Ads 468x60px

Saturday, November 17, 2012

நந்தவனம் - அன்புடன் அந்தரங்கம் - 3


ஹாய் வணக்கம்!! 

தீபாவளிக்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி!!

 இந்த வார வாசகர் கடிதம் படிக்க தொடங்கும் போதே எனக்கு சட்டென நினைவுக்கு வந்தது "A Moment to Remember" என்ற கொரியன் படம் தான். 2004-இல்  வெளியான இந்த படத்தில் கதையாக்கபட்ட கரு தான் இப்போது நான் எழுதும்  வாசகரின் கடிதமும்!! படம் பார்த்த போது இப்படியெல்லாம் கூட மறதி சாத்திமா என நினைத்தேன்; இந்த கடிதம் படித்ததும் தான்  முழுமையாக நம்பிக்கை  வந்தது. இதே போல ஒரு ஆங்கில திரைப்படம் கூட வந்துள்ளது.

இப்போது வாசகர் கதை சுருக்கத்தை பார்போம்:- (22/02/2009  - வாரமலர் இதழில் வெளியானது)

58 வயதை கடக்கும் ஒரு முதிய பெண்மணி, கணவர், நான்கு மகன்கள் மருமகள்கள் பேரபிள்ளைகள் என எந்த குறையும் இல்லாமல் வாழ்பவர். அவருக்கு சமீபகாலமாக மறதியால் அவதி படுகிறார். சர்க்கரை நோயாளியான அவர் மறதி சகஜம் என நினைத்துள்ளார். நாட்கள் ஆக ஆக மறதியின் அளவு அதிகரித்துள்ளது.. தன் வீட்டிற்கான வழி முகவரி மறக்கும் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதுமட்டும் இல்லாமல் தன் கணவர் மகன்கள், வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கை மறக்கும் அளவிற்கு வந்துள்ளது. 

தினமும் படிக்கும் பைபிள் வரிகளில் உள்ள நினைவு, தான் காலை என்ன சாப்பிட்டோம் என்பதில் இல்லை. பள்ளி ஆசிரியாராக இருந்து ஒய்வு பெற்றவர் இந்த பெண்மணி. தன் மறதியை போக்க, சமாளிக்க அனு அம்மாவிடன் ஆலோசனை கேட்டுள்ளார்.

இனி அனு அம்மாவின் பதில் கடிதத்தை பார்போம் :-

அன்பு சகோதரிக்கு,

வயதாகும் போது நினைவாற்றல் குறைவதும் மூளையின் வேலைப்பாடுகள் செயலிழப்பதும் இயற்கை தான். அதுவும் சர்க்கரை நோயின் பக்க விளைவு என்று தான் சொல்ல வேண்டும்.

இன்றைக்கும் கூட செய்தித்தாள்களில் பார்த்தால் பல முதியவர்கள் காணோம் என்று விளம்பரங்கள் கொடுத்திருப்பர். அநேகமாக இவர்கள் மறதி நோயின் தாக்கத்தினாலும் குடும்பத்தினரின் கவனிப்பின்மையாலும் தான் வெளியேறி இருக்க வேண்டும்.

நல்ல வேலையாக உங்கள் மீது அன்பை பொழிய கூடிய மகன்களும் மருமகள்களும், பேரபிள்ளைகளும் இருகின்றனர். உங்களுக்காக கவலைப்பட்டு, கண்ணீர் உகுக்கும் கணவரும் இருக்கிறார்.

நீங்கள் செய்ய வேண்டியவை எல்லாம் இது தான்.

தினமும் டைரி எழுதப் பழகுங்கள். குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை, குழந்தைகளின் விளையாட்டை நண்பர்களின் வருகையை சுவைபட எழுதுங்கள்.

உங்களின் பேரக்குழந்தைகளுக்கு பைபிளிலிருந்து அல்லது பைபிளின் போதனைகளை அடிப்படையாக வைத்துக் கதைகளை சொல்லுங்கள். உதாரணதுக்கு, அப்பம் பெருகுவது, இயேசுவின் பிரியாவிடை பிரசங்கம், பிலாத்துவின் முன்னிலையில் இயேசு பட்ட அடிகள், அவர் சீடர்களுக்கு காட்சி அளித்தல், இவைகளை எல்லாம் சுவாரஸ்யம் சேர்த்து குழந்தைகளின் மனதில் பதியும் படி செய்யுங்கள்.

பின் அவர்களுக்கு எதாவது சந்தேகமிருந்தால், கேட்கச் சொல்லுங்கள். (சந்தேகம் தெளிதல் - குழந்தைகளுக்காக மட்டுமல்ல; உங்களின் நினைவாற்றலுக்காகவும் தான்.)

வழக்கமாய் தெரிந்த தமிழ், ஆங்கில மொழிகளை தவிர புதிதாய் எதாவது மொழி கற்றுக் கொள்ள முயற்சியுங்களேன். இந்தி, பிரெஞ்சு.. எதாவது முன்னே பின்னே அறிமுகம் இல்லாத மொழியாக இருப்பின் நல்லது.

எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது "எனக்கு நியாபக மறதி, சர்க்கரை வியாதி வேற.. மருமகள் சமைக்கின்றனர்; நான் சமையலறை உள்ளேயே போவதில்லை... என்ற நினைப்பை உதறுங்கள். தினமும் சமயலறையில் உங்கள் கை பக்குவமும் இருக்கட்டும்.

பெண்களுக்கு சமையலறை பெரிய வரப்ரசாதம், அடுப்பில் சட்டியை வைத்துவிட்டு, எண்ணையை ஊற்றி, அது காயிந்துப் புகை வருவதற்குள் சுறுசுறுப்பாய், அடுக்கடுக்காய் மளிகைச் சாமான்களை எடுப்பதே உடம்புக்கும், மூளைக்கும் நல்ல வேலை தான்... சரியா?

இது உங்களுக்காக, உங்கள் கணவருக்கும் மட்டும்;  

குடும்ப ஆல்பம் இருவருக்குமாய் சேர்ந்து தயாரியுங்கள். உங்கள் திருமணத்திலிருந்து, கடைசி பேரக்குழந்தை வரையில்...

உணவு பழக்கத்தை காலையில் நாலே நாலு பாதம் பருப்பு - காபி, தேநீருக்கு முன். முட்டை, மீன் (பொரிக்காமல்) நிறைய சாப்பிடலாம். காரட், முள்ளங்கி, கீரை வகைகள் இதெல்லாம், ஆப்பிள், கொய்யா, சாத்துக்குடி என தினமும் எதாவது ஒன்றும் சாப்பிடுங்கள்.

இது எச்சரிக்கை... தங்க  நகைகளை கழற்றி பத்திரமாய் கணவரிடமோ, மருமகள்களிடமோ கொடுத்து விடுங்கள். கழுத்தில் சின்னதாய் ஒரு கயிற்றில் உங்கள் வீட்டு விலாசம் எழுதிய கார்டு இருக்கட்டும்.

இதெல்லாம் உங்களின் மறதி வளராமல் தடுக்கும்.

******************************************************************************************* 
இந்த வார பதிவு நிறைவடைகிறது.மீண்டும் சந்திக்கிறேன்...

அன்புடன் 
சமீரா

13 comments:

  1. சமையலறை குறிப்பு நல்ல யோசைனையாக இருக்கிறது. காலை வேளையில் சமையலறையில் எப்படி பம்பரமாகச் சுழலுகிறோம், இல்லையா?

    அருமையான பகிர்வு சமீரா!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அம்மா.. பல பெண்களுக்கு அது தெரிவதில்லை.. சமையல் செய்யறதில என்ன பெருமைன்னு தப்ப நினைக்கிறாங்க...
      நன்றி அம்மா!!

      Delete
  2. அனைவருக்குமே பயன்படும் பகிர்வு ஆலோசனைக்கு நன்றி..

    ReplyDelete
    Replies
    1. தொழிர்களம் குழுவிற்கு நன்றி!!

      Delete
  3. ஆலோசனைகள் எல்லோருக்கும் ஏற்றதாகவே அமைந்திருக்கிறது. பகிர்விற்கு மிக்க நன்றி

    ReplyDelete
  4. சிறந்த ஆலோசனையைப் பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி திரு.குட்டன்

      Delete
  5. அனும்மாவுக்குக் கூட இந்த ஞாபக மறதிப் பிரச்னை இருந்தது. அவங்க தானே தன்னை சரி பண்ணிக்கிட்டாங்க. அதனால இந்த அறிவுரையக் கூற அவங்க ரொம்பப் பொருத்தமானவங்கதான். அவங்க சொன்னது நிச்சயம் பலன்தரும் விஷயம் சமீரா. நல்ல பகிர்வு.

    ReplyDelete
  6. வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. ஆலோசனைகள் எல்லோருக்கும் ஏற்றதாகவே அமைந்திருக்கிறது. நன்றி சகோ.

    ReplyDelete