Ads 468x60px

Friday, September 21, 2012

தங்கம்! ஒரு தக தக தகவல்!!


அன்பானவர்களுக்கு!!

ஒரு பொன்னான தலைப்புடன் சந்திப்பதாக சொல்லி சென்றேன்.  ஒரு பூவான தலைப்புடன் மலர்ந்து மீண்டும் இதோ ஒரு தங்கமான தலைப்புடன்  வந்திருக்கிறேன்.


பெண்களின் முகத்தில் உடனடி புன்னகையை வரவழைக்க கணவான்கள் (தனவான்கள்) செய்யவேண்டியது; ஒரு பொன்னால் ஆனா அன்பளிப்பை தங்கள் இல்லாளுக்கு கொடுப்பது, உள்ளுக்குள் கோபம் கொப்பளிதாலும், வெளியே புன்னைகையாகவே வழிந்தோடும். இது காலம் காலமாக பின்பற்றப்படும் நமக்கே உரிய ஒரு சிறப்பு. பூதத்திற்கு பயபடாத பெண்ணிருக்கலாம்; பொன்னிற்கு மயங்காத பெண்ணே இல்லை எனலாம்.

ஒரே சிரிப்பு தான்!
ஆவல் குறைந்த பெண்கள் உண்டு (என்னை போல(?)), மற்றபடி ஆசை இல்லாத பெண்கள் மிக குறைவு.. ஓகே.. நான் சொல்ல வந்த செய்தியே மறந்துவிட்டேன்..


1930 -2012 வரை தங்கத்தின் விலை குறித்து ஒரு பார்வை. 1930 -இல் ஒரு சவரன் (8 கிராம்) ஆபரண தங்கம் ரூ.14 .50 விற்கு விற்பனை ஆனது இன்று ரூ. 25000 /- விற்பனை ஆகிறது. இது 1724 மடங்கு அதிகம். சென்ற வருடம் ரூ. 17000 விற்பனை ஆகிய ஒரு சவரன் இந்த வருடம் ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது. இப்படியே சென்று கொண்டிருந்தாலும் நகை வாங்குவோர் இந்தியாவில் தான் மிக அதிகமாம். சும்மாவா சொன்னங்க, "பொன்னுல இல்ல மண்ணுல போடுன்னு" - பொன்னில் போட்டாலும் அது வாங்கிய பொது உள்ள மதிப்பைவிட, சில காலம் கழித்து விற்பனை செய்யும் போது பலமடங்கு லாபம் தரும்; மண்ணில் போட்டால் அது அதைவிட லாபம் தரும்.. இதைதான் நாம் பெரியவங்க இப்படி சொல்லிட்டு போய் இருக்காங்க . அவர்களுக்கு அப்போதே நிச்சயம் போல "பொன் விலையும், (பொன் விளையும்) மண்விலையும் ஆகாயத்தை எட்டும் என்று!!

 எனக்கு தெரிந்த ஒரு நண்பர் ஒரு பெரிய நகை கடையில் மாதம் தோறும் தவணை முறை நகைசேமிப்பு திட்டத்தின் கீழ் பணம் கட்டி வருகிறார். இதில் லாபம் என்னவென்றால், அவர் கட்டிய பணத்திற்கு உண்டான தங்கம்(கிராமில்) ஒவ்வொரு மாதமும் அவரின் சேமிப்பு கணக்கில் வைக்கப்படும். பின் வருட இறுதியில் கணக்கு முடிக்கும் போது மொத்த கிராமிற்கு உண்டான நகையோ அல்லது தங்க காசோ அவர் பெற்றுகொள்வாராம்.. இதன் மூலம் நம் சேமிப்பு தொடங்கும் போது நகை விலை குறைவு என வைத்துக்கொண்டால், வருட இறுதியில் கிராம் விலை எவ்வளவு உயர்ந்தாலும் நம் முந்தைய மாதத்திற்கு உண்டான நம் கணக்கில் உள்ள தங்கத்தின்  அளவில் எந்த குறைவும் வராது..

கோல்டன் டைம் இது தானா!!
 உத: முதல் மாதம் ரூ. 5000 -திற்கு ஒன்றரை கிராம் தங்கம் கணக்கில் சேர்கிறது.. வருட இறுதியில் விலை உயர்ந்து அதே ரூ. 5000 -திற்கு ஒன்றேகால் கிராம் தங்கம் மட்டுமே வந்தாலும் முதல் மாதம் சேர்த்த கிராம் அப்படியே நமக்கு வரும். இப்படிப்பட்ட நகை திட்டங்களும் உள்ளன.
உங்களுக்காக கடந்த 82 வருடங்களில் தங்கத்தின் விலை (சவரனில்)..




எங்க அம்மா அடிகடி சொல்வாங்க (கொல்வாங்க), அவங்க(!) அம்மாக்கு அவங்க(!) அம்மவீட்ல, தங்க கொலுசு, தங்கதுலையே வாலி (இது காதுல போடற வாலிங்க-அப்புறம் கிணறுல போடறதுன்னு நினைச்சிட போரிங்க) இதெல்லாம் போடறேன்னு சொன்னதுக்கு: எங்க பாட்டி சொன்னாங்களாம் ஒரே மஞ்சளா இருக்கும் எனக்கு வேண்டாம் வெள்ளிதான் வேணும்னு அடம் பண்ணி வாங்கிநாங்கலாம்: இத எங்க அம்மா சொல்ற போதெல்லாம் எனக்கு கொலைவெறி வரும்..ஆனால் ஹ்மம்ம்ம்மம்ம்ம்ம் இது தான் முடியும்...
எங்க கிளம்பிடீங்க? தங்கம் வாங்கவா??? ஓகே ஓகே..

பி.கு: சென்ற பதிவில் விடுபட்ட அவள் விகடன் பக்கங்களை காண இங்கு கிளிக்குங்கள்..


அன்புடன்,
சமீரா

  

26 comments:

  1. ஒரு டைம் மிஷின்ல 1930க்கு போக முடிஞ்சா... நிறைய நகை வாங்கிக் கொடுத்து இல்லாளை குஷிப்படுத்திடலாம். அதெப்படிங்க... பொன் நகை வாங்கிக் குடுத்தா கனவான்கள் மனைவிய குஷிப்படுத்தலாமா...? இப்போ விக்கிற விலையில... ஹும்...! எனக்குத்தான் கொலவெறி வருது.

    எங்கம்மா அந்த நாள்ல 90 பவுன் நகை போட்டிருந்ததாகவும். எங்கப்பா அதை பிஸினஸ்ல கரைச்சுட்டார்னும் சொல்வாங்க. எனக்கு 7 வயசு இருக்கறப்ப எங்கப்பா இறந்தப்ப எங்கம்மாட்ட நகையே இல்லை. இப்பக்கூட நினைச்சா எனக்கு கொலவெறி வரும்... என்னத்தச் சொல்ல?

    வார்த்தைகளை அமைப்பதில் நல்ல முன்னேற்றம் வந்திருக்கு சமீரா. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. //ஒரு டைம் மிஷின்ல 1930க்கு போக முடிஞ்சா...// -இது மட்டும் முடிஞ்சா நன் கிலோ கணகில வாங்கிடுவேன் என் அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து!! ஹிஹிஹி...
      //எங்கம்மா அந்த நாள்ல 90 பவுன் நகை போட்டிருந்ததாகவும்// - உங்களுக்கும் இப்படி அனுபவம் இருந்ததா!!! நமலாம் லட்சாதிபதியா இருகவேண்டியவங்க போல....ஹ்ம்ம்..
      //வார்த்தைகளை அமைப்பதில் நல்ல முன்னேற்றம் வந்திருக்கு// - மிக்க நன்றி சார். . .முதல் வந்து முத்தான கருத்திட்டு வாழ்த்தியதற்கு மனம்நிறைந்த நன்றிகள்..

      Delete
  2. Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக மிக நன்றி நண்பரே!!

      Delete
  3. அந்த விலை ஒப்பீடு டென்ஷன் படுத்துது

    அப்பவே வாங்கிருக்கலாமே :((

    ReplyDelete
    Replies
    1. ஹ்ம்ம் .. என்ன சார் பண்றது .. வாங்காமலே இருக்கலாம்-னு பார்த்தா வர்ற மாமனார் மாமியார் குடும்பம் நகைக்கடைக்கு உறவினாராகி போய்டரங்க!! யாரையும் அந்த டைம் ல கஷ்டபடுத்த வேண்டாமே னு வாங்கிடறோம்.... பதிவு போட்டு பல பேர் BP எதிடேனோ??- வருகைக்கு மிக்க நன்றி சார்..

      Delete
  4. தங்கள் இன்னும் என்ன ஆகுமோ...!


    இவ்வளவு விலையேறியும் வாங்கும் அளவு அதிகமாகிகிட்டே இருக்குங்க அதான் ஆச்சரியம்...

    நல்லதொரு பதிவு...

    ReplyDelete
    Replies
    1. என்ன சார் பண்றது.. 21-ம் நூறாண்டுக்கு வந்து கூட நகை ஆசை விடுத்தா (ஆண் பெண் இருபாலருக்கும்)?.. அதான் அது இஷ்டத்துக்கு ஏறிட்டே போகுது..
      படித்து கருதிட்டதர்க்கு மனம்நிறை நன்றிகள் சார்..

      Delete
  5. வலைப்பதிவு ஆரம்பித்துவிட்டீர்களா? வாழ்த்துகள்..தொடர்ந்து எழுதுங்கள்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை என்னை உற்சாகபடுத்துகிறது சார்.. மிக்க நன்றி...

      Delete
  6. என் பாட்டி சொல்வார்கள்,ஒரு காலத்தில் பவுன் 8 ரூபாய்க்கு விற்றதாம்!எல்லாம் வில ஏறிப்போச்சு!

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க!! இந்த மாதிரி பாட்டிங்க நகை விலை அரிசி பருப்பு னு விலை சொல்லியே.. விலையில்லா BP வருது நமக்கு!!! காலம் முன்னேற்றம் எதையும் விட்டு வைக்க வில்லை...
      எங்க பாட்டியும் உங்க பாட்டி காலத்து ஆள் தான்.. கருத்திற்கு மிக்க நன்றி தோழரே!!

      Delete
  7. ஒரு சவரன் ஒரு லட்ச ரூபாய் ஆனாலும், நகை கடையில் கூட்டம் குறையாது, பெண்ணிற்கும் பொன்னிர்க்கும் எதோ இருக்கிறது, எனக்கு ஒரு மோதிரம் அணிந்தாலும் எரிச்சலாக இருக்கும் வாட்ச் கூட கட்ட பிடிக்காது, இவ்வளவு நகைகளை எப்படித்தான் சுமந்து கொண்டு இந்த பெண்கள் இருக்கிறார்களோ தெரிய வில்லை

    ReplyDelete
    Replies
    1. பெண்கள் மட்டுமே பொன் நகையை விரும்புதாக எண்ண வேண்டாம்.. பொன்னுக்கும் பெண்ணுக்கும் ஆசைபடும் ஆடவர்கள் அதிகம் நம் ஊரில்!! பொன்னை ஆபரணமாக அல்லாமல் சேமிப்பாக வாங்கும் ஆண்கள் மிக அதிகம்...
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழரே!!

      Delete
  8. ஆவல் குறைந்த பெண்கள் உண்டு (என்னை போல(?)), மற்றபடி ஆசை இல்லாத பெண்கள் மிக குறைவு.. ஓகே.. நான் சொல்ல வந்த செய்தியே மறந்துவிட்டேன்..
    (இது காதுல போடற வாலிங்க-அப்புறம் கிணறுல போடறதுன்னு நினைச்சிட போரிங்க)
    சமீரா உங்களின் தகவல்களில் இடையிடையே இழையோடும் மெலிதான நகைச்சுவையை ரசித்தேன்.நீங்கள் கொடுத்த லிங்கைத் தொடர்ந்து, சென்ற பதிவில் பார்க்க முடியாததை பார்த்தேன்.செய்தியைப் படித்தேன். நன்றி

    தங்கத்தைப் பற்றி அருமையான குறிப்புகள் கொடுத்திருக்கிறீர்கள். ஒரு சமூகத்தில் நமக்கான தேடலை கல்வி கொடுக்காத வரை பொருட்கள் மீதுள்ள ஆசை மனித இனத்திற்கு அகலவே அகலாது. இது தங்கத்திற்கு மட்டுமல்ல...
    அருமையானப் பதிவு.

    ReplyDelete
    Replies
    1. எனக்குள்ளும் நகைசுவை உணர்வு இருப்பதை அழகாக எடுத்துரைதுவிட்டீர்கள்..
      கண்டிப்பாக தேடல் எல்லையற்றது.. அதனால் தான் ஒரு கவிஞர் இப்படி சொல்லியுள்ளார்.. "தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும்"...
      தங்கத்தின் தேடல் தான் கொஞ்சம் உறுத்துகிறது.. படித்து கருத்திட்ட தோழருக்கு மனமார்ந்த நன்றிகள்!!

      Delete
  9. அன்பு சமீரா,
    தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்.

    எங்கள் பாட்டியிடம் 'சவரன் 20 ரூபாய் என்றால், நீங்க அப்பவே தங்கம் வாங்கி வைத்திருக்கணும்' என்று நாங்கள் சொல்லுவோம்.

    'உங்கள் தாத்தாவின் சம்பளமே அவ்வளவுதான்' என்பார் பாட்டி.

    எனக்கென்னவோ தற்போதைய விலைவாசிக்குத் தகுந்தாற்போல தங்கத்தின் விலையும் சரியாக இருப்பது போலத் தான் தோன்றுகிறது.

    பெண்களின் தங்க மோகம் குறையும் என்று தோன்றவில்லை.



    ReplyDelete
    Replies
    1. தங்கத்தின் விலை சரியாக இருப்பது நடுத்தர மற்றும் மேல்தட்டு வர்க்கத்திற்கு மட்டுமே அம்மா!! தங்கத்தை எட்டா கனியாக பார்க்கும் மக்களும் உள்ளனர் அது தான் உண்மை..
      புலியை பார்த்து பூனை சூடு போட்டுகொண்டதை போல, தன் அடம்பர மோகத்தை வெளிபடுத்த தங்கம் வாங்கும் ஆட்களும் உண்டு..

      தங்கத்தின் மோகம் நாளுக்கு நாள் எகிறுவது உண்மையிலும் மகா உண்மை..

      தாமதமாக வந்தாலும் பரவில்லை அம்மா.. மன்னிபெல்லாம் பெரிய வார்த்தை வேண்டாம்..மிக்க நன்றி அம்மா!!!

      Delete
  10. அக்கா தங்களோடு ஒரு விருதினை பகிர்ந்துள்ளேன்! அதை ஏற்றுக்கொள்ள தங்களை எனது வலைப்பக்கத்திற்கு அன்போடு அழைக்கிறேன்!
    http://dewdropsofdreams.blogspot.in/2012/09/1.html

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி யுவராணி!! பெருமையாகவும் நெகிழ்ச்சியாகவும் உள்ளது.. இது நான் பெரும் முதல் விருது...

      Delete
  11. அன்பின் சமீரா - தங்கம் விலை ஏறுவது தவிர்க்க இயாலாதது - தங்கத்தினை பற்றிய கட்டுரை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஐயா.. அரிசி பருப்பு போல அதுவும் அத்யாவசிமான பொருளாகி விட்டது.. குறைந்தால் தான் அதிசயம்..

      Delete
  12. வலை உலகில் கலந்தமைக்கு இனிய வாழ்த்து(க்)கள் சமீரா.

    கலக்குங்க:-))))

    ReplyDelete
  13. இப்போது தான் கண்டேன் !
    தொடர்ந்து இது போல அசத்தலான பதிவுகள்
    தர என் வாழ்த்துக்கள் தோழி !

    ReplyDelete