Ads 468x60px

Monday, October 1, 2012

இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர்!!


இவரை பற்றி தெரியாதவர்கள் குறைவு. அடைமொழிகேற்ப அவரின் படைப்புகள் அத்தனையும் சிகரம் தான் (அடைமொழி சிலருக்கு பெயரளவில் மட்டுமே). வெள்ளித்திரையில் இவர் பதித்த தடங்கள் காலத்தால் அழியாதவை. துணிச்சலான கதைகளம் இவரின் அடையாளம்!

வெள்ளித்திரையே இப்படியென்றால் சின்னத்திரை பற்றி சொல்லவேண்டியதே இல்லை. இன்றைய சின்னத்திரை இயக்குனர்கள் இவரிடம் பிச்சை தான் வாங்கவேண்டும் ஒரு கதையை எப்படி சுவாரஸ்யமாகவே முடிப்பது என்ற வித்தையை கற்பதில்!! பலவருடங்கள் இழுத்து வரப்படும் கதைகளுக்கு(?) மத்தியில், சிறு தொடராக இருந்தாலும் சரி நெடும் தொடராக இருந்தாலும் இவரின் கதைகளுக்கு தேவைப்படும் அதிக பட்ச கால அளவு ஒரு சில மாதங்கள் தான்! அதற்குள் தான் சொல்ல வந்ததை செவ்வனே சொல்லி முடிப்பதில் இவர் சிகரம் தான்!!


பெண்களை இழிவாகவும் சூழ்ச்சிகாரியாக, சுயநலவாதியாக காட்டும் மெகா சீரியல்-களுக்கு மத்தியில் இவரின் கதை மாந்தர்கள் முற்றிலும் மாறுபட்டவர்கள்! பெண்களை கருவாக கொண்ட கதைக்களமாக இருபினும், அவர் வெளிபடுத்துவது பெண்களின் வீரம், கருணை, தடைகளை தகர்த்தெறியும் தைரியம், அவர்களின் அணுகுமுறை, நிமிர்வு இவற்றை தான்! எதிரி கூட ஒரு பெண்ணாக இல்லாமல் இருப்பது இவருக்கே உரிய சிறப்பு!

ஒரே பிரச்சனையை கொண்டு போர் அடிக்காமல், பல பல குழப்பங்களையும் அதற்கான தீர்வுகளையும் அழகாக படம் பிடிப்பதில் அவருக்கு நிகர் அவரே!!

அவரின் சின்னத்திரை பிரவேசத்தில் நீண்டதொரு ரசிகை நான்! ரயில் சினேஹம், கையளவு மனசு, காதல் பகடை, சஹானா (சிந்து பைரவி-2), அண்ணி வரிசையில் தற்போது நிறைவடைந்தது "சாந்தி நிலையம்". மருத்துவர்கள் மற்றும் ஒரு மருத்துவ மனையை ஆதாரமாக கொண்டு செல்லும் தொடர் இது.. சென்ற வாரம் ஆரவாரம் இன்றி அழகாக முடிக்கபட்ட கதை! மருத்துவர்களின் மனதினையும் அவர்களுக்குள் இருக்கும் மனபோரட்டம் மற்றும் அவர்களின் சேவை போன்றவற்றை அழகுற இயக்கியுள்ளார் சிகரம்!!

சாந்தி நிலையம்

கதையின் நாயகி திருமதி ரதி (வெள்ளித்திரை நாயகி), அவரின் நடிப்பு திறமை வெள்ளித்திரையில் கூட பார்த்திராத அளவுக்கு இருந்ததது!! நடிக்க வைக்க சிகரதிற்கா தெரியாது!!
தொலைகாட்சி தொல்லைகாட்சி ஆகி வரும் இன்றைய காலகட்டத்தில் பாலச்சந்தர் அவர்களின் இதுபோன்ற நாடகங்கள் வரபிரசாதம் என்றால் மிகையில்லை!! மீண்டும் சின்ன சின்ன  கதைகளுடன் அவர் சின்னத்திரை பிரவேசம் தொடர இருக்கிறது..

மீண்டும் ஆவலுடன் நான்!!!

34 comments:

  1. ரயில் சிநேகம் எப்படி பார்த்தீர்கள்? நான் கல்லூரியில் வந்த போது வந்த சீரியல் அது. நான் விரும்பி பார்த்த தொடர்

    ReplyDelete
    Replies
    1. நான் குறிபிட்டதில் - ரயில் சினேஹம் மட்டும் தான் நான் பார்க்காதது ...மற்ற அனைத்தும் பார்த்து இருக்கிறேன் சார்

      Delete
  2. இவரது படங்களின் வெற்றிக்கு மிகப் பெரிய காரணம் இவருடைய நண்பரும் உதவியாளருமாக இருந்த திரு அனந்து என்று நெருங்கிய வட்டங்களில் சொல்கிறார்கள்; அவர் இறந்த பிறகு பாலசந்தர் எடுத்த ஒரு படம் கூட வெற்றி பெற வில்லை !

    ReplyDelete
    Replies
    1. இந்த செய்தி எனக்கு புதிது சார்... படித்து பகிர்ந்ததற்கு மிக்க நன்றி

      Delete
  3. எனக்கு ரயில் சிநேகம் ரொம்பப் பிடித்தது. சிந்து பைரவி பார்ட் -2 ஆரம்பம் நன்றாக இருந்து, நடுவில் குழம்பி...எப்படியோ முடித்து விட்டாற்போல தோன்றியது. தேவை இல்லாமல் நிறைய பாத்திரங்களைக் கொண்டு வந்து சலிப்பாகி விட்டது இந்தத் தொடர்.
    May be திரு அறிவன் சொல்வது போல திரு அனந்து இல்லாதது காரணமோ என்னவோ.

    சிலசமயம் நாம் நிறைய எதிர்பார்ப்பது கூடக் காரணமாக இருக்கலாம்!

    ReplyDelete
    Replies
    1. இருக்கலாம் சிலரின் இழப்பு வெகுவாக தாக்கத்தை கொடுக்கும்.. ஒருவேளை நம்மின் அதிகபடியான நம்பிக்கை எதிர்பார்ப்பும் சில நேரங்களில் தொய்வினை உண்டாக்கும் .. உங்களை போன்று நானும் உணர்ந்து இருக்கிறேன் ...
      தங்கள் கருத்தினை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி அம்மா...

      Delete
  4. பெண் கதாபாத்திரங்களை உயர்த்திப் பிடிப்பது இவரது பாணி எனக்கு மிகப் பிடிக்கும். உரையாடல்களிலும் தனித்துவம் கொண்டவர் சிகரம். நினைவு கூர்நது மகிழ வாய்ப்பளித்த உனக்கு நன்றிகள்மா.

    ReplyDelete
    Replies
    1. பெண்களின் மன போராட்டங்களை சொல்வதில் வல்லவர்... ரசித்து மகிழ்ந்ததற்கு நன்றி சார்..

      Delete
  5. இவரது படத்தில் எல்லாமே பேசும், நடிக்கும்... (கதாபாத்திரங்கள் மட்டுமல்ல...)

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள் சார் ... கருத்தினை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி

      Delete
  6. கே.பி-யின் படங்களில் பெரும்பாலானவற்றைப் பார்த்திருக்கிறேன் என்றாலும், ‘கையளவு மனசு” தொடர் மட்டும்தான் முழுமையாகப் பார்த்த ஞாபகம்! எனக்கு கே.பி.என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது ‘எதிர்நீச்சல்’ மாதுதான்! நிறைய மெனக்கெட்டு கோர்வையாக எழுதியிருக்கிறீர்கள்! பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. எனக்கு மிகவும் பிடித்த படம் நீங்கள் குறிப்பிட்டது... எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்...
      மிக மிக நன்றி சார் தங்கள் வருகைக்கு!!

      Delete
  7. சமீரா நீங்கள் சொன்ன எந்தத் தொடரையும் நான் பார்த்ததில்லை. பார்ப்பதற்கான வாய்ப்பும் அமையவில்லை. உங்களின் எழுத்து மூலமே அதை அறிந்தேன். மிக்க நன்றி...

    என்னைத் திரைத்துறை நோக்கி நகர்த்திய இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சிகரமே... அவர் இயக்கிய “ புன்னகை “ என்னை மிகவும் பாதித்த படங்களில் ஒன்று. ஒரு மனிதனின் ஆன்மாவை அடி ஆழத்திற்கு சென்று தொடும் கலையில் இயக்குனர் சிகரம் கைத் தேர்ந்தவர்.

    இவரது படங்களின் வெற்றிக்கு மிகப் பெரிய காரணம் இவருடைய நண்பரும் உதவியாளருமாக இருந்த திரு அனந்து என்று நெருங்கிய வட்டங்களில் சொல்கிறார்கள்; அவர் இறந்த பிறகு பாலசந்தர் எடுத்த ஒரு படம் கூட வெற்றி பெற வில்லை !

    அறிவன் சொன்னது போல் அது இயக்குனர் சிகரத்திற்கு மட்டும் நிகழவில்லை. பாரதிராஜா உட்பட இன்னும் நிறைய இயக்குனர்கள் அந்த வரிசையில் இருக்கிறார்கள். தற்பொழுது இயக்குனர் சங்கரும் எழுத்தாளர் சுஜாதாவின் இடத்தைப் பூர்த்தி செய்ய முயன்றுக் கொண்டு தான் இருக்கிறார்.இது இயல்பு தான்.

    இயக்குனர் சிகரத்தைப் பற்றிய பதிவை எழுதி நிறையப் பேர்களின் பழைய நினைவுகளை தட்டி எழுப்பியிருக்கிறீர்கள். அருமை. தொடர தமிழ்த்தொட்டிலின் வாழ்த்துக்கள்... நேரமிருப்பின் தொட்டிலில் தவழும் எனது தமிழையும் கொஞ்சம் தாலாட்ட வாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு ராஜா... அழகாக படித்து ரசித்ததுடன் விளக்கமான ஒரு பின்னுட்டம் அளித்துள்ளீர்கள் .. மகிழ்ச்சியாக உள்ளது..
      முடிந்தால் (நேரம் இருப்பின் )கையளவு மனசு தொடர் அழுத்தமான கதையமைப்பு.. காதல் பகடை நகைசுவை மிகுதியான காதல் கதை.. முடிந்தால் ytube -இல் பார்க்கவும்...
      கண்டிப்பாக தமிழ் தொட்டில் பார்கிறேன்...
      (எனக்கு ஒரு சந்தேகம், பதிவர் சந்திப்பில் என்னுடன் மதிய உணவின் போது பேசிய ராஜா நீங்கள் தானா?)

      Delete
    2. இந்தக் கேள்வியால் என் முகத்தில் குறுநகையை வரவழைத்துவிட்டீர்கள். மதிய உணவின் போது மட்டுமல்ல...அது முடிந்து புத்தகங்கள் பார்க்கும் பொழுது உங்களிடம் உள்ள பாலகுமாரன்,ரமணிசந்திரன்,அனுராதா ரமணன் இவர்களையெல்லாம் படிப்பதற்கு கேட்டவனும் நான் தான்.எம்.ஜி.ஆரின் சிலை உங்களை நியாபகப்படுத்தும்.

      Delete
    3. ஆமாம் நியாபகம் நல்லாவே இருக்கு.. அந்த ராஜா நீங்க தான்.. ஒரு சின்ன குழப்பம் அவ்ளோ தான்.. நன்றி ராஜா..

      Delete
  8. பாலசந்தர் காலத்தை இரண்டாகப் பிரிக்கலாம்,அனந்துவுடன்(நன்று),அனந்துவுக்குப் பின்(flop)

    ReplyDelete
    Replies
    1. இந்த பதிவுல இருந்து நான் நிறைய தெரிஞ்சிகிட்டேன்... ரொம்ப நன்றி குட்டன்... என்னோட அறியாமைய போக்கிக்கவே நான் நிறைய பதிவு எழுத விரும்பறேன்...

      Delete
  9. இன்னும் ஒரு விதயம்...

    கமலஹாசன் பாலசந்தரிடம் கற்ற சினிமாவை விட அனந்துவிடம் கற்ற சினிமா அதிகம் !

    அனந்துவிடம் விவாதிக்காமல் அவர் நிறுவனத்தில் எந்த ஒரு படத்தையும் கமல் எடுத்ததில்லை.அவர் இறந்த போது எவரையும் விட அதிகம் வருந்தி நெகிழ்ந்தவரும் அவரே.

    ReplyDelete
    Replies
    1. நிறைய விஷயம் சொல்லி இருக்கீங்க சார்.. மிகவும் நன்றி

      Delete
  10. அருமையான பகிர்வு! அழகான நினைவூட்டல்! தாங்கள் குறிப்பிட்ட தொடர்களை பற்றி நான் அறிந்ததில்லை அக்கா! ஆனால் அறிய முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி யுவராணி.. ரொம்ப நல்ல தொடர்கள் இவை!!

      Delete
  11. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_12.html) சென்று பார்க்கவும்...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்.. இப்போது தான் நானும் பார்த்துவிட்டு வருகிறேன்...

      Delete
  12. இது என் முதல் வருகை, அம்மா ரஞ்சனி அவர்களின் அறிமுகத்தில் இன்று உங்கள் நதிக்கரையில்... ரயில் சினேஹம் நான் பார்த்து இருக்கிறேன்... அற்புதமான தொடர் அது.. சிகரம் உண்மையில் சாதனை சிகரம் தான்.. இனி தொடர்வோம்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆயிஷா.. உங்களின் நட்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி...
      உங்களுக்கு என் வாழ்த்துக்கள்!!!

      Delete
  13. ஆஹா.. எனக்கும் முன்னால் திரு தனபாலனும், திருமதி ஆயிஷாவும் வந்து விட்டார்களா?

    சமீரா வருகை தருக!





    ReplyDelete
    Replies
    1. ஒரு அந்நியதனம் உங்களிடம் எனக்கு வரவில்லை..
      உங்கள் மீதான அன்பு மேலும் மேலும் வலுபெருவது போல உள்ளது.. என்னையும் அறிமுக படுத்தியதற்கு மிக்க நன்றி அம்மா...

      Delete
  14. அன்பின் சமீரா - அருமையான கட்டுரை - இயக்குனர் சிகரத்தினைப் பற்றிய கட்டுரை - தொலைக்காட்சியில் வரும் இவரது தொடர்களைப் பர்றிய விமர்சனம் நன்று. நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா! உங்கள் வரவு என்னை உற்சாகபடுத்துகிறது...

      Delete
  15. ஆரவாரம் இன்றி அழகான சிகரப் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி அக்கா...

      Delete