Ads 468x60px

Thursday, November 29, 2012

அரசியல் மொக்கைகள்!!

ஹாய்! ஹலோ!!

ஆமினா சிஸ்டர் அழைப்பின் பேரிலே உங்களையெல்லாம் ஒரு அரசியல் மொக்கை பதிவுடன் குட்டி சுவரக்கத்தை  அடுத்து, தொடர் பதிவாக நதிக்கரையில் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி!!

ஆமினா சகோதரி சூப்பர்(!) பதிவினை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்!!

குட்டியோ பெருசோ ஆனால் அது ஒரு சுவர்க்கம்... அதனால் சீரியஸ் பதிவு போட்டு ICU -கு உங்கள அனுப்ப வேண்டாம்னு ஒரு சின்ன மொக்கை மேட்டரோட வந்திருக்கேன்!!!

படிங்க! முடிஞ்சா கொஞ்சம் சிரிங்க! இன்னும் கொஞ்சம் முடிஞ்சா ஒரு பின்னோட்டம் இடுங்க.. இது என் தாழ்மையான மிரட்டல்(!).......

ஒரு நாளிதழில் தினசரி வெளியாகும் ஒரு சிறப்பு பகுதி நான் எழுதி இருப்பது. தினமும் படிக்க முடியலைன்னாலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிக்க தவற மாட்டேன். நான் படித்து ரசித்ததில்(?) கொஞ்சம் உங்களுடன் பகிர்கிறேன்....

இந்த சிறப்பு பகுதி பெயர் : டவுட் தனபாலு!! நம்ம மொக்கை அரசியல் வாதிகளின் அறிக்கைக்கு நம்ம(!) தனபாலு சார், தரும் பஞ்ச் பதில்கள் தான் இவை!!

மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம்: மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் வழங்கப்படும் மானியத்தை, நேரடியாக ரொக்கமாக வழங்கும் நடைமுறை, ஜனவரி, 1ம் தேதி அமலுக்கு வருகிறது. நேரடி பணப் பரிமாற்றம் மூலம், ஆண்டுக்கு, 3.2 லட்சம் கோடி ரூபாய், 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு பகிர்ந்து வழங்கப்படும். சராசரியாக, ஒவ்வொரு குடும்பமும், ஆண்டுக்கு, 32 ஆயிரம் ரூபாய் பெறலாம்.

டவுட் தனபாலுஇன்னும் ஒன்றரை வருஷத்துல, லோக்சபாவுக்கு தேர்தலை சந்திக்க இருக்கீங்க... ஓட்டுக்கு பணம் கொடுத்தா, கட்சி பணத்துல, "கை' வைக்கணும்கிறதால, இப்படி மானியத்தை, மக்கள் கையில ரொக்கமாவே திணிச்சி, ஓட்டு வேட்டைக்கு திட்டம் போடுறீங்களோன்னு தான், எனக்கு, "டவுட்!'

***************************************************************
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி: மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் என் முயற்சி, இப்போதைக்கு தோல்வியில் முடிந்தாலும், கொள்கையில் உறுதியாக இருப்பேன். கொள்கையில் விடாப்பிடியாக, உறுதியாக இருந்தால், போரில் வெற்றி பெற முடியும்.

டவுட் தனபாலு: மத்திய அரசை கவிழ்க்க நீங்க எடுத்த முயற்சி, முனையிலயே முறிஞ்சு போயிடுச்சு... நீங்க, உங்க கொள்கையில உறுதியா இருக்கலாம்... ஆனா, அதுக்குள்ள மத்திய அரசின் ஆயுட்காலம், தானாவே முடிஞ்சு, அடுத்த தேர்தலே வந்துடும்கிறதுல, எனக்கு, "டவுட்'டே இல்லை...!

******************************************************************
பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் தலைவர் ரங்கராஜன்: நாட்டின் நிதி நிலையில் ஏற்பட்ட நெருக்கடியை போக்கவே, மானியங்களை குறைக்கும் முயற்சி எடுக்கப்பட்டது. ஆனாலும், உணவுப் பொருட்களுக்கான மானியத்தை குறைக்க முடியாது. இந்தியா போன்ற நாடுகளில், உணவுப் பொருட்களுக்கு, முழு மானியம் அளிப்பது முக்கியம். இதனால் ஏற்படும் இழப்பை சரி செய்ய, பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியங்களை, அரசு குறைத்துள்ளது.

டவுட் தனபாலு: உணவுப் பொருட்களை ஏத்திட்டு போற வாகனங்களுக்கான டீசல் மானியத்தை குறைச்சி, உணவுப் பொருட்கள் விலை உயர்வுக்கு வழி வகுத்துட்டு, "உணவுப் பொருளுக்கு மானியம் வழங்குறோம்'னு, தலையை சுத்தி மூக்கை தொடணுமான்னு தான், எனக்கு, "டவுட்!'

**********************************************************************
இப்போ கொஞ்சம் அரசியல் சார்ந்த காமெடி கார்டூன்ஸ் பார்க்கலாம்:





இதோட மொக்கையை முடிசிகறேன்.. இல்லன்ன உங்க கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் பாவத்த நான் ஏதுக்க முடியாது!!!

நன்றி ஆமினா!!!

பின் குறிப்பு: இஸ்லாமிய பெண்மணி வலையகத்தில் கட்டுரை போட்டிகள் அறிவிப்பு வெளிவந்துள்ளது. கலந்து கொள்ள விரும்புபவர்கள் பின்வரும் லிங்க் சென்று மேலும் தகவல்களை அறிந்துகொள்ளவும்.


அன்புடன் 
சமீரா 
இன்னும் நடக்க... "அரசியல் மொக்கைகள்!!"

Wednesday, November 28, 2012

நான் ரசித்த கொரியன் படம்: "A Moment to Remember"


ஹாய் ஹலோ வணக்கம்!

திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதும் அளவுக்கு எனக்கு சினிமா ஞானம் இல்லை. அதனால் பார்த்து ரசித்து மகிழ்ந்த ஒரு கொரியன் திரைப்படத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.. 

முதலில் கொரியன் படம் பார்க்கும் ஆவல் வந்தது நம் பாலகணேஷ் சார் எழுதிய "Daisy" என்ற படத்தின் பதிவு படித்ததும் தான்! பின் அந்த படத்தில் ஹீரோ-வை பிடித்துவிட்டதால் மேலும் அவரின் படங்கள்  தேடி பிடித்து பார்த்தேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்தது, கரைத்தது "A Moment To Remember" என்ற இந்த படம் தான்.


இந்த படத்தை டைரக்ட் செய்திருப்பவர் லீ- ஜே -ஹன் (Lee -Jae - Han), ஹீரோ ஜுங்- வூ-சங் (Jung -Woo -Sung ), ஹீரோயின் சன்-யே-ஜின் (Son Ye-jin) 

2004-இல் வெளிவந்த இந்த படம் " முழுக்க முழுக்க காதல் மற்றும் குடும்ப வாழ்கையை" சித்தரிக்கிறது. கணவன் மனைவிக்கு இடையிலான ஒரு ஆழ்ந்த புரிதல் மற்றும் அன்பினை எடுத்து கூறுகிறது. 

கதை சுருக்கம்: காதலில் தோல்வியுற்று வீட்டிற்கு திரும்பும் ஹீரோயின் கிம்-சுஜி, முதன் முதலில் ஹீரோ சோல்-சூ- வை ஒரு பல்பொருள் அங்காடியில் சந்திக்கிறார்.  தன்னுடைய பெப்சி-யை கடையில் மறந்து வைத்துவிட்டு ஹீரோ-வின் கையில் இருக்கும் பெப்சி கேனை, தன்னுடையது என நினைத்து பிடுஞ்சி ஒரு மடக்கில் குடித்து கேனை வீசி எறிகிறார். பின்தான் தெரியவருகிறது அவருடையது கடைக்குள்ளேயே இருப்பது! இதுதான் அறிமுகம்!!

கிம் சுஜியின் அப்பா ஒரு கட்டிட பொறியாளர். அம்மா தங்கை என அளவான குடும்பம். காதலனை நம்பி வீட்டை விட்டு வெளியேறி அவன் முன்னமே திருமணம் ஆனவன் என உண்மை தெரிந்து, அவன் மனைவியால் விரட்டி அடிக்கபடுகிறார். அப்படி திரும்பும் மகளை ஆதரவுடம் அனைத்து தேற்றும் குடும்பம் அவளுடையது!

சிறு வயதில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பின்றி தான்தோன்றியாக வாழும் கதாநாயகன் சோல்-சூ. அவனிடம் உள்ள ஒரு முரட்டு சுபாவம், மரவேலையில் அவனின் கை வேலைப்பாடு இரண்டுமே அவனின் பலம்.

இந்த முரட்டு வாலிபனை கிம் சூ மீண்டும் சந்திப்பது தன் அப்பாவின் கட்டிட பணியில் வேலைசெய்யும் கார்பெண்டராக! ஆனால் சோல்-சூ வை சந்திக்கும் கிம்-சுஜி முதலில் எங்கே பார்த்தோம் இவனை என்றே விளங்கவில்லை. பின்னர் தெரிந்து கொண்டு பழக ஆரம்பிக்கிறார். அவனை பார்பதற்கு என்றே அவனிருக்கும் இடத்திற்கு தற்செயலாக வருவது போல் வந்து அவனின் நட்பை பெறுகிறாள்.

இதன் பின்னர் சோல்-சூ கட்டிட கல்வியில் பட்டம் வாங்குகிறார். அவர்களின் நட்பு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து காதலாகி கசிந்துருகுகிறது! 

கிம்-சூ தன் காதலை பெற்றோரிடம் சொல்லும் போது இயல்பாக ஒரு எதிர்ப்பும் பின் மகளுக்காக மனம் மாறி திருமணம் முடிவாகிறது!!

திருமணதிற்கு பின்பான கதையே இந்த படத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. முன்னால் காதலனின் மனைவியால் தாக்கப்படும் கிம்-சுஜி  Alzheimer's disease- எனும் மறதி நோயிக்கு ஆளாகிறார். இதனால் அவரின் வாழ்கையில் சந்திக்கும் இடர்பாடுகளை தெளிவாக ஆழமாக சொல்லப்பட்ட விதம் அருமை! தன்னையே மறக்கும் நிலைக்கு தள்ளப்படும் கதாநாயகி தன் காதல் கணவனை மறக்கும் ஆபாயதிற்கு  அஞ்சி எடுக்கும் முடிவு கலங்க வைக்கிறது. 


நம் கதாநாயகன் தன் காதல் மனைவியை எப்படியெல்லாம் தேற்றுகிறார். கிம்-சுசிக்காக அவர் செய்யும் ஆதரவான செயல்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. உண்மையான காதல் கல்யாணத்துடன் முடிவதில்லை அது காலமெல்லாம் தொடர்ந்து வருவது; எந்த ஒரு சூழ்நிலையிலும் கைவிடாதது என்பதற்கு இந்த படம் தக்கதொரு எடுத்துக்காட்டு!!

குடும்ப உறவுகள் நலிவுற்று இருக்கும் இந்த காலகட்டத்தில், மனைவியின் நோயினை பெரிதாக கருதாமல் அதை சமாளிக்கு வகையை எடுத்துசொல்லி மனைவியை தேற்றுவது ரசிக்கவைக்கிறது. அவன் காதலின் ஆழத்தை அது வெளிபடுத்துகிறது. 

அடிதடிகள் நிறைந்த பிறமொழி படங்களையே பார்த்து போரடித்த நமக்கு இது போன்ற ஒரு வித்யாசமான குடும்ப கதை நிச்சயம் ஈர்ப்பதில் சந்தேகமில்லை!! 

நேரம் கிடைக்கும் போது இந்த படத்தை பார்த்து ரசியுங்கள்!!!



படத்தின்  லிங்க் உங்களுக்காக:
http://www.youtube.com/watch?v=e0D5aHNMAuY 

அன்புடன் 
சமீரா.

இன்னும் நடக்க... "நான் ரசித்த கொரியன் படம்: "A Moment to Remember""

Saturday, November 17, 2012

நந்தவனம் - அன்புடன் அந்தரங்கம் - 3


ஹாய் வணக்கம்!! 

தீபாவளிக்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி!!

 இந்த வார வாசகர் கடிதம் படிக்க தொடங்கும் போதே எனக்கு சட்டென நினைவுக்கு வந்தது "A Moment to Remember" என்ற கொரியன் படம் தான். 2004-இல்  வெளியான இந்த படத்தில் கதையாக்கபட்ட கரு தான் இப்போது நான் எழுதும்  வாசகரின் கடிதமும்!! படம் பார்த்த போது இப்படியெல்லாம் கூட மறதி சாத்திமா என நினைத்தேன்; இந்த கடிதம் படித்ததும் தான்  முழுமையாக நம்பிக்கை  வந்தது. இதே போல ஒரு ஆங்கில திரைப்படம் கூட வந்துள்ளது.

இப்போது வாசகர் கதை சுருக்கத்தை பார்போம்:- (22/02/2009  - வாரமலர் இதழில் வெளியானது)

58 வயதை கடக்கும் ஒரு முதிய பெண்மணி, கணவர், நான்கு மகன்கள் மருமகள்கள் பேரபிள்ளைகள் என எந்த குறையும் இல்லாமல் வாழ்பவர். அவருக்கு சமீபகாலமாக மறதியால் அவதி படுகிறார். சர்க்கரை நோயாளியான அவர் மறதி சகஜம் என நினைத்துள்ளார். நாட்கள் ஆக ஆக மறதியின் அளவு அதிகரித்துள்ளது.. தன் வீட்டிற்கான வழி முகவரி மறக்கும் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதுமட்டும் இல்லாமல் தன் கணவர் மகன்கள், வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கை மறக்கும் அளவிற்கு வந்துள்ளது. 

தினமும் படிக்கும் பைபிள் வரிகளில் உள்ள நினைவு, தான் காலை என்ன சாப்பிட்டோம் என்பதில் இல்லை. பள்ளி ஆசிரியாராக இருந்து ஒய்வு பெற்றவர் இந்த பெண்மணி. தன் மறதியை போக்க, சமாளிக்க அனு அம்மாவிடன் ஆலோசனை கேட்டுள்ளார்.

இனி அனு அம்மாவின் பதில் கடிதத்தை பார்போம் :-

அன்பு சகோதரிக்கு,

வயதாகும் போது நினைவாற்றல் குறைவதும் மூளையின் வேலைப்பாடுகள் செயலிழப்பதும் இயற்கை தான். அதுவும் சர்க்கரை நோயின் பக்க விளைவு என்று தான் சொல்ல வேண்டும்.

இன்றைக்கும் கூட செய்தித்தாள்களில் பார்த்தால் பல முதியவர்கள் காணோம் என்று விளம்பரங்கள் கொடுத்திருப்பர். அநேகமாக இவர்கள் மறதி நோயின் தாக்கத்தினாலும் குடும்பத்தினரின் கவனிப்பின்மையாலும் தான் வெளியேறி இருக்க வேண்டும்.

நல்ல வேலையாக உங்கள் மீது அன்பை பொழிய கூடிய மகன்களும் மருமகள்களும், பேரபிள்ளைகளும் இருகின்றனர். உங்களுக்காக கவலைப்பட்டு, கண்ணீர் உகுக்கும் கணவரும் இருக்கிறார்.

நீங்கள் செய்ய வேண்டியவை எல்லாம் இது தான்.

தினமும் டைரி எழுதப் பழகுங்கள். குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை, குழந்தைகளின் விளையாட்டை நண்பர்களின் வருகையை சுவைபட எழுதுங்கள்.

உங்களின் பேரக்குழந்தைகளுக்கு பைபிளிலிருந்து அல்லது பைபிளின் போதனைகளை அடிப்படையாக வைத்துக் கதைகளை சொல்லுங்கள். உதாரணதுக்கு, அப்பம் பெருகுவது, இயேசுவின் பிரியாவிடை பிரசங்கம், பிலாத்துவின் முன்னிலையில் இயேசு பட்ட அடிகள், அவர் சீடர்களுக்கு காட்சி அளித்தல், இவைகளை எல்லாம் சுவாரஸ்யம் சேர்த்து குழந்தைகளின் மனதில் பதியும் படி செய்யுங்கள்.

பின் அவர்களுக்கு எதாவது சந்தேகமிருந்தால், கேட்கச் சொல்லுங்கள். (சந்தேகம் தெளிதல் - குழந்தைகளுக்காக மட்டுமல்ல; உங்களின் நினைவாற்றலுக்காகவும் தான்.)

வழக்கமாய் தெரிந்த தமிழ், ஆங்கில மொழிகளை தவிர புதிதாய் எதாவது மொழி கற்றுக் கொள்ள முயற்சியுங்களேன். இந்தி, பிரெஞ்சு.. எதாவது முன்னே பின்னே அறிமுகம் இல்லாத மொழியாக இருப்பின் நல்லது.

எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது "எனக்கு நியாபக மறதி, சர்க்கரை வியாதி வேற.. மருமகள் சமைக்கின்றனர்; நான் சமையலறை உள்ளேயே போவதில்லை... என்ற நினைப்பை உதறுங்கள். தினமும் சமயலறையில் உங்கள் கை பக்குவமும் இருக்கட்டும்.

பெண்களுக்கு சமையலறை பெரிய வரப்ரசாதம், அடுப்பில் சட்டியை வைத்துவிட்டு, எண்ணையை ஊற்றி, அது காயிந்துப் புகை வருவதற்குள் சுறுசுறுப்பாய், அடுக்கடுக்காய் மளிகைச் சாமான்களை எடுப்பதே உடம்புக்கும், மூளைக்கும் நல்ல வேலை தான்... சரியா?

இது உங்களுக்காக, உங்கள் கணவருக்கும் மட்டும்;  

குடும்ப ஆல்பம் இருவருக்குமாய் சேர்ந்து தயாரியுங்கள். உங்கள் திருமணத்திலிருந்து, கடைசி பேரக்குழந்தை வரையில்...

உணவு பழக்கத்தை காலையில் நாலே நாலு பாதம் பருப்பு - காபி, தேநீருக்கு முன். முட்டை, மீன் (பொரிக்காமல்) நிறைய சாப்பிடலாம். காரட், முள்ளங்கி, கீரை வகைகள் இதெல்லாம், ஆப்பிள், கொய்யா, சாத்துக்குடி என தினமும் எதாவது ஒன்றும் சாப்பிடுங்கள்.

இது எச்சரிக்கை... தங்க  நகைகளை கழற்றி பத்திரமாய் கணவரிடமோ, மருமகள்களிடமோ கொடுத்து விடுங்கள். கழுத்தில் சின்னதாய் ஒரு கயிற்றில் உங்கள் வீட்டு விலாசம் எழுதிய கார்டு இருக்கட்டும்.

இதெல்லாம் உங்களின் மறதி வளராமல் தடுக்கும்.

******************************************************************************************* 
இந்த வார பதிவு நிறைவடைகிறது.மீண்டும் சந்திக்கிறேன்...

அன்புடன் 
சமீரா
இன்னும் நடக்க... "நந்தவனம் - அன்புடன் அந்தரங்கம் - 3"

Saturday, November 10, 2012

நந்தவனம்: அன்புடன் அந்தரங்கம்-2


ஹாய் வணக்கம்!!!

சென்ற வார பதிவு படிக்க இங்கே கிளக் செய்யுங்கள்!

தன் கல்லூரி மற்றும் இளவயதில் செய்த தவறினை மறக்க அனு அம்மாவிடம் ஆலோசனை  கேட்ட நடுத்தர வயதை தாண்டிய ஒரு பெண்மணியின் கடிதத்தை இன்று பார்போம்:-

வாசகரின் கடித சுருக்கம்:(15-09-2009- அன்று வாரமலரில்  வெளியானது)

கல்லூரி நாட்களின் அவருக்கும் ஒரு காதல்(?) மலர்ந்துள்ளது. பிறகு  சொந்த தமக்கையின் கணவரு
டனும், வேலைபார்த்த இடத்தில் நட்பாக கிடைத்த ஒரு நபருடனும் மேலும் எதிர் வீட்டில் நட்பை காட்டிய ஒருதனுடன் அந்த பெண்மணி தன்னையே ஒப்புவித்து இருக்கிறார். பின் இந்த நான்கு பேருடனான தொடர்பு ஒவ்வொரு சந்தர்பத்தில் அறுந்து இருக்கிறது. 


இந்த நிலையில் அவரின் உடன்பிறந்தோர் ஒரு வரனை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர். தற்போது (2009) அவருக்கு இரண்டு பள்ளிபருவ
த்தை கடக்கும் முத்தான குழந்தைகள், அன்பு மழையில் நனைய வைக்கும் கணவர்; பெற்றோர் போல அன்பை கொடுக்கும் மாமனார் மாமியார் இருகின்றனர்.

அவருக்கு இதுவே ஒரு உறுத்தல் ஆகிவிட்டது. இப்படிப்பட்ட கணவனுக்கு தான் தகுதி அற்றவள் என்ற எண்ணம் வந்துவிட்டது. இதன் காரணமாக தன் கணவனையும் அவர் பெற்றவர்களையும் நன்கு கவனித்துகொ
ள்கிறார். இருந்தாலும் அவரின் கடந்த கால உறுத்தலில் இருந்து தப்ப முடியவில்லை. இதற்காக அனு அம்மாவிடம் அவர் யோசனை கேட்டு எழுதி இருக்கிறார்.


அனு அம்மாவின் பதில் கடிதம்:

அன்புள்ள மகளுக்கு உன் கடிதம் கிடைத்தது. ஏதோ ஒருவருடன் அறியா பருவத்தில் தவறி இருக்கலாம். வளர்ந்து வேலைக்கு போகும் வயதில் ஒருவருக்கு நால்வரிடம் உன்னை இழந்து விட்டாய். ஆனாலும் உனக்கு நல்ல குழந்தை கணவர் மாமியார் மாமனார் கிடைதிருக்கின்றனர் என்றால் உண்மையில் கடவுளுக்கு உன் மீது கருணை தான்.

ஆனால் இதயம் என்பது நீ நினைப்பது போல கரும்பலகை அல்ல, முதலில் எழுதியவைகளை அடியோடு அழிபதற்க்கு! 

கொஞ்சம் யோசித்து பார், இப்போது நீ செய்த குற்றம் உன்னை அறுகிறது என்றால் காரணம் என்ன? எதிர்பாராத விதமாக உன் வாழ்க்கை சொர்க்கமாக அமைந்துவிட்டதால் தானே!

இதுவே உன் கணவர் பொல்லாதவராய் இருந்து அடியும் உதையுமாய் வாழ்க்கை நரகமாகி இருந்திருந்தால் பழைய வாழ்க்கை உறுத்தாது. மாறாக மேலும் மேலும் கண்ட சகதியில் விழுந்து, இது தான் சுகம் என்று நினைக்க தோன்றும். நான் செய்வது குற்றமே இல்லை; கடவுள் இப்படி ஒரு புருஷனை கொடுத்துவிட்டால் நான் என்ன செய்வது என எதிர் குரல் கொடுத்திருப்பாய்.

அதிக அன்பும் ஒரு சிறை தான். பாசத்தில் சிக்குண்டு "ஐயோ, இத்தகைய உத்தமருக்கு துரோகம் செய்துவிட்டோமே"... என்று உன்னை நீயே அலசி, உள்ளத் தூய்மைக்கு  ஏங்குகிறாய் பார்... இது தான் கடவுள் உனக்கு அளித்துள்ள தண்டனை!

பிராயசித்தம் என்று எதை நீ செய்தாலும் உன் குற்ற உணர்வு மறையபோவதில்லை.மாறாக உன் கணவனுடனும் அவரை சார்ந்தவர்களிடமும் உள்ளத் தூய்மையுடன் நடந்து கொள். 

ஏதோ நடந்தவை எல்லாம் திருமணதிற்கு முன்பே நடந்து விட்டதே! இனி கணவருக்காக மட்டும் நான் என்று வாழ்த்து வருகிறாயே... அதற்கு கடவுளிடம் நன்றி சொல். 

இதையே நினைத்து கொண்டிருக்காதே; நல்ல விஷயங்களில் மனதை செலுத்து. முடிந்தால், உனக்கு தெரிந்த திருமண வயதில் இருக்கும் பெண்களுக்கு வரன் தேடித் தா.  உன்னைப்போல வேறு ஒரு பெண்ணுக்கும் இதுபோன்ற விபத்து வாய்க்காமல்  இருக்க உதவும். இலவச திருமண மையம் வேண்டுமானாலும் நடத்து. இதெல்லாம் உன் ஆத்மா திருப்திக்காக தான். "ஆஹா! நாமக்கும் இதெல்லாம் செய்கிறோம் என ஒருநாளும் கர்வபடாதே!" 



கல்யாணம் ஆகி பிள்ளை பெறுவதுடன் ஒரு பெண்ணின் வாழ்கை பூரணமடைந்து விடுவதில்லை. எஞ்சிய நாட்களை நல்ல எண்ணத்துடனும் வலிய போய் உதவுவதிலும், மற்ற
ரின் மன ரணத்தை ஆற்றுவதிலும் நிறைவு பெற முடியும்.

யார் வந்த பாதையை திரும்பி பார்கிறார்களோ அவர்களை கடவுள் ஒருநாளும் கைவிடுவதில்லை. வாழ்த்துக்கள்!!

இத்துடன் இந்த வார பகுதி நிறைவடைகிறது.

*****************************************************************

இளமையில் தவறுதல் ஏற்படுவது 
சில நேரங்களில் சகஜம் தான். ஆனால் அதை ஒரு கசப்பான அனுபவமாக கொண்டு, பிற்காலத்தில் சமயோசித புத்தியுடன் நடந்து கொள்ள வேண்டும். "சூடு கண்ட பூனை அடுபண்டை செல்லாது" என்பது பழமொழி.. இது எக்காலத்திற்கும் பொருந்தும்!!

நட்பு எ
ன்பது புனிதமான உணர்வு. அது மன கவலைகளையும் ரணங்களைகும் ஆற்றும் அரு மருந்து.. அதை சரியான முறையில் சாப்பிட்டால் குணமாகும், முறை தவறி உட்கொண்டால் அதுவே நஞ்சாகும்!!! நஞ்சாக்குவதும், நலமாக்குவதும் நம்மிடம் தான் உள்ளது!!

மீண்டும் ஒரு புது பதிவுடன் அடுத்தவாரம் சந்திக்கிறேன். நன்றி!!!


அனைவருக்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!



அன்புடன்
சமீரா.
இன்னும் நடக்க... "நந்தவனம்: அன்புடன் அந்தரங்கம்-2 "

Saturday, November 3, 2012

நந்தவனம்: அன்புடன் அந்தரங்கம் - 1


ஹாய் வணக்கம் !

உங்களை இந்த தொடர் மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். எழுத்தாளர் அனுராதா ரமணனின் சமூக அக்கறை மற்றும் அவரின் வழிகாட்டுதல் பற்றி பால கணேஷ் சார் இந்த பதிவில் குறிபிட்டுள்ளார். சென்ற வாரம் நான் குறிப்பிட்டதை போல அவர் வாரமலரில் தொடர்ந்து எழுதிய பகுதி அன்புடன் அந்தரங்கம்! அப்பகுதியை வார  வாரம் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி!!

************************************************************

வாசகரின் கடித சுருக்கம்:(28-12-2008- அன்று வாரமலரில்  வெளியானது)

நெய்வேலியை சேர்ந்த 33 வயதுள்ள இஞ்சினியர் சென்னையை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர் மனைவி பிரசவத்திற்காக தன் பாட்டி வீடான சென்னைக்கு வந்துள்ளார். பெண் குழந்தை பிறந்து பல மாதங்கள் ஆகியும் நெய்வேலி திரும்பவில்லை. அவளின் தாயார்,  அவள் சிறு வயதாக இருக்கும் போதே கணவரிடமிருந்து பிரிந்து அவளின் தாத்தா பாட்டியுடன் இருப்பவர். இந்த பிரிவால் அவர் ஹிஸ்டீரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவளின் ஒரு சித்தியும் திருமணம் செய்துகொள்ளாமலே உள்ளார்.

இந்த நிலையில் அவளின் பாட்டி, தன் பேத்தி மற்றும் அவளின் மகளையும் கணவனுடன் சேர்ந்து வாழவிடாமல் தன்னுடனேயே வைத்திருக்க முயற்சி செய்துள்ளார். ஒரு முறை கணவன் மனைவியை பார்க்க வந்து செல்லும் போது பாட்டி இடையில் புகுந்து கலகம் செய்ய, கோவத்தில் தன் மனைவியை அடித்துவிடுகிறார். இதையே காரணமாக வைத்து, விவாகரத்து வழக்கு தொடரபடுகிறது... இதில் கணவனுக்கு சிறிதும் விருப்பம் இல்லை. மனைவியோ பாட்டி சொல்கேட்டு ஆடுகிறாள். இந்நிலையில் அந்த கணவன் அனு அம்மாவிடம் ஆலோசனை கேட்டுள்ளார். அவரின் அறிவுரை, ஆலோசனை பின்வருமாறு:-

அனு அம்மாவின் பதில்(வார்த்தை மாறாமல் உங்களுக்காக): 

அன்புள்ள மகனுக்கு,

"தன் பேத்தியின் எதிர்காலத்தை பாட்டியே சீர்குலைப்பது கண்டு வருத்தபடுகிறேன்.
எனகென்னவோ உன் மாமியாரை கூட இப்படித்தான் எதையாவது சொல்லி அவர் மாப்பிள்ளையிடமிருந்து பிரிந்திருப்பார் என்று  தோன்றுகிறது. என்னதான் அம்மா பேச்சை கேட்டு, கணவனை பகைத்துக்கொண்டு இருந்தாலும், உன் மாமியாருக்கு உள்ளூர ஒரு குற்ற உணர்வு இருக்கவேண்டும்; அதனால் தான் ஹிஸ்டீரியா நோய் தாக்கி உள்ளது.

அதுமட்டும் அல்ல உன் மாமியாரின் தங்கை திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதற்கு தன் தாயாரின் மனபோக்கும் காரணமாக இருக்கலாம்.

நீ உன் மனைவியை அவளின் பிறந்த வீட்டிற்க்கு சென்று பார்க்காதே; அவளின் அலுவலகம் சென்று பார்த்து கொஞ்சம் கனிவோடு பேசு. அன்றைக்கு அவளை அடித்தது கூட அடிக்கவேண்டும் என்று எண்ணமில்லை; பாட்டியின் குறுக்கீட்டால் வந்த ஆத்திரம்; என்ன செய்வது... வயதில் பெரியவரை அடிக்க முடியுமா?  அதனால் தான் அப்படி... என விளக்கமாகச் சொல்.

விவாகரத்தில் உனக்கு இஷ்டமில்லை என்பதையும், அவள் மீதும் குழந்தை மீதும் நீ உயிரையே வைத்திருப்பதாக அவளிடம் புரியும்படி சொல். உன் அம்மா மாதிரி நீயும் வீட்டுக்குள் அடைந்து கிடந்தது மன நோயாளி ஆகாதே! அப்புறம் நம் மகளுக்கும் அந்த நிலை தொடரும்.. இது தேவையா.. என அன்பொழுக கேள்!

அல்வாவும் பூவும் வாங்கி கொண்டு உன் மனைவி பிறந்த வீட்டில் நாற்காலியில் நடுக்கூடத்தில் உட்கார்ந்தால், வார்டன் போல பாட்டி எதையாவது சொல்லி விரட்டி தான் அடிப்பார். அவருக்கு என்னவோ தான் பெற்ற பிள்ளைகளையும் பேத்தியையும் அவரவர் கணவர்களுடன் கூட பகிர்ந்துகொள்ள முடியாதபடி ஏதோ ஒரு அவஸ்தை. விடு.

நீ காதல் செய்! என்ன அதிர்ச்சியாக உள்ளதா? உன் மனைவியை தான்!  ஆனாலும், திருட்டுத்தனமாய் ஆபீசிலும், கோவிலிலும், கடற்கரையிலும் சந்தித்து உங்கள் இருவரிடையேயும் காதலை வளர்த்து கொள்.

திருமணமான முதல் வருடமே வயிற்றில் குழந்தையுடன் அவள் தாய் வீட்டிற்க்கு வந்து விட்டாள். உன்னை பற்றியும் உன் அன்பை பற்றியும் தெரிந்து கொள்ள அவளுக்கு எங்கே நேரம்? மனைவியானாலும் திருட்டுத்தனமாய் சந்தித்து பேசுவதில் சுகம் கண்டிப்பாக உண்டு.

கணவனின் அன்பான வார்த்தைகளும் கனிவான பார்வையும் வேண்டாம் என சொல்கின்ற பெண்களே கிடையாது.

முதலில் உன் மனைவியின் மனதில் இடம் பிடித்து விட்டால், மகளின் பாசத்தை பெறுவது பெரிய விஷயமில்லை. குழந்தையும் தெய்வமும்  கொண்டாடுகின்றவரின் மடியில் வந்து உட்காரும்..

உன் மனைவியின் வாயாலேயே வக்கீல் நோட்டீஸ்-சை திரும்பப் பெறச் செய்யச் செய்வது உன் சமார்த்தியத்தில் தான் இருக்கிறது."

கண்டிப்பாய் வெற்றி பெறுவாய்!  என் வாழ்த்துக்கள்!!

***********************************************************

இந்த வார கட்டுரை நிறைவடைகிறது. சுய புத்தியுடன் உண்மையான அன்பை புரிந்து கொண்டால் வாழ்வில் துன்பம் என்பது இல்லை...

அடுத்தவாரம் மீண்டும் சந்திக்கிறேன். நன்றி!!!

அன்புடன்
சமீரா

இன்னும் நடக்க... "நந்தவனம்: அன்புடன் அந்தரங்கம் - 1"