Ads 468x60px

Sunday, September 9, 2012

நதிக்கரையில் நான் - ஒரு அறிமுகம்

 அன்பிற்கினிய தோழமைகளுக்கு..
 
என் பதிவு பட்டறைக்கு தங்களை வரவேற்கின்றேன்..
 
என்னையும் ஒரு பதிவராக்கிய, பதிவர் திருநாளுக்கு (திருவிழாவிற்கு)  நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கின்றேன்... படிப்பதில் இருந்த ஆர்வம் எழுதுவதில் கிடையாது, 26.08.12 அன்று தான் உணர்ந்தேன் எனக்குள் ஒரு பதிவர் இருப்பதை!!!   பார்வையாளராக வந்த நான் பதிவர் ஆகும் எண்ணத்துடன் இல்லம் திரும்பினேன்.. இருப்பினும் ஒரு அச்சம் ஒரு குழப்பம் என்னை எழுத உந்தவில்லை..

என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம் அந்த நாள்.. பல நண்பர்களை அறிமுகபடுத்திய நாள்.. அறிமுகமான ஒரு நாளிலேயே என்னுடன் பலநாள் பழகிய உணர்வை அளித்த நட்புகள் கிடைத்த நாள்.  அவர்களின் ஆக்கமும் ஊக்கமும் என்னை எழுத வைத்திருக்கிறது. அவர்களுக்கு முதலில் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

"என் அன்பிற்கினிய தோழி(மூத்த பதிவர்) திருமதி ரஞ்சனி அம்மா(ரஞ்சனி நாராயணன்), இந்த வயதில் அவர்களின் உற்சாகம் என்னை ஆச்சர்ய பட வைத்தது. என் எழுத்துக்களை பார்க்க அவர்கள் கொண்ட ஆர்வம் என்னை பதிவராக்கி இருக்கிறது.
மூத்த பதிவர் என சொன்னால் கோவம் கொள்வார்கள் எனவே அனுபவமிக்க பதிவர்கள் என்கிறேன்... திரு பாலகணேஷ் சார்(மின்னல் வரிகள்), திரு மோகன்குமார் சார் (வீடுதிரும்பல்) இருவரின் ஊக்கம் எனக்கு மிக பெரிய டானிக்...எந்த உதவியாக இருந்தாலும் தயக்கம் இன்றி கேட்க எனக்கு கிடைத்த நட்புகள்..."

என்ன எழுவது என நான் குழப்பத்தில் இருக்க; கேட்கும் முன்பே பல தகவல்களை அள்ளி கொடுத்தனர் இவர்கள் ..

எழுத்தும் முறைபற்றி, என்ன எழுதுவது என்பதை பற்றி  ஒரு பதிவே எழுதி இருக்கிறார் ரஞ்சனி அம்மா, ஏனோ அது எனக்கே எழுதியதை போல ஒரு உணர்வு..
இப்படி பல நட்புகளின் உதவியால் நானும் ஒரு பதிவராகி இருக்கிறேன்.. என் பதிவினை தோழமைகள் அனைவரும் படித்து தங்கள் கருத்தினை தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.. தவறாக இருப்பின் திருத்தவும்.. தங்கள் மேலான கருத்துக்களுக்கு காத்துக்கொண்டிருப்பேன் என் இனிவரும் பதிவுகளில்!!! 

என் தலைப்பின் சாராம்சம் .. நதிக்கரையில் நடக்கும் போது மனதில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி , புத்துணர்வு , மனம் லேசான உணர்வு, குளிர்ச்சி இப்படி பலதரப்பட்ட  உணர்வுகள் நம்மை ஆட்கொள்ளும்.. அதுபோலவே என் பதிவின் மூலம் ஒரு இனிய உணர்வை படிப்பவர்க்கு உணர்த்த நான் தேர்ந்தெடுத்த தலைப்பு இது..  என் நதிக்கரையில் நடக்க தங்களை அன்புடன்  அழைக்கின்றேன்...

 தங்களின் வருகைக்கு நன்றிகள்.. ஒரு நல்ல பதிவுடன் மீண்டும் சந்திக்கிறேன்..

அன்புடன்
சமீரா...  

26 comments:

 1. மிக மகிழ்ச்சி வாழ்த்துகள் தொடர்ந்து எழுதுங்கள் திரட்டிகளில் உங்கள் ப்ளாகை சேர்க்கலாம். பாலகணேஷ் அதுக்கு உதவுவார் ( எனக்கு டெக்னிகல் அறிவு குறைவு)

  நீங்கள் எழுதியதில் சிறு திருத்தம் : நான் மூத்த பதிவர் இல்லை. யூத் பதிவர் :)

  சென்னை பற்றி, ஆஸ்பத்திரி அனுபவங்கள், பெண்கள் சந்திக்கும் பொது பிரச்சனைகள் பற்றி ( மதம் சார்ந்து அல்ல), படித்த புத்தகம் பற்றி என எழுத நிறைய விஷயம் இருக்கு நீங்கள் நன்கு எழுதுவீர்கள் என நம்புகிறேன்

  வேண்டிய போது மட்டும் எழுத முடிவதே ப்ளாகின் பெரும் வசதி

  வாழ்த்துகள் !

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி சார் உங்கள் வருகைக்கும் தகவல்களுக்கும்.. திரட்டிகளில் சேர்ப்பது பற்றி பாலகணேஷ் சாரிடம் தெரிந்துகொண்டேன்.
   நீங்க யூத் தான் ஏற்றுகொள்கிறேன்...

   Delete
 2. முதலில் சமீராவுக்கு எனது அன்பான வாழ்த்தினை தெரிவித்து வரவேற்பதில் பெரிதும் மகிழ்கின்றேன். தங்களுடன் சாதாரணமான மனிதனாக நதிக்கரையின் ஓரம் வந்து ஒவ்வொரு நாளும் உங்களின் பதிவுகளை கண்டு வீடு திரும்பும்போது ஒரு பயனாளியாக புது மனிதர்களாக ஏதோ ஒரு நல்ல விஷயத்தை கற்றுக்கொண்டோம் என்ற ஆத்மதிருப்தியை அடையும்படி தங்களின் பதிவுகள் அமையவேண்டும் சமீரா...அதற்கேற்றவாறு உங்களை பட்டறையில் தீட்டிய கூர்வாள் போல உங்களுக்கு நீங்களே தீட்டிக்கொள்ளுங்கள்.

  வாழ்வில் நன்றாக வருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே உண்டு எனக்கூறி அந்த ஆண்டவன் அதற்கு உங்களுக்கு எல்லாவகையிலும் உடன் இருந்து நீண்டதொரு நோயில்லா ஒரு வாழ்வை அளித்து புகழ் எனும் உச்சிக்கு கொண்டு சேர்க்க அவனை வேண்டி மனதார வாழ்த்துகிறேன்... வளருங்கள் அந்த வானத்தை எட்டும் அளவிற்கு அல்ல. அந்த வானத்தையும் தாண்டி என வாழ்த்துகிறேன்...

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றி தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்... பெரிய பொறுப்பை கொடுத்து இருக்கிறீர்கள் சார். என்னால் இயன்றவரை நல்ல பதிவுகளை தர விழைகிறேன்..
   என்மீதுள்ள நம்பிக்கைக்கும் தங்களின் ஆதரவிற்கும் நன்றிகள்...

   Delete
 3. என்னாது... மோகன் யூத்தா? அப்டின்னா நான் ஸ்டூடண்டு பதிவராக்கும... ஹி... ஹி...

  ரெட் கார்பெட் வெல்கம் டு சமீரா. நதிக்கரையில் காற்று வாங்கி நடந்தபடி கதை பேசுவது என்பது வாழ்வில் மிக ரசனையான அனுபவம். அந்த அனுபவத்தை வாசகியாக, தோழியாக இருந்து எழுத்தாளராக மலர்ந்திருக்கும் உங்களின் தளமும் தரும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை சமீரா. பூமிப் பந்தில் ஆகாயப் பந்தலின் கீழே எழுதுவதற்கு நிறைய விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. கண்ணையும் காதையும் சற்றே திறந்து வைத்தால் போதும்... எழுதிக் குவிப்பீர்கள். இப்போது எழுதியிருப்பது போல இயல்பான நடையில், உரையாடுவது போன்று நீங்கள் பகிர நினைப்பதை பகிருங்கள். உங்கள் வளர்ச்சியைக் கண்டு ஆனந்தப்பட நானும் உடனிருப்பேன் என்றும்.

  ReplyDelete
  Replies
  1. //என்னாது... மோகன் யூத்தா?"// முதல் முறையாக வந்து கருத்து சொல்லும்போது மனசு கஷ்டப்பட கூடாது இல்லைங்களா அதான்!!!
   நீங்க கூட ஸ்டுடென்ட் தான் (ஸ்டுடென்ட் நெ. ஒன்)...ஹி ஹி...

   //ரெட் கார்பெட் வெல்கம் டு சமீரா.// - ஆஸ்கார்-கு முன்னாடியே கொடுத்துடீங்க அளவிடமுடியாத மகிழ்ச்சி சார்..

   தங்களின் மேலான கருத்துக்கும் வருகைக்கும் நன்றிகள் சார்.. உங்களைபோன்றோரின் ஊக்கம் தான் என்னை எழுதவைக்கிறது.. நிச்சயம் நீங்கள் ஆனந்த படும் படியாக பதிவிட முயல்கிறேன்..தங்களின் நல்லாதரவிற்கு நன்றிகள்!!

   Delete
 4. வருக வருக! இத்தனை விரைவில் பதிவராக மாறுவாய் என்று நினைக்கவில்லை, சமீரா! மிக விரைவில் வலைபதிவு உலகில் நம்பர் ஒன்றாகவும் வர வாழ்த்துக்கள்!

  அதெப்படி முதல் பதிவிலேயே இருக்கும் அத்தனை தமிழ் பதிவு திரட்டிகளின் பெயர்களையும் போட்டாய்?

  இதையெல்லாம் எப்படி இணைப்பது அதுவும் வோர்ட்பிரஸ் ஸில் ? - கொஞ்சம் கஷ்டம் என்று நினைக்கிறேன் - என்றே தெரியாது இன்று வரை!

  வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்!  ReplyDelete
  Replies
  1. அம்மா உங்களை மிகவும் எதிர்பார்த்துகொண்டிருந்தேன்... மிக்க நன்றி.. எல்லாம் உங்களின் ஆசிர்வாதம்..

   //மிக விரைவில் வலைபதிவு உலகில் நம்பர் ஒன்றாகவும் வர வாழ்த்துக்கள்!// - அம்மா ஒரு சிறு இடம் கிடைத்தால் போதும்!! வாழ்த்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி!
   //அதெப்படி முதல் பதிவிலேயே இருக்கும் அத்தனை தமிழ் பதிவு திரட்டிகளின் பெயர்களையும் போட்டாய்?// - கிரெடிட் எல்லாம் கணேஷ் சாருக்கு தான்.. அவர் தான் என் ப்ளாக் வடிவமைப்பு எல்லாமே செய்துகொடுத்தது!!
   //இதையெல்லாம் எப்படி இணைப்பது அதுவும் வோர்ட்பிரஸ் ஸில் ? // - கணேஷ் சாரிடம் கேட்டால் கண்டிப்பாக உதவுவார்.

   Delete
 5. சமீரா,

  முதலில் வாழ்த்துக்கள்... தலைப்பே வசந்தம்...

  நீ பல நல்ல பதிவுகளை ஏற்கனவே வாசித்திருப்பவள்... எனவே பதிவுலகில் தொடக்க பிழை இருக்க நிச்சயம் வாய்ப்பில்லை...

  அறிவுரை என்று நினைக்க வேண்டாம்,,, நண்பன், ஓராண்டு எழுதி முடித்தவன் என்ற முறையில் சொல்கிறேன்..

  1) நிறைய பதிவுகள் எழுத வேண்டும் என்ற நினைப்பில் உனக்கே திருப்தியில்லாத பதிவுகளை அவசர அவசரமாய் எழுதி பிரசுரிக்க வேண்டாம்.. என் பதிவுகளில் கிட்டத்தட்ட பாதிக்கு மேல் எனக்கே இப்போது வாசித்தால் குப்பையாய்தான் படுகிறது... காரணம் இதுதான்.. மாதத்திற்கு நான்கு எழுதினாலும் முழு திருப்தியுடன் பதிவு செய்..

  2) திரட்டி, டெம்ப்ளேட் கமெண்டுகள், மொய்க்கு மொய் போன்ற பதிவுலக சமரசங்களில் பட்டும்படாமல் இருப்பது நலம்,,, :)

  ReplyDelete
  Replies
  1. ஹாய் மயிலன்!
   வாழ்த்துக்களுக்கு நன்றிப்பா!
   1 . எனக்கு படிப்பதில் உள்ள ஆர்வம் எழுதுவதில் கிடையாது. இருந்தாலும் சிலவற்றை பார்க்கும் போது பகிரும் எண்ணம் வருகிறது அதற்காகவே இந்த பதிவர் அவதாரம்.. தினம்தினம் பதிவிடும் எண்ணம் இல்லை.. பயனுள்ள அறிவுரைதான் தோழா ..
   2 . // திரட்டி, டெம்ப்ளேட் கமெண்டுகள், மொய்க்கு மொய் போன்ற பதிவுலக சமரசங்களில் பட்டும்படாமல் இருப்பது நலம்,,, :)// - ஹஹஹா நிஜமாகவே எனக்கு படிக்க தான் பிடிக்கும் அதனால் நிச்சயம் இதில் பட்டும் படாமலும் இருக்கவே நினைக்கிறேன்..

   மனதில் பட்டதை மறைக்காமல் கருதிட்டதற்க்கும் வருகைக்கும் நன்றிகள்..

   Delete
 6. நதிக்கரையில் சமீரா அவர்களுக்கு தமிழ்த்தொட்டிலின் நட்பான வணக்கமும் வாழ்த்தும்.உங்களின் வலைப்பூவின் தோற்றம் அழகு.
  நண்பர் மயிலன் அவர்கள் சொன்னதுப் போல அனுபவம் எனக்கும் ஏற்பட்டிருக்கிறது.
  உங்களின் படிப்பும் பகிர்வும் தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. அழகான நட்பெனும் பூவினை பரிசளித்து வாழ்த்தியதற்கு என் நெகிழ்ச்சியான வணக்கங்கள்...
   கண்டிப்பா நல்ல பல பதிவுகளுடன் மீண்டும் சந்திக்கிறேன்... நன்றி ராஜா..

   Delete
 7. ரொம்ப நல்ல இருக்குப்பா
  நீங்க இவ்வளோ நல்ல எழுதுவீங்கன்னு நினைக்கலை.
  இன்னும் நிறைய எதிர்பார்கிறேன்.

  ஆல் தி பெஸ்ட்.......

  ReplyDelete
  Replies
  1. ராஜி பயமுறுத்தறீங்க... ஏதோ தெரிந்ததை அறிந்ததை எழுதுகிறேன்
   உற்சாகப்படுத்தியதற்கு நன்றி...

   Delete
 8. புதிய பதிவரா? வாங்க! வாங்க! நீங்கலாம் நல்ல வருவீங்க! கடந்த மூன்று ஆண்டுகளாக இன்னும் பார்வயலானகவே இருக்கேன், அப்டியே எனக்கும் ஒரு வழி சொல்லுங்க பதிவராய் மாற.
  நிறைய அனுபவங்கள் இருக்கு, எப்படி எழுதுவதென்றுதான் தெரிய வில்லை

  ReplyDelete
  Replies
  1. சீக்கிரம் ஆரம்பிச்சிடுங்க!! நானும் எப்படி எழுதுவது என்ற குழப்பத்தில் இருந்தேன்.. இப்போதோ தான் லேசாக தெளிந்தது..
   நானும் முதலில் பதிவுகளை படிப்பதுடன் நிறுத்திக்கொண்டேன்.. இப்போது தான் எழுதும் ஆவல் வந்தது.. நீங்களும் எழுதுங்க.. மேட்டர் இல்லாமல் நானே எழுதும் போது நிறைய அனுபவம் உள்ள நீங்கள் கண்டிப்பாக எழுத வேண்டும்.. வலைபதிவு தொடங்க என் வாழ்த்துக்கள்...

   Delete
 9. வாழ்த்துக்கள் சகோ... Follower ஆகி விட்டேன்... தொடர்கிறேன்...

  நன்றி...

  ReplyDelete
 10. புதிய பதிவருக்கு நல்வரவு. தொடர்ந்து நல்ல பதிவுகள் வெளியிட வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறை நன்றிகள் சார்

   Delete
 11. அக்கா, வாழ்த்துக்கள், என் தளத்திற்கும் கொஞ்சம் வாங்களேன்,,,

  ReplyDelete
  Replies
  1. நன்றி செழியன்.. கண்டிப்பாக உங்கள் தளத்திற்கு வருகிறேன்..

   Delete
 12. தமிழ் என்னும் ஆலமரத்தில் புதிதாக வளர்ந்து வரும் புதிய பதிவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி மோகன்..

   Delete
 13. சமீராவின் நதிக்கரையில் நடை போட விரும்புகிறேன் - தொடர்கிறேன் சமீரா - பதிவர் திருவிழா வினால் பதிவர் ஆகிய சமீராவினிற்கு நல்வாழ்த்துகள் - பாராட்டுகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 14. அன்பின் சமீரா

  // நதி பல மாநிலங்களை கடந்து தன் போக்கில் பாயிந்து பல சிற்றாறுகளுடன் சேர்ந்து சிற்சில கிளையாறுகளாகி செல்லும் இடமெல்லாம் வளங்கொழித்து இறுதியாக கடலில் சங்கமிக்கும்..அதுபோல பல பேராறுகள் சிற்றாறுகளின் துணையுடன் நானும் என் எண்ணகளின் சிதறல்களை முடிந்தவரை கரையேற்றுகிறேன்.. தடைகளற்று பயணிக்கும் இடமெல்லாம் விட்டு செல்கிறேன்.. இந்த நதிக்கரையை நாடி வருவோரில் ஒருவர்க்கேனும் வளம் தருமெனில் அது தன் பிறவி பயனை அடையும்... அன்புடன் நதிக்கரையில் - சமீரா....//

  ரஞ்ஜனி கூறிய படி அறிமுகமே பிரமிக்க வைக்கிறது - வாழ்க வளமுடன் - தொடர்க ப்திவுகளை - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

  ReplyDelete