Ads 468x60px

Wednesday, January 2, 2013

படித்ததில் பிடித்தது!! - பாவப்பட்ட (உழைப்பாளர்) நாய்கள்!!


இனிய காலை பொழுதில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி!!

காலைல உங்க எல்லாருக்கும் ஒரு குட்டி கதை சொல்லலாம்னு வந்தேன். என்னடா பாட்டி ஆகிட்டன்னு நினைக்க வேண்டாம். இது நம்ம சமுதாயம் பத்தினது. அதாங்க உழைப்பாளர் சமுதாயம் பத்தினது; அதான் இவ்ளோ அவரசமா பகிர்ந்துகொள்கிறேன். படிங்க! முடிஞ்சா கொஞ்சம் சிரிங்க; உடம்புக்கு ரொம்ப நல்லது. உங்க உடம்புக்கு தான்!!

ஒரு நாய் கடைக்கு வந்துச்சு...!

கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு... என்னடா பெரிய தொல்லையாபோச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு...

கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில்நாய் கழுத்தில் மாட்டிவிட்டார்... நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது..

கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்..

அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது.. அப்போது ரெட் சிக்னல்.. அந்த நாய் ரோட்'டை கடக்காமல்நின்றது...

பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது...

கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை... அது பின்னாலே அதன் வீடு செல்ல முடிவெடுத்தார். ..

அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது..

ஒரு குறுப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய் பேருந்தில் ஏறியது..

கண்டக்டரும் நாய் வாயில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு டிக்கெட் கொடுத்தார்..

இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்து இறங்கியது...

கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்...

நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன் நின்று கதவை தட்டியது...

கதவு திறந்து ஒரு ஆள் வந்தார்...

நாயின் கழுத்தில் உள்ள பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்....



கடைக்காரர் ஓடி சென்று : நிறுத்துங்க?? ஏன் அடிக்கறீங்க?? அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டுசிக்னல்மதிச்சுபஸ்ல டிக்கெட் எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே ...???


அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீடு சாவிய எடுத்துட்டு போகாம வந்து கதவ தட்டுது பாருங்க.. நாய்க்கு கொஞ்சம் கூடபொறுப்பே இல்லன்னு....

நீதி: நமக்கு மேல உள்ள முதலாளிங்க, மேனேஜர் எல்லாரும் இப்படி தான்.. நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும்உனக்கு நல்ல பெயரே கிடைக்காது....


என்ன நண்பர்களே கதை பிடித்தா?? இல்லை என் காதை பிடிக்க ஓடிவரீங்களா?..... அப்போ அடுத்து ஒரு பேய் கதையுடன் வருவேன்....

அன்புடன் 
சமீரா 

19 comments:

  1. அருமையா இருந்துச்சு கதை. நிறைய அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள அந்த நாயின் நிலையில்தான் இருக்கிறார்கள் என்பதே நிஜம், என்னாது.... பேயா? உன் கதைய... ஐ மீன் நீ எழுதற பேயின் கதைய படிக்க எனக்கு தெகிரியம் பத்தாதும்மா... மீ எஸ்கேப்!

    ReplyDelete
    Replies
    1. நீங்க நல்ல இருக்குன்னு சொல்லி தப்பிச்சிட்டீங்க. அதனால் நோ பேய் கதை!!!
      நன்றி சார்...

      Delete
  2. நல்ல கதை.
    பாவம் இந்த முதலாளிகள் எல்லோரும் இப்படித்தான்.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அப்படியில்லைன்ன அவங்கள நாம முதலாளியாவே மதிக்கமாட்டோம்(?)!!
      ரசித்து கருத்திட்டதற்கு மிக்க நன்றி சார்

      Delete
  3. படித்தவுடன் பிடித்தது நாயின் கதை ..!

    ReplyDelete
    Replies
    1. ராஜிம்மா...ரொம்ப நன்றி!!!

      Delete
  4. உண்மை தாங்க முதலாளிகளின் நிலையை அப்படியே உள்ளது உள்ள படி சொன்னீங்க அதுவும் சவுக்கடி கொடுக்கிற மாதிரி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சசி அக்கா!! நூத்துக்கு நூத்திபத்து மார்க் வாங்கற மாதிரி தான் நாம உழைக்கணும்! ஆனால் அவங்க ஏதோ முடிஞ்சா 10% சம்பளமா கொடுப்பாங்க!!!

      Delete
  5. எத்தனை செய்தாலும் இன்னும் இன்னும் எதிர்பார்க்கும் முதலாளிகள்!
    நல்ல கதை!
    பாராட்டுக்கள்!

    ReplyDelete

  6. வணக்கம்!

    நதியின் கரையில் நான்வந்து
    நாயின் கதையைப் படித்திட்டேன்!
    விதியின் செயலோ? என்றெண்ணி
    விருத்தம் ஒன்று படைக்கின்றேன்!
    மதியின் கரையை மீறுகிற
    மழைபோல் பதிவைப் பதித்துள்ளீா்!
    ததியின் குளிர்ச்சி தருகின்ற
    தமிழை நாளும் வழங்குகவே!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. விருத்தத்துடன் வந்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி ஐயா!!

      Delete
  7. தங்களை வலைச்சரத்தில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    http://blogintamil.blogspot.com/

    ReplyDelete
    Replies
    1. என்னை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியதர்க்கு மிக மிக நன்றி அம்மா!!

      Delete
  8. ஓஹோ இதுதான் நாய் பிழைப்பா ..?
    நல்ல கதை ..

    ReplyDelete
  9. அருமையான உதாரணம்.

    ReplyDelete
  10. SALAM,

    முஸ்லிம்கள் இனி எதில் கவனம் செலுத்தவேண்டும்-கருத்துகணிப்பு:
    இஸ்லாமிய சகோதர சகோதரிகளே நாம் இனிவரும் காலங்களில் எதிர்வரக்கூடிய பிரச்சனைகளை எதிர்கொள்ள சரியான வழிகாட்டுதலுடன் தான் முன் செல்கிறோமா?உங்களின் கருத்துகளை அவசியம் பதிந்து நம் சமுகத்திற்கு நேரான வழியில் செல்ல உதவுங்கள்.

    கருத்துக்களை இக்கட்டுரையில் பதியவும்:http://tvpmuslim.blogspot.in/2013/01/muslimkal-ethil-kavanam-seluththavendum-tamil-survey.html

    ReplyDelete
  11. ராமநாராயணன் படத்தை ரீமேக் பண்ணி பதிவா போடறீங்க??? அவருக்கு போன் பண்ணி சொல்றேன்.

    ReplyDelete