரு பக்கம் சாரதி-யுடனான திருமண ஒப்பந்தம் மறு பக்கம் கிருஷ்ணன். முடிவு எடுக்க முடியாமல் மீனா திண்டாடுகிறாள்.

இந்நிலையில் குத்தகை நிலத்தை சொந்தமாக்கிகொள்ளவும், தங்கையின் திருமணதிற்கு வரதட்சணை கொடுக்கவும் தன் சுயவிருப்பம் இல்லாமல் சுந்தரி என்ற பண்ணியார் பெண்ணை திருமணம் செய்ய கிருஷ்ணன் ஒப்புகொள்கிறான்.

தங்கையின் திருமண சமயத்தில் மீண்டும் மீனா மேலடூருக்கு  வருகிறாள். அந்த சமயத்தில் அப்பாவிடம் பேசி சண்டைபோட்டு அந்த குத்தகை நிலத்தை கிருஷ்ணன் பெயருக்கு மாற்றிய பத்திரத்துடன் கிருஷ்ணனை சந்தித்து கொடுக்க விரும்பியும் அவள் மீண்டும் வருகை தருகிறாள். ஆனால், விதிவசத்தால் அவள் தனிமையில் கிருஷ்ணனிடம் பேசிக்கொண்டிருப்பதை சுந்தரி பார்த்து, கோவபட்டதொடல்லாமல், தன் திருமணத்தையும் நிறுத்தி, மறுநாள் நடைபெறவிருக்கும் ராஜியின் திருமணத்தையும் நிறுத்துகிறாள். 

இதனால் மனமுடைந்து ராஜியை தன்னுடன் ஊருக்கு அழைத்து செல்கிறாள் மீனா. அங்கு சாரதி ராஜியின் அடக்கம் பண்பு இவரால் ஈர்க்கப்பட்டு, மீனவுடனான திருமணத்தை நிறுத்தும் வழி தெரியாது திண்டாடுகிறான்.

இதே நேரத்தில் மீனாவிற்கு கிருஷ்ணன் மீதான எண்ணமும் ஆவலும் வலுபெறுகிறது. ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கிருஷ்ணனை வற்புறுத்துகிறாள் மீனா. அம்மாவுடன் நின்று பேசகூட பயப்படும் மீனா தன் வாழ்கையை தன் இஷ்டபட்டவனுடன் தான் வாழ வேண்டும் என முதல் முறையாக முடிவெடுக்கிறாள். தன் உடுத்தும் உடை விஷயத்தில் கூட அம்மாவிடம் அறிவுரை கேட்டும் அவள் தன் வாழ்க்கை துணையை தாமாக தேர்வு செய்கிறாள். 


இப்படி பல சுவாரஸ்யமான சம்பவங்கள் உரையாடல்களுடன் பயணிக்கிறது இந்த நாவல். இறுதியாக மீனாவின் ஆசை நிறைவேறியதா? மீனாவின் அம்மா கிருஷ்ணனை பழைய பகை மறந்து ஏற்றுகொண்டாரா? என்பதுடன் நாவல் நிறைவு பெறுகிறது.

ஒவ்வொருவரின் மன நிலையையும் கண்ணாடி போல் காட்டியுள்ளார் ஆசிரியர். நாவல் முடியும் போது ஏதோ ஒரு சொந்தம் என்னிடம் விடைபெற்று செல்வது போல உணரமுடிந்தது.


நாவலில் வரும் சில வரிகள்:

"இருபது வருடங்களாக எங்க அம்மாவின் சொசைட்டியில் நான் கற்றுக் கொள்ளாத, புரிந்து கொள்ளாத பல விஷயங்களை இங்கே கவனிக்க முடிந்தது. அவை ரொம்ப சின்னச் சின்ன விஷயங்களாக இருக்கலாம். சாதாரண வாழ்க்கையில் அவற்றுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போகலாம். ஆனால் அவற்றின் பாதிப்பு நம்மையும் அறியாமல் நம்மீது பதிந்து விட்டிருக்கும்.

நான் வந்த ஓரிரண்டு நாட்களில் அத்தைக்கும் ராஜேஸ்வரிக்குமிடையே உள்ள பந்தம் எவ்வளவு மென்மையானதோ, எவ்வளவு உயர்வானதோ புரிந்து கொண்டேன். அத்தை சுபாவத்திலேயே குறைவாக பேசுபவள். வீட்டு விஷயங்களைப் பற்றி அவ்வப்பொழுது பெரிய மகனிடம் சொல்வதைத் தவிர மற்ற நேரங்களில் பேசியோ, பேச வேண்டும் என்ற ஆர்வம் இருப்பது போலவோ என் கண்ணில் படவில்லை."

இந்த நாவலில் என்னை கவர்ந்த கதாபாத்திரங்கள்: கிருஷ்ணன் - இவனை பற்றி அதிகம் நான் சொல்லவில்லை. ஆனால் அவனின் தெளிவான முடிவெடுக்கும் திறன், ஆழ்ந்த ஆறிவு நம்மை அவன் பக்கமாக ஈர்க்கிறது. "ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது" - படித்தால் மட்டும் போதாது, அயராத உழைப்பும் வாழ்க்கைக்கு அவசியம் என்பதற்கு எடுத்துகாட்டு - கிருஷ்ணன்.  

அடுத்து மீனா: புத்திசாலி பெண். அம்மாவின் கண்ணுக்கு மட்டும் அவள் எப்போதும் அசடு மக்கு.. ஏனோ அம்மாவின் முன்னிலையில் அவளுக்கு முதுகெலும்பே இருபதாக தெரிவதில்லை. சில நேரங்களில் நமக்கே கோவத்தை வரவழைக்கும் ஒரு கதாபாத்திரம் இவள். 


இறுதியாக ஆனந்த ராவ்: அமைதியாக அதிகம் வலம் வராவிட்டாலும், மகளின் மீது மிகுந்த அக்கறையும், மனைவிக்காக மகளின் ஆசையை கூட நிராகரிக்கும் ஒரு கணவனாக வருகிறார். உயிர்ப்பான ஒரு கதாபாத்திரம்.

இதுபோல் பல நல்ல கதாபாத்திரங்களுடன் எந்த இடத்திலும் முகம் சுளிக்க வைக்காமல், சலிப்பை ஏற்படுத்தாமல் பயணிக்கும் இந்த நாவல் இரு பாகங்களாக வெளிவந்துள்ளது.

புத்தகம் கிடைக்கும் இடம்: Alliance Company, 244 RKMutt Road, Mylapore, Chennai. 600004,  044 2464 1314. 

திருமதி கௌரி அவர்களின் எல்லா மொழிபெயர்ப்பு நூல்களும் மேற்சொன்ன பதிப்பகத்தின் மூலம் வெளிவந்தவை.

இந்த அருமையான நாவலை நேரம் கிடைப்பின் வாங்கி படிக்கவும். மேலும் இவர்கள் மொழிபெயர்த்த மற்றொரு நாவலான செக்ரட்டரி பற்றி பின்னர் பகிர்கிறேன். இந்த நாவலும் திருமதி. யத்தன பூடி சுலோச்சனா ராணி அவர்களின் படைப்பு.

அன்புடன் 
சமீரா.

19 comments:

  1. அருமையான நாவலின் விமர்சனப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி சமீரா
    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி திரு குட்டன்!!

      Delete
  3. பறக்கட்டும் உங்கள் கற்பனைகள் சிறகடித்துப்
    பிறக்கட்டும் புத்தம்புது சிந்தனைகள் உயிரெடுத்துத்
    திறக்கட்டும் தினம் ஒரு புதிய பாதை தடை தகர்த்துச்
    சிறக்கட்டும் உங்கள் பதிவுகள் தகதகத்து!

    அனைவருக்கும் சென்னை பித்தனின் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!


    ReplyDelete
    Replies
    1. ரொம்ப சந்தோசம் ஐயா.. உங்கள் வருகைக்கும் அழகான வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள்!!!

      Delete
  4. விமர்சனத்திற்கு நன்றி சமீரா. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. சசி அக்கா.. நன்றி!! உங்களும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

      Delete

  5. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


    அன்புடன்
    மதுரைத்தமிழன்

    ReplyDelete
    Replies
    1. மதுரை தமிழன் சார்.. உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!!!

      Delete
  6. ஆஹா...! ஒரு நல்ல கதையை விவரித்துவிட்டு, முடிவை மட்டும் சொல்லாமல் கதையைப் படிக்கும் ஆவலைத் தூண்டிவிட்டீர்களே...
    நிச்சயம் வாங்கிப் படிக்க வேண்டும்.

    சமீரா புத்தாண்டு அன்று ஒரு புதுமையான விமர்சனத்தை தொடங்கியிருக்கிறீர்கள். நீங்கள் மென்மேலும் பல கருத்துக்களை உங்களின் எழுத்துக்கள் மூலம் பகிர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஹலோ ராஜா!! நீங்கள் இன்னும் கதை படிக்கவில்லை அதனால் தான் முடிவு பகிரவில்லை. அப்புறம் சுவாரசியம் இருக்காது இல்லையா?

      நன்றி ராஜா!!!

      Delete
  7. உண்மையில் இதைப் படித்ததும் உடனே அந்த நாவலைப் படிக்க வேண்டும் என்ற அடங்காத ஆவலை எழுப்பி விட்டாய் சமீரா. உடன் படித்துப் பார்க்கிறேன். ரசனையாக எழுதியிருக்கும் விதம் அருமை. என் இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ஓ!! ரொம்ப ரொம்ப நன்றி சார்.. படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க!

      Delete
  8. ஹாய் சமீரா,
    முள்பாதை நாவல் தெலுங்கு மக்களுக்கிடையே மிகவும் பிரபலமான நாவல். மீனா என்ற அதே தலைப்பில் தெலுங்கில் திரைப்படமாகவும் வந்துள்ளது. தமிழ் வாசகர்கள் மூலத்தில் உள்ள வாசத்தை உள்ளபடியே உணர வேண்டும் என்பது என்னுடைய அவா.
    தங்களுடைய விரிவான விமரிசனம் எந்த அளவுக்கு இந்த நாவலை ரசித்து இருக்கிறீர்கள் என்று பறைச்சாற்றுகிறது. என் முயற்சி வீண் போகவில்லை என்பது குறித்து மிக்க சந்தோஷம்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பின்னூட்டம் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் நேரத்தை எனக்காக செலவிட்டதற்கு மிக்க நன்றி!!
      குறிப்பாக இப்படிப்பட்ட நல்ல நாவல்களை தமிழுக்கு மொழி பெயர்த்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்!!
      இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

      Delete
  9. அன்பு சமீரா,
    நாவலின் ஆசிரியைஇடமிருந்தே பாராட்டு வந்திருக்கிறது உன் விமரிசனத்திற்கு. வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி!

    விமர்சனம் என்ற ஒரு புதிய எழுத்து வடிவை தொடர வாழ்த்துக்கள்!
    நானும் நாவலை வாங்கிப் படிக்கிறேன். முடிவை தெரிந்து கொள்ள ஆவலாராக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி அம்மா!! நிச்சயமாக என்னை கவர்ந்த நூல்களை பகிர்கிறேன்..
      கௌரி அம்மா அவர்களின் வருகை மிகுந்த உற்சாகத்தை அளித்தது!!!

      Delete

  10. யத்தனபூடி சுலோசனாராணி அவர்களின் முள்பாதை நாவல் இப்போது e book ஆக kinige.com ல் கிடைக்கிறது. இலக்கியத்தில் ஈடுபாடு இருக்கும் நண்பர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

    http://kinige.com/kbook.php?id=1831&name=Mulputhai+1
    http://kinige.com/kbook.php?id=1843&name=Mulpathai+2
    --
    Gowri Kirubanandan

    ReplyDelete